லோக்சபா தேர்தலுக்கு பின் இதுதான் நடக்கும்.. குறித்துக்கொள்ளுங்கள்.. கே.எஸ் அழகிரி ஆருடம்!

லோக்சபா தேர்தலுக்கு பின் அதிமுக கட்சி உடையும், கட்சி வெற்றுக்கூடாரமாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலுக்கு பின் அதிமுக கட்சி உடையும், கட்சி வெற்றுக்கூடாரமாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. மே 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் பிரச்சாரம் நாளுக்கு நாள் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

I am sure, AIADMK party will disintegrate after Lok Sabha elections, says K S Alagiri

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில், லோக்சபா தேர்தலுக்கு பின் பிரதமர் மோடி பிரதமராக நீடிக்க முடியாது. பாஜக ஆட்சி இனியும் நீடிக்காது. களநிலவரம் அப்படித்தான் இருக்கிறது.

இதைத்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தெரிவித்து வருகிறார். இதனால்தான் மோடி தினமும் சர்ச்சையாக பேசி வருகிறார். ஆனால் அவர் பேசுவது எதுவும் மக்கள் மனதை மாற்றாது. மோடி சட்டையை மாற்றுவது போலவே தனது பொய்களை மாற்றி மாற்றி பேசி வருகிறார்.

மோடி பேசுவதை கேட்டும். அவரின் வார்த்தை பிரயோகங்களை கேட்டும் மக்கள் அழுத்துப் போய் இருக்கிறார்கள். மக்கள் இதற்கு தக்க பாடம் புகட்டுவார்கள். மத்தியில் விரைவில் ஆட்சி மாறும். அதேபோல் தமிழக மாநிலத்திலும் ஆட்சி மாறும். ஆட்சியோடு அதிமுகவும் அழியும்.

ஆம் தேர்தலுக்கு பின் அதிமுக கட்சியே காணாமல் போய் விடும். ஆட்சி போனதும், கட்சியில் இருந்து உறுப்பினர்கள் கழன்று செல்வார்கள். கட்சி மொத்தமாக காணாமல் போகும். இது வெகு தொலைவில் இல்லை. வெற்று கூடாரமாக அதிமுக கட்சி மாற போகிறது, என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+