விஜயகாந்த் மாதிரி என்னை பண்ண முடியாது.. நான் ஜெ. கருணாநிதி மாதிரி தலைவன்.. அண்ணாமலை எச்சரிக்கை!

அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்தவர்களை எல்லாம் எடப்பாடி தனது டீமில் சேர்த்துக்கொண்டு உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருணாநிதி, ஜெயலலிதா போல நான் முடிவு எடுப்பேன், அவர்களை போல நானும் தலைவன்தான் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசி உள்ளார்.

பாஜக நிர்வாகிகள் பலர் வரிசையாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். பாஜகவை இந்த தொடர் நிகழ்வுகள் அப்செட் ஆக்கி உள்ளது. இதனால் அதிமுக - பாஜக இடையிலான மோதல் தற்போது முற்றி உள்ளது. பாஜகவில் முக்கிய நிர்வாகியாக இருந்த ஐடி விங் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்து உள்ளார்.

அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு அவர் பாஜகவில் இணைந்து உள்ளார். நேற்று அண்ணாமலையை விமர்சனம் செய்த திலீப் கண்ணனும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து உள்ளார். இவர் அதிமுகவில் இணைந்தது மட்டுமின்றி தன்னுடன் ஒரு அணியையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி

பேட்டி

அவர் அளித்த பேட்டியில், கருணாநிதி, ஜெயலலிதா போல நான் முடிவு எடுப்பேன். அவர்களை போல நானும் தலைவன்தான். அவர்கள் எடுத்த முடிவை எதிர்த்து பலர் கட்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள். அவர்களை போல நானும் தலைவன்தான். தேசிய கட்சி என்றாலே பெரிய கட்சி இல்லை, தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை இருந்தது. நாம் திராவிட கட்சிகளை சார்ந்து இருந்த நிலை இருந்தது. அது தற்போது மாறிவிட்டது. அண்ணாமலை இங்கே தோசை சுடவோ, இட்லி சுடவோ வரவில்லை. நான் எல்லோரையும் தாஜா பண்ணிக்கொண்டு இருக்க மாட்டேன். நான் தலைவன்.

அம்மா

அம்மா

கலைஞர்.. அம்மா போல முடிவு எடுப்பேன். நான் தலைவன்.. நான் யாருக்கும் கவலைப்பட மாட்டேன். நான் தலைவரை போல சில முடிவுகளை எடுப்பேன். அதற்காக நான் பயப்பட மாட்டேன். நான் எதை பற்றியும் கவலைப்படாமல் முடிவு எடுப்பேன். பாஜக செட்டில் ஆகும் வரை இங்கே சில அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும். என்னை டெல்லி மாற்றிவிடும் என்ற பயத்தில் முடிவு எடுக்காமல் இருக்க மாட்டேன். தமிழ்நாட்டில் பாஜக அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது. அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறோம்.

கலைஞர்

கலைஞர்

இப்போது நடந்த வினைக்கு எதிர்வினை இருக்கும். இன்னும் 2 மாதத்தில் எதிர்வினை கண்டிப்பாக இருக்கும். அதுதான் அரசியல். பாஜக என்பது வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். பாஜக என்னும் குளத்தில் சில தாமரைகள் வெளியேறினால்தான் குளம் சுத்தமாக இருக்கும். அதுதான் டெல்லி தலைவர்களின் விருப்பமும். தமிழ்நாட்டில் என்னை போன்று தாக்கப்பட்ட தலைவர் வேறு ஒருவர் கிடையாது. என் அளவிற்கு தாக்கப்பட்ட அரசியல் தலைவரே தமிழ்நாட்டில் கிடையாது . ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும், கட்சியில் இருந்து போனால் தான் புதியவர்களுக்கு பொறுப்பு தர முடியும். அப்படித்தான் புதிய தலைவர்களுக்கு பதவி அளிக்க முடியும்.நான் ஷாப்பிங் போக நினைத்தால் என் ஷாப்பிங் லிஸ்ட் பெருசாக இருக்கும். அதற்கான கால நேரத்தை நான் முடிவு செய்வேன்

 விஜயகாந்த்

விஜயகாந்த்

அண்ணன் விஜயகாந்தை செய்தது போல என்னை செய்ய முடியாது. அவரின் கேரக்டரை பற்றி பேசியது போல என்னுடைய கேரக்டரை பற்றி பேச முடியாது. என்னை எல்லாமே அப்படி ஒதுக்கிவிட முடியாது. நீங்கள் புதிய கட்சிக்கு சென்று இருக்கிறீர்கள். பார்த்துக்கொள்ளுங்கள். நன்றாக செயல்படுங்கள். வாழ்க வாழ்க கோஷம் எல்லாம் கம்மியாக போடுங்கள். ஓவராக போட்டால் நீங்கள் இங்கே இருந்ததற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். இப்போது 3வது கியரில் இருக்கிறோம். விரைவில் 5வது கியருக்கு மாறுவோம். கஷ்டம் இருப்பவர்கள் கிளம்பி செல்லுங்கள். டெல்லி போக வேண்டுமா.. 8 ஆயிரம்தான் டிக்கெட்.. கிளம்பி செல்லுங்கள். நான் பதவிக்காக வரவில்லை. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+