ஆமா.. ஆளுநர் ரவியிடம் அரசியல் பேசினேன்! ஆனா, நான் அரசியலுக்கு வரமாட்டேன்: நடிகர் ரஜினிகாந்த் அதிரடி
சென்னை: ஆளுநர் ஆர்.என். ரவியிடம் அரசியல் பற்றி விவாதித்தேன் என்று கூறியுள்ள ரஜினிகாந்த், தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்று கூறியுள்ளார். தயிர், அரிசி, பால் பாக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்றும் ரஜினி தெரிவித்துள்ளார்.
Recommended Video
அரசியல் பயணத்திற்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த் சினிமாவில் முழு நேரமாக கவனம் செலுத்தி வருகிறார். அண்ணாத்த படத்திற்குப் பிறகு நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள டெல்லிக்கு சென்றிருந்த ரஜினி காந்த் நேற்று சென்னை திரும்பினார்.
அப்போது ஜெயிலர் படம் எந்த நிலையில் உள்ளது. அடுத்து என்ன என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நடிகர் ரஜினி, அடுத்து ஷூட்டிங் தான் என கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

ஆளுநருடன் சந்திப்பு
நடிகர் ரஜினிகாந்த் இன்றைய தினம், கிண்டி ராஜ்பவனில் உள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியுள்ளார். இந்த தகவல் தற்போது அரசியல் வட்டார த்தில் மட்டுமில்லாமல் திரைத்துறையினர் மத்தியிலும் விவாதிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக தமிழக ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் சித்தாத்தங்களை அரசு நிகழ்வுகளில் தமிழக ஆளுநர் ரவி பேசுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் நடிகர் ரஜினி காந்த் தமிழக ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார்.

ஆளுநர் ரவியை சந்தித்தது ஏன்
இந்த சந்திப்பு மரியாதை ரீதியிலான சந்திப்பாக கூறப்பட்டாலும், தமிழக அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ஆளுநரிடம் தற்போதய அரசியல் பற்றி விவாதித்ததாக கூறினார். அதைப்பற்றி தற்போது பகிர்ந்து கொள்ள முடியாது என்று கூறினார்.

ரஜினிகாந்த் பேட்டி
இது மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு. அவரிடம் 30 நிமிடம் பேசினேன். அவர் வட மாநிலங்களில் இருந்தவர். தமிழ்நாட்டை மிகவும் நேசித்துள்ளார். தமிழ் மக்களின் நேர்மை, கடுமையான உழைப்பு அவருக்கு மிகவும் பிடித்துள்ளது. முக்கியமாக இங்கிருக்கும் ஆன்மிக உணர்வு அவரை மிகவும் ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டின் நலனுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன் என்றார்.

அரசியலுக்கு வரமாட்டேன்
தமிழகத்தில் உள்ள ஆன்மீக உணர்வு ஆளுநருக்கு பிடித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பற்றி விவாதித்தீர்களா என்று கேட்டதற்கு இப்போதைக்கு சொல்ல முடியாது என்று கூறினார். மறுபடியும் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு சிரித்துக்கொண்டே அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் இல்லை என்று கூறினார்.

ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு ரஜினி பதில்
தயிர், அரிசி, பால் பாக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு செய்திருக்கிறார்கள். அதை எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு நோ கமெண்ட்ஸ் என்றும் ரஜினி கூறினார். ஜெயிலர் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று கேட்டதற்கு வரும் 15 அல்லது 22ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications