Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடற்கரையில் புதைக்க விட்டதே தப்பு.. கடலுக்குள் கருணாநிதி பேனா சின்னம் வைத்தால் உடைப்பேன்- சீமான்

பேனா நினைவுச்சின்னம் வைப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை என்று கூறிய சீமான் கடலுக்குள் பேனா வைத்தால் உடைப்பேன் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் வைப்பதை நான் எதிர்க்கவில்லை ஏற்றுக்கொள்கிறேன் என்று சீமான் கூறியுள்ளார். அதே நேரத்தில் பேனாவை கடலுக்குள் வைப்பதைத்தான் வன்மையாக நான் கண்டிக்கிறேன் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அதை பார்வையிடப்போகும் பார்வையாளர்கள் பிளாஸ்டிக் குப்பைகளை போடுவார்கள். அது சுற்றுச்சூழலுக்கு கேடு தரக்கூடியது. நீங்கள் பேனா வைத்தால் நான் அதை உடைப்பேன் என்றும் கூறியுள்ளார்.

கருணாநிதி நினைவிட பேனா நினைவுச் சின்னம் குறித்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மீனவர் சங்கத்தினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

I am not against putting pen memorial to Karunanidhi opposed to putting pen in the sea says Seeman

திமுக கட்சியை சேர்ந்தவர்கள், கூட்டணி கட்சிக்காரர்கள், அதிமுக, நாம் தமிழர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர். அப்போது, பேனா நினைவு சின்னம் வேண்டும் என்பவர்களும், வேண்டாம் என்பவர்களும் அதற்கான காரணங்களை கூறி மேடையில் நின்று பேசினர்.

கருணாநிதி நினைவாக அமைக்கப்படவுள்ள பேனா நினைவு சின்னம் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. நினைவு சின்னத்துக்கு எதிர்ப்பும், ஆதரவுமாக பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்தனர். முதலில் நினைவு மண்டபம் என்று கூறி விட்டு, பிறகு பேனா நினைவு சின்னம் அறிவிப்பை 110 விதியின்கீழ் அறிவித்தார்கள், இதிலேயே முரண்பாடு உள்ளது என ஆம் ஆத்மி கட்சி கூறியது. கடற்கரைக்கும், நினைவு சின்னத்துக்கும் இடையிலான 350 மீட்டர் பாலம் வீணை போன்ற வடிவில் அமைக்கப்படும் என்கிறார்கள். தமிழுக்கு முக்கியத்துவம் என்று சொல்லி விட்டு கர்நாடக இசையை நினைவு படுத்தும் வீணை எதற்கு? என்றும் ஆம் ஆத்மி கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

நினைவு சின்னம் வேண்டாம் என்று பேசியவர்களை பேச விடாமல் கீழே இருந்த திமுகவினர் மிரட்டும் தொனியில் சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது, கடலுக்குள் நினைவு சின்னம் அமைக்க வேண்டுமானால் அந்த இடத்தில் கற்களையும் மண்ணையும் கொட்ட வேண்டும். அதனால் ஏற்படும் அழுத்தத்தால் பவளப்பாறைகள் பாதிக்கப்படும். பள்ளிக்கூடங்களை சீரமைக்க பணம் இல்லை பேனா சின்னத்துக்கு எங்க இருந்து காசு வருது. பேனா சின்னம் வைக்கக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. அறிவாலயத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், கடலில் வைப்பதை அனுமதிக்க முடியாது என்று பேசினார் அப்போது திமுகவினர் ஒன்று திரண்டு சீமானுக்கு எதிராக கூச்சலிட்டனர்.

I am not against putting pen memorial to Karunanidhi opposed to putting pen in the sea says Seeman

உங்களுக்கு எதை பத்தியும் கவலை இல்லை. உங்களை கடற்கரையில் புதைக்க விட்டதே தப்பு; நீ பேனாவை வை, ஒருநாள் நான் வந்து உடைப்பேன் என்று ஆவேசமாக பேசினார். சீமானின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ட்விட்டரில் #கடலில்பேனா வேண்டாம் என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

கூட்டத்திற்குப் பின்னர் வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் வைப்பதை நான் எதிர்க்கவில்லை ஏற்றுக்கொள்கிறேன். அதே நேரத்தில் பேனாவை கடலுக்குள் வைப்பதைத்தான் வன்மையாக நான் கண்டிக்கிறேன். கடலுக்குள் பேனா வைப்பது சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். கடலுக்குள் போய் யாராவது பேனா சின்னம் வைப்பார்களா? கடலுக்குள் அரை ஏக்கர் அளவிற்கு எடுத்து கல்லையும் மண்ணையும் கொட்டி பேனா நினைவுச்சின்னம் வைக்கப்போகிறார்கள். அதை பார்வையிடப்போகும் பார்வையாளர்கள் பிளாஸ்டிக் குப்பைகளை போடுவார்கள். அது சுற்றுச்சூழலுக்கு கேடு தரக்கூடியது.

ஏற்கனவே இந்திய நிலப்பரப்பு அளவிற்கு நம்முடைய கடலுக்குள் குப்பைகள் நிறைந்துள்ளது. கடல் வாழ் உயிரினங்கள் திமிங்கலம் உள்ளிட்ட உயிரினங்கள் செத்து கரை ஒதுங்குகின்றன. இந்த சூழலில் எழுதாத பேனாவிற்கு கடலுக்குள் சிலை வைக்கப்போகிறார்கள். அதை அறிவாலயத்தில் வைக்கலாமே?யார் கேட்கப்போகிறார்கள் என்றும் சீமான் தெரிவித்தார். கருத்துக்கேட்பு கூட்டம் என்று கூறி விட்டு சுதந்திரமாக பேச விடாமல் கூச்சல் போடுவதாகவும் சீமான் குற்றம் சாட்டினார்.

கடலில் நினைவுச் சின்னம் வைத்தால் பவளப்பாறைகள் பாதிக்கப்படும் பேனா சிலை கடலில் வைக்க முற்பட்டால், அதனை தடுத்து நிறுத்தும் வரை கடுமையாக போராடுவேன் என்றும் சீமான் கூறினார். பேனாவை வைத்தால் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படும், மீனவ மக்கள் பாதிக்கப்படுவார்கள். மக்கள் வரிப்பணத்தில் ஏற்கனவே மெரினாவை சுடுகாடாக்கி நினைவிடங்களை கட்டிவிட்டீர்கள் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்துத் துறை பங்களிப்புக்காக தமிழ்நாடு அரசுசார்பில் அவருக்கு மெரினாவில் பேனா வடிவிலான நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை இந்த நினைவுச் சின்னத்தை அமைக்க உள்ளது.

பேனா நினைவு சின்ன பீடமானது 2,263 சதுர மீட்டர், நடைபாலமானது 2,073 சதுர மீட்டர், பின்னல் நடைபாலமானது 1856 சதுர மீட்டர் பரப்பளவில் என அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 8,551 சதுர மீட்டர் பரப்பளவில் கருணாநிதிக்கான பேனா நினைவு சின்னம் எழுப்பப்படுகிறது.

இந்த நினைவுச் சின்ன பீடத்தில் கருணாநிதியின் பொன்மொழிகள் இடம்பெறும். கருணாநிதியின் நினைவிடத்தின் உள்ளே இருந்து கடலின் மேல் 360 மீட்டர் தூரம் நடந்து சென்று பேனா நினைவுச் சின்னத்தை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பாலம் அமைக்கப்பட உள்ளது. ரூ.81 கோடியில் பொதுப்பணித் துறையால் அமைக்கப்படும் .

இந்த நினைவுச் சின்னம் முழுவதுமே கடலில் அமைய உள்ளது. ஆகையால் முறைப்படி கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிப்படி அனுமதி பெறப்பட வேண்டும். இது தொடர்பாக மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் ஏற்கனவே தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை விண்ணப்பித்திருக்கிறது. இந்த விண்ணப்பமானது தற்போது தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் உள்ளது. இந்த பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு நாம் தமிழர் கட்சியினர் மட்டுமல்லாது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+