சென்னையில் நிர்மலா சீதாராமனை சந்தித்தேனா? தவாக தலைவர் வேல்முருகன் கொடுத்த பரபர விளக்கம்!
சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் சந்தித்ததாக தகவல் வெளியாகியது. இதுகுறித்து தவாக தலைவர் வேல்முருகன், நிர்மலா சீதாராமனை சந்தித்தேன் என்று தகவல் பொய்யானது. நிர்மலா சீதாராமனை சந்திக்க எந்த அவசியமும் தனக்கு இல்லை என்று கூறிய அவர், பாஜக தனது கொள்கை விரோதி என்றும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சட்டசபையில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனின் நடவடிக்கையால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டென்ஷனானார். இதனால் திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி விலக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இதுதொடர்பாக தவாக தலைவர் வேல்முருகன் கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்தார்.

நிர்மலாவுடன் சந்திப்பா?
இந்த நிலையில் நேற்றிரவு சென்னையில் இருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் சந்தித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியது. தவாக தலைவர் வேல்முருகன் மட்டுமல்லாமல், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நாதக தலைவர் சீமான் உள்ளிட்டோர் சந்தித்ததாக கூறப்பட்டது.
வேல்முருகன் விளக்கம்
இதுதொடர்பாக தவாக தலைவர் வேல்முருகன் விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை. அதற்கான எந்த அவசியமும் இல்லை. அது முழுக்க முழுக்க தவறான தகவல். கொள்கை விரோதியாக இருக்கும் பாஜகவின் முக்கிய தலைவரை சந்திக்க வேண்டிய அவசியம் கிடையாது. நான் எனது கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தேன்.
பாஜகவுடன் கூட்டணியா?
ஏற்கனவே கூறியதை போல், நான் இந்த நிமிடம் வரை திமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கிறேன். ஒரு காலத்திலும் மனித குல விரோத நடவடிக்கையில் ஈடுபடும், தமிழர்களுக்கு, தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைக்கும் மதவாத பாஜக அரசுடன் கூட்டணி வைக்க வாய்ப்புகளே இல்லை. இதனை ஏற்கனவே பலமுறை தெளிவுபடுத்தியுள்ளேன்.
திமுக கூட்டணி
இப்படியான சூழலில் நிர்மலா சீதாராமனை சந்தித்தேன் என்று தகவல் பரப்பப்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன். திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள சில கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்று அயராது முயற்சிக்கிறார்கள். அந்த முயற்சி அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. இதனால் அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். தவாகவை நோக்கி இளைஞர்கள் வருகிறார்கள். இதனை அவர்களால் தாங்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications