என் பெயர் மாரி.. நரேந்திர மாரி.. குழம்பி அதிர்ந்த கமலாலயம்!
அடுத்த பாஜக தலைவர் தான் தான் என கூறிய இளைஞரால் பரபரப்பு
Recommended Video

சென்னை: சென்னையில் உள்ள தமிழக பாஜக கட்சி தலைமை அலுவலகம் இப்படி ஒரு சம்பவத்தை இதுவரை பார்த்திருக்காது... கேட்டிருக்காது!
பாஜக அலுவலகம் தி.நகரில் இயங்கி வருகிறது. கமலாலயம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த அலுவலகத்துக்கு ஒரு நாளுக்கு எத்தனையோர் பேர் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்து செல்வார்கள். வழக்கம்போல் நேற்று அலுவலகம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

நான்தான் தலைவர்
அப்போது திடீரென ஒரு இளைஞர் ஆபீசுக்குள் நுழைந்தார். அங்கிருந்தவர்களிடம் "நான்தான் புது பாஜக தலைவர்... என்னைதான் மோடி புதுசா தலைவரா தேர்ந்தெடுத்து இருக்கார். தமிழிசை சவுந்தராஜனை தலைமை பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டார். என்னைதான் புது தலைவரா நியமனம் செய்திருக்காங்க" என்று சொன்னார்.

போலீசில் புகார்
இதைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே ஆபீஸ் பொறுப்பாளர் ரகுசுந்தர்ராம், மாம்பலம் போலீசுக்கு இதைபற்றி தகவல் சொன்னார். விரைந்து வந்த போலீசார் அந்த இளைஞர் யார் என்ன என்று விசாரித்தனர்.

உறவினர்கள்
அப்போது, அந்த இளைஞர் தனது பெயர் நரேந்திர மாரி என்றார். சொந்த ஊர் கடலூர் என்றார். பிறகு போலீசார் கேட்ட எந்த கேள்விக்கும் சரியாக பதில் சொல்லாமல் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இருந்ததாக தெரிவித்த போலீசார், இளைஞரின் உறவினரை வரவழைத்து விசாரணை நடத்தி நரேந்திரமோரியை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.

இந்த அளவுக்கு பாதிப்பா?
அப்போது உண்மையிலேயே நரேந்திர மாரி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்ததையடுத்து, அவர்களுடன் நரேந்திர மாரி பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார். கட்சி தலைமை ஆபீசுக்குள் நுழைந்து, தான்தான் அடுத்த தலைமை என்று சொல்லக்கூடிய அளவுக்கா மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும்??
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications