ஏமாற்றிவிட்டனர்.. நான் CBI கேட்கவில்லை! கரூர் சிறுவனின் தந்தை ட்விஸ்ட்! கோர்ட்டில் வாக்குமூலம்
டெல்லி: கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி தாங்கள் மனுத் தாக்கல் செய்யவே இல்லை என உயிரிந்தவர்களின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு பெரிய அளவில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு CBIக்கு மாற்றப்பட்டு உள்ளது.
குடும்பத்தைப் பிரிந்துச் சென்ற, தங்களுக்கு தொடர்பில்லாத பன்னீர்செல்வம் பணத்திற்காக வழக்கு தொடர்ந்துள்ளதாக உயிரிழந்த சிறுவனின் தாயார் சர்மிளா என்பவரும், தன்னை ஏமாற்றி கையொப்பம் பெறப்பட்டதாக செல்வராஜ் என்பவரும் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக தற்போது உச்ச நீதிமன்றத்தில் காணொளியில் செல்வராஜ் ஆஜராகி உள்ளார். தன்னை ஏமாற்றி கையொப்பம் பெற்றுவிட்டதாக செல்வராஜ் அந்த காணொளியில் குறிப்பிட்டு உள்ளார்.

SIT குழுவை எதிர்க்கும் விஜய்
தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தமிழக வெற்றிக்கு கழகம் கூட்டத்தில் பலியான சிறுவனின் பெற்றோர் தரப்பு கடந்த வாரம்தான் உச்ச நீதிமன்றத்தில் வாதம் வைத்தது. அவரின் பெயரில் வழக்கு பதியப்பட்டது.
சிபிஐ விசாரணை வேண்டும் என்று இவர்கள் மனுதாக்கல் செய்தனர். இதனால் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக வெற்றிக்கு கழகம் கூட்டத்தில் பலியான சிறுவனின் பெற்றோர் தரப்பு வாதம் வைத்தது. அதாவது அரசு நியமித்த SIT மீது நம்பிக்கை இல்லை. அதனால் சிபிஐ விசாரணை வேண்டும். அதற்கு அனுமதி அளிக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தின் SITஐ கலைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு முறையான பதிலடியை கோர்ட்டில் கொடுத்துள்ளது.
அதில், கரூர் சம்பவத்தில் விசாரணை நடத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. உச்ச நீதிமன்றமே சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடக்கட்டும். முன்னாள் நீதிபதி விசாரணையை மேற்பார்வையிடட்டும் தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு விசாரணைக்குழுவை நாங்கள் ஏற்கவில்லை.
தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எங்கள் தரப்பில் விளக்கமே கேட்காமல், உயர் நீதிமன்றத்தின் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கரூரில் இருந்து போலீசாரின் கட்டாயத்தால் விஜய் வெளியேறினார்.
பரப்புரை பேருந்தின் அருகே நிறைய வாகனங்கள் வந்தபோது, ஒரு வாகனத்தில் மோதியுள்ளது. இதை பற்றி முறையாக விசாரிக்க நீதிபதி தலைமையிலான SIT தேவை. இதனால் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைக்க வேண்டும், என்று வாதம் வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு CBIக்கு மாற்றப்பட்டு உள்ளது.
தீர்ப்பிற்கு முன் ட்விஸ்ட்
இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் முன் திடீர் ட்விஸ்ட் ஏற்பட்டு உள்ளது. கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி தாங்கள் மனுத் தாக்கல் செய்யவே இல்லை என உயிரிந்தவர்களின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு பெரிய அளவில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தன்னை ஏமாற்றி கையொப்பம் பெற்றுவிட்டதாக செல்வராஜ் காணொளியில் ஆஜராகி கோர்ட்டில் இன்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications