Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் ஜெயலலிதாவின் அண்ணன்..எனக்கு சொத்தில் பங்கு வேண்டும்..ஹைகோர்டில் முதியவர் வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறி, அவரது சொத்தில் பாதியை தனக்கு வழங்க வேண்டும் என்று தீபா, தீபக்கிடம் பங்கு கேட்டு பெங்களூருவைச் சேர்ந்த 83 வயது முதியவர் ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளார். அவரது மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு கோடிக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. திரைப்படங்கள் நடித்த போது போயஸ்கார்டனின் அவரது தாயார் பெயரில் வாங்கிய நிலத்தில் பிரம்மாண்டமாக வீடு கட்டினார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக அதிமுகவின் பொதுச்செயலாளராக திகழ்ந்தார் ஜெயலலிதா.

I am Jayalalithas brother I want share in property man case in high court

அவரது மறைவிற்குப் பிறகு அவரது வீடும், சொத்துக்களும் யாருக்கு சொந்தமாகும் என்ற கேள்வி எழுந்தது. ஜெயலலிதாவின் வீட்டினை அரசு கையகப்படுத்தும் என அப்போதைய அதிமுக அரசு கூறியது. இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகள் தீபாவும் தீபக்கும் சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சொத்துகளுக்கு சட்டப்படியான வாரிசுகள் என அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன்ஜெ.தீபக் ஆகியோரை அறிவித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் சகோதரர் என்று கூறி, பெங்களூருவைச் சேர்ந்த என்.ஜி.வாசுதேவன்(83) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், எனது தந்தை ஆர்.ஜெயராமுக்கு இரு மனைவிகள். முதல் மனைவி ஜெயம்மாவுக்கு நான் ஒரே மகன். இரண்டாவது மனைவி வேதவல்லிக்கு ஜெயக்குமார், ஜெயலலிதா என இருவர் பிறந்தனர். இந்த வகையில் ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும் என்னுடைய ஒன்றுவிட்ட சகோதர, சகோதரி ஆவார்கள்.

கடந்த 1950ஆம் ஆண்டில் எனது தந்தையிடம் ஜீவனாம்சம் கோரி மைசூரு நீதிமன்றத்தில் எனது அம்மா ஜெயம்மா தொடர்ந்தவழக்கில் வேதவல்லி, ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
ஆனால் அந்த வழக்கு சமரசமாகி விட்டது.

ஜெயலலிதாவின் அண்ணன் என்ற முறையில் நான்தான் நேரடி வாரிசு. எனவே, ஜெயலலிதாவின் சொத்துகளில் 50 சதவிகிதத்தை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீபா, தீபக் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரி இருந்தார். இந்த வழக்கு காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டதால், இதை விசாரணைக்கு ஏற்பது குறித்த விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளமாஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தீபா, தீபக்குக்கு மாஸ்டர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்திருந்தது. இருவரும் பதில் அளிக்காத நிலையில், வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வாசுதேவன் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் மகள் என்று கூறி ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறி சொத்துக்களில் பங்கு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் ஒரு முதியவர். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கட்சியிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சொத்துக்களிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+