9 நாளில் எல்லாம் நடக்கவில்லை.. தப்பா பேசிட்டேன்.. மன்னிச்சிடுங்க! பாஸ்டர் சிறுவன் பகிரங்க மன்னிப்பு!
சென்னை: கிறிஸ்துவ மதத்திற்காக ஊழியம் செய்யும் ஜோயல் இம்மானுவேல் என்ற சிறுவன் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிறிஸ்துவ மதத்தில் ஊழியம் செய்வது என்பது முக்கிய பணிகளில் ஒன்று. அதாவது மக்கள் இடையே கிறிஸ்துவத்தை பற்றி எடுத்து சொல்லி பணி செய்வது. கடவுளுக்காக, மதத்திற்காக இவர்கள் செய்யும் பணிகள்தான் ஊழியம்.

கிறிஸ்துவ மதத்தில் பல ஊழியக்காரர்கள் இப்படி இருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் மக்களிடம் இருந்து நன்கொடை வாங்கியே பணிகளை செய்து வருகின்றனர். இதன் மூலமே பலர் கோடி கோடியாகவும் சம்பாதித்து இருக்கிறார்கள்.
அதே சமயம் பணத்திற்காக இல்லாமல் கிறிஸ்துவத்திற்காக ஊழியம் செய்யும் நபர்களும் இருக்கிறார்கள். பாஸ்டர்கள் பலர் மத சீர்திருத்தம் தொடங்கி பழக்க வழக்க சீர்திருத்தம், ஒற்றுமை ஆகியவை குறித்தும் பேசுவது உண்டு.
தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்கள் ஊழியம் செய்யும் பாஸ்டர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் ஜோயல் இம்மானுவேல் என்ற சிறுவன் இதேபோல் ஊழியம் செய்து வருகிறார்.
10 வயதில் இருந்து இவர் ஊழியம் செய்து வருகிறார். தற்போது அந்த சிறுவனுக்கு 14 வயது ஆகிறது. 8ம் வகுப்பு படிப்பதில் இருந்தே ஊர் ஊராக சென்று ஊழியம் செய்யும் ஜோயல் சமீபத்தில் சர்ச்சைக்கு உள்ளனர். அதன்படி ஊழியம் ஒன்றின் போது.. என்னுடைய அம்மா நான் கருவில் இருந்த போது அதிகம் கஷ்டப்பட்டார். நான் பிறக்கவே மாட்டேன் என்று கூறினார்கள்.
என்னை கலைக்கும்படி கூறினார். ஆனால் நான் நல்ல ஆரோக்கியமாக பிறந்தேன். நான் பிறக்க மாட்டேன் என்றார்கள். ஆனால் நான் 5 கிலோவில் பிறந்தேன். அதோடு இல்லாமல் பிறந்த 9 நாளில் நடந்தேன். நான் தனியாக பாத் ரூம் போவேன். நடக்க தொடங்கிய பின் நானே தனியாக பணிகளை செய்தேன். நான் மிக வேகமாக வளர்ந்தேன். அப்போதில் இருந்தே கர்த்தர் என்னுடன் இருக்கிறார் என்று பேசி இருந்தார்.
மன்னிக்க தெரிஞ்சவன் தான் மனுசன்
— கபிலன் (@_kabilans) August 23, 2023
மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுசன் தம்பி இப்ப பெரிய மனுசன் ஆகிட்டார் 😄 pic.twitter.com/Yw7g84Vz12
9 நாளில் நடந்தாரா?: ஜோயல் இப்படி பேசியது பெரிய அளவில் சர்ச்சையானது. 9 நாட்களில் தான் நடந்ததாக இவர் கூறியது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது. எப்படி ஒரு குழந்தை 9 நாளில் நடக்க முடியும். குழந்தைக்கு கழுத்து நிற்கவே சில மாதங்கள் ஆகும். அப்படி இருக்க எப்படி குழந்தையாக 9 நாட்களில் நடக்க முடியும்.
உடலியல் ரீதியாகவே இது சான்ஸ் இல்லையே என்று பலரும் விமர்சனங்களை வைத்தனர். ஜோயல் இம்மானுவேலை இதனால் பொய்யானவர் என்றும் பலரும் விமர்சனம் செய்ய தொடங்கினர்.
இந்த நிலையில்தான் கிறிஸ்துவ மதத்திற்காக ஊழியம் செய்யும் ஜோயல் இம்மானுவேல் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். நான் தவறாக பேசிவிட்டேன். தவறாக சொல்லிவிட்டேன். நான் சொல்லியதில் உண்மை கிடையாது.
நான் 9 நாளில் எல்லாம் நடக்கவில்லை. வாய் தவறி சொல்லிவிட்டேன். நான் 9 மாதங்களில் நடந்தேன். அதைத்தான் அப்படி சொல்லிவிட்டேன். மன்னித்துக்கொள்ளுங்கள். என்னுடைய தவறிற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த சிறுவன் ஜோயல் இம்மானுவேல் கேட்டுள்ளார். அவருடைய இந்த மன்னிப்பு வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications