காய்ச்சலுக்கு விடுப்பு கேட்ட 2K கிட்ஸ் ஊழியர்.. டாக்டரை பார்க்க சொன்ன மேலாளருக்கு சுடச்சுட கொடுத்த பதிலடி.. பாராட்டு
சென்னை: காய்ச்சல் காரணமாக 2K கிட்ஸ் ஒருவர் தனது மேனேஜரிடம் விடுமுறை கேட்டார். அதற்கு அந்த மேனேஜர் டாக்டரை பார்த்துவிட்டு அதற்கான மருந்து சீட்டை தரும்படி கூறினார். அதற்கு அந்த ஊழியர் கொடுத்த பதில் இணையதளத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது. மேலும் அவரது ரிப்ளையை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.
பொதுவாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றும்போது ஊழியர்கள் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க விடுப்பு கேட்டால் மேலாளர்கள் கொடுப்பது இல்லை. இதனால் அடிக்கடி பலரும் தங்களின் உடல்நலம் சரியில்லை என்று கூறி விடுமுறை எடுப்பது வழக்கமாக உள்ளது. மேலும் சில நேரங்களில் உண்மையிலேயே உடல் நலம் சரியில்லை என்று கூறினாலும் கூட விடுப்பு கிடைப்பது இல்லை.

இதனால் பலரும் உடல்நல குறைவுக்கு நடுவே கூட பணி செய்வது உண்டு. இந்நிலையில் தான் காய்ச்சல் காரணமாக அலுவலகம் வர முடியாது. விடுப்பு தாருங்கள் என்று கேட்ட 2கே கிட்ஸான ஊழியர் ஒருவரிடம், மருத்துவரை பார்த்து மருந்து சீட்டை கொண்டு வாருங்கள் என்று மேலாளர் கூறினார். அதற்கு டென்ஷனான அந்த ஊழியர் கொடுத்த பதில் தற்போது இணையதளத்தில் பாராட்டை பெற்று வருகிறது.
அதாவது தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 2கே கிட்ஸ் ஊழியருக்கும், மேலாளருக்கும் இடையே நடந்த வாட்ஸ்அப் உரையாடல் தொடர்பான ஸ்கிரீன்ஷாட் ‛ரெடிட்' வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த உரையாடல் பின்வருமாறு:
ஊழியர்: சார். என்னால் இன்று அலுவலகம் வர முடியாது. ஏனென்றால் எனக்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது.
மேனேஜர்: அப்படியென்றால் மருத்துவமனை செல்லுங்கள்.
ஊழியர்: தேவைப்பட்டால் நான் மருத்துவமனைக்கு செல்வேன். இப்போதைக்கு நான் பாராசிட்டமால் மாத்திரை சாப்பிட்டுள்ளேன்.
மேனேஜர்: உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் ப்ரிஸ்கிரப்ஷன் பெற வேண்டும் என்று நிறுவனத்தின் இயக்குநர் கூறி உள்ளார்.
மேனேஜரின் இந்த பதிலுக்கு ஊழியர் கொடுத்த ரிப்ளை தான் தற்போது பாராட்டை குவித்து வருகிறது. இதற்கு ஊழியர்,‛‛சார், நான் ஒன்றும் பள்ளி மாணவன் இல்லை. நான் விடுப்பு எடுக்கும்போது மருத்துவரின் மருந்து சீட்டு அல்லது பெற்றோரின் கையெழுத்து வாங்கி வர வேண்டிய தேவையில்லை. அதனை நான் செய்வதும் இல்லை. இப்போது நான் ஓய்வெடுக்கிறேன். உங்களின் மெசேஜ்க்கோ அல்லது போன்காலுக்கோ நான் பதிலளிக்க மாட்டேன்'' என்று கூறுகிறார்.
மேனேஜரிடம் இவ்வளவு துணிச்சலாக அந்த ஊழியர் ரீப்ளை செய்தது தான் பலரையும் கவர்ந்துள்ளது. இந்த ஸ்கிரீன்ஷாட்டை பார்கும் பலரும் ஊழியரை பாராட்டி வருகின்றனர். ஜென்- இசட் தலைமுறை தான் இந்திய நிறுவனங்களில் உள்ள ‛டாக்சிக்' கலாசாரத்தை சரிசெய்ய முடியும் என்று பாராட்டி வருகின்றனர். மேலும் இன்னும் சிலர், ‛‛தற்போதைய 2கே கிட்ஸ் வேலை மற்றும் வாழ்க்கை ஆகியவற்றில் சமநிலை வேண்டும் என்று நினைக்கின்றனர். இதுபற்றி வெளிப்டையாக பேசுவது மட்டுமின்றி அதனை பின்பற்றி வருகின்றனர்'' என பாராட்டி உள்ளனர்.
இன்னொருவரோ, ‛‛ஒருநாள் விடுப்புக்கு மருத்துவ சான்று, மருந்து சீட்டு உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. 2 நாட்களுக்கு மேல் விடுமுறை எடுத்தால் வேண்டுமானாலும் மருத்துவ சான்று, மருந்து சீட்டை வழங்கலாம். அவரது பதில் சரியானதே'' என்று பாராட்டி உள்ளார்.












Click it and Unblock the Notifications