மன்னிப்பு கேட்க முடியாது.. ரூ. 500 கோடி இழப்பீடும் தர முடியாது - திமுக நோட்டீஸுக்கு அண்ணாமலை பதில்!
சென்னை : திமுகவினர் சொத்து பட்டியலை வெளியிட்ட விவகாரத்தில் மன்னிப்பும் கேட்க முடியாது, ரூ.500 கோடி இழப்பீடும் தர முடியாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். திமுக குறித்த தனது குற்றச்சாட்டு உண்மையே எனக் குறிப்பிட்டு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அண்ணாமலை.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், கனிமொழி உள்ளிட்டோரின் சொத்து பட்டியல் என்ற பெயரில் சிலவற்றை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த 14-ஆம் தேதி வெளியிட்டார். அண்ணாமலை வெளியிட்ட சொத்து ஆவணங்கள் ஆதாரமற்ற போலி குற்றச்சாட்டுகள் என்று திமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

திமுக சார்பில் நோட்டீஸ் : மேலும், அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக பற்றி அவதூறாக தகவல்களை வெளியிட்ட அண்ணாமலை 48 மணி நேரத்திற்குள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லையென்றால் ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பினார்.
அதேபோல், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில், உதயநிதி ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டுக்கு, அண்ணாமலை 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால், இழப்பீடாக ரூ.50 கோடியை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதற்கிடையே, ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் ரூ.84 கோடி பெற்றுக்கொண்டதாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தன் மீது வைத்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால், அவர் மீது வழக்கு தொடரப்படும் என்றும், இழப்பீடாக 500 கோடியே ஒரு ரூபாய் கேட்பேன் என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
அண்ணாமலை பதில் : இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி அனுப்பிய நோட்டீஸூக்கு அண்ணாமலை பதில் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், "சட்டத்துக்கு புறம்பாகவோ, அவதூறாகவோ நான் எதையும் கூறவில்லை. திமுகவின் சொத்துகள் குறித்த தகவல்கள் அனைத்தும் பொதுவெளியில் இருந்து எடுக்கப்பட்டதுதான். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதில் வெளியிட்ட உண்மைகள், புள்ளிவிவரங்களை மக்கள் தெரிந்து கொள்வதை தடுக்கும் முயற்சியாகவும், எனது குரலை ஒடுக்குவதற்காகவுமே திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திமுகவினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அரசியல்வாதிகளால் மட்டுமல்ல, பொதுமக்களாலும் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்டு வருகிறது. தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்துவதற்காக இந்த ஆவணங்களை வெளியிடவில்லை. பொதுநலனுக்காக மட்டுமே திமுகவினரின் முறைகேடுகள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, திமுக கேட்டபடி ரூ.500 கோடி இழப்பீடு தரமுடியாது. மன்னிப்பும் கேட்க முடியாது. இந்த வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக இருக்கிறேன்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
அரசு பள்ளி முட்டை.. ₹3.70க்கு வாங்கி ₹5.63 விற்பனை. விஜய்க்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா?












Click it and Unblock the Notifications