என்னங்க.. உண்டாயிருக்கேன்.. காரணம் யாருன்னு கேட்காதீங்க! கூலாக சொன்ன மனைவி.. பேஸ்புக்கில் பஞ்சாயத்து
வீடு கட்டி முடித்து வாழ்க்கையில் எல்லாம் செட்டில் ஆகிவிடும் என்று சந்தோஷத்தில் இருந்த காலத்தில் அவரின் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்துள்ளது. இப்போது அவர் என்ன செய்ய வேண்டும் கமெண்டில் கருத்துக்களை சொல்லுங்கள்?
சென்னை: தனது மனைவி கர்ப்பம் ஆனது தொடர்பாக பேஸ்புக்கில் குழு ஒன்றில் கணவர் ஒருவர் எழுப்பி இருக்கும் கேள்வி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
பேஸ்புக்கில் நிறைய குழுக்கள் சமீப நாட்களாக தோன்றி வருகின்றன. பாடல்கள் வைப் செய்ய குழு, ஐடி நிறுவனங்களில் நடக்கும் கதைகள் பற்றி குழு என்று நிறைய பிரபலமான குழுக்கள் உள்ளன. அதில் ஒரு குழுதான் Doubt clearing தொடர்பான குழு.
இது போன்ற குழுக்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பேஸ்புக் யூசர்கள் பதில் அளிப்பார்கள். வெளியே கேட்க முடியாத சந்தேகங்களை இதில் மக்கள் கேட்பது வழக்கம். அப்படி இதில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுதான் இணையத்தை உலுக்கி உள்ளது.

என்ன கேள்வி?
சுஷீன் ராம் என்ற சீக்ரெட் ஐடியில் கேள்வி கேட்ட அந்த நபர் தனக்கு 30 வயது என்று அறிமுகம் செய்துள்ளார். அதன்பின் அவர் கேட்ட கேள்விதான் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அதில், எனக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிவிட்டது. வீட்டில் பார்த்த திருமணம்தான். ஆனால் நான் அவளை பார்த்த முதலில் இருந்தே காதலித்துதான் வருகிறேன். நாங்க கொஞ்ச மிடில் கிளாஸ்தான். சின்ன வயசுல இருந்தே சொந்த வீடுதான் எங்களுடைய ஒரே கனவு. எப்படியோ கஷ்டப்பட்டு அரசு வேலையில் சேர்ந்துவிட்டேன்.

சொந்த வீடு
இப்போ ஹவுசிங் லோன் போட்டு சொந்த வீடு கட்டிக்கொண்டு இருக்கிறேன். வீடு கட்டியது முடிய போகிறது. எங்களுக்கு குழந்தை வேணாம்னு கடந்த 3 வருஷமா நான்தான் தள்ளி வச்சு இருக்கேன். என்னை மாதிரி இல்லாம என் குழந்தை சொந்த வீட்டுல பிறக்கணும். அதான் என் ஆசை. மத்தபடி எனக்கு உடல் ரீதியா எந்த பிரச்சனையும் இல்லை. எங்களுடைய தாம்பத்திய உறவும் நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது. ஆனால் பொண்ணோட வீட்டு சைடுல மட்டும் குழந்தை வேணும் சொல்லி டார்ச்சர் பண்ணாங்க. அவளும் என்கிட்டே கேட்டுகிட்டே இருந்தாள்.

என் கனவு
நான்தான் சொந்த வீட்டுல குழந்தை பெத்துகிறது என் கனவுன்னு சொல்லி தள்ளிபோட்டுக்கிட்டே இருந்தேன். என் மனைவிக்கும் நகை எல்லாம் சேர்த்து வச்சேன். ஆனா அவங்க சைட் ரொம்ப டார்ச்சர் தாங்க முடியல. இப்போ பிரச்சனை என்னன்னா இரண்டு நாளைக்கு முன்னாடி என் மனைவிக்கு பிரெக்னென்சி சோதனை பாசிட்டிவ்னு வந்து இருக்கு. ஆனால் இதுக்கு நான் காரணம் இல்லை. 200% கண்டிப்பா சொல்லுவேன். இதற்கு நான் காரணம் இல்லை. எப்போதும் பாதுகாப்போடுதான் தாம்பத்யம் வச்சுக்கிட்டோம். நான் இது பற்றி என் மனைவிகிட்ட கேட்டேன்.

டார்ச்சர்
எல்லோரும் கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணாங்க. அதனால்தான் இப்படி நடந்துடுச்சு. மத்தபடி இதற்கு காரணம் யாருன்னு என்கிட்டே கேட்க வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டாங்க. என்னால என் குடும்பம், நண்பர்கள் யார்கிட்டயும் இதை சொல்ல முடியல. அப்பா, அம்மா எல்லாம் மனசு நொந்து போயிடுவாங்க. அப்பாவுக்கு ஏற்கனவே ஒரு ஹார்ட் அட்டாக் வந்து இருக்கு. நான் அந்த குழந்தையை ஏற்றுக்கொள்ள என் மனசை ரெடி பண்ணனுமா? நான் பண்ணது எதுவும் தப்பா? என்னை மாதிரி என் குழந்தை வாடகை வீட்டில இல்லாம சொந்த வீட்டுல பிறக்கணும்னு நினைச்சது தப்பா? என்று அந்த நபர் தனது பேஸ்புக் போஸ்டில் கேள்வி எழுப்பி உள்ளார். பெயர் தெரிய கூடாது என்பதால் வேறு பெயரில் ஐடி தொடங்கி இப்படி கேட்பதாக அவர் பதிவு செய்துள்ளார்.
வீடு கட்டி முடித்து வாழ்க்கையில் எல்லாம் செட்டில் ஆகிவிடும் என்று சந்தோஷத்தில் இருந்த காலத்தில் அவரின் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்த்துள்ளது. இப்போது அவர் என்ன செய்ய வேண்டும்? அந்த குழந்தையை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? அல்லது மனைவியை விட்டு பிரிய வேண்டுமா?.. உங்கள் கருத்தை கமெண்டில் பதிவிடுங்கள்..












Click it and Unblock the Notifications