எனக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை.. உறவினர் அரசியலில் உள்ளனர்.. ஈசிஆர் வழக்கில் கைதான சந்துரு வீடியோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈசிஆரில் பெண்களை காரில் துரத்திய சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கார் ஓட்டிச்சென்ற சந்துரு என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். இவர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறி இருந்தார்.

இந்த நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட சந்துருவின் வாக்குமூல வீடியோ ஒன்று தனியார் தொலைக்காட்சியான நியூஸ் தமிழில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சந்துரு பேசுகையில், நான் 2019ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன். தற்போது கார், பைக் விற்பனை செய்து வருகிறேன். என் மீது ஒரு கடத்தல் வழக்கு வந்தது. அந்த வழக்கை சரியாக எதிர்கொண்டு வருகிறேன்.

ecr crime

இப்போது ஈசிஆர் வழக்கில் கார் ஓட்டியது, பெண்களை மடக்கியது நான்தான். ஏனென்றால் வண்டியை இடித்துவிட்டார்கள் என்று என்னுடன் இருந்த சந்தோஷ் என்பவர் கூறியதால் தான் காரை மடக்கினேன். வண்டியை இடித்ததை கூட நான் பார்க்கவில்லை. அப்போது, அந்த பெண்கள் நாங்கள் நிற்க முடியாது என்றனர். ஆனால் சந்தோஷ் காரை மடக்க கூறியதால், சாலையை வழிமறித்து நிறுத்தினேன்.

அதன்பின் சாரில் இருந்த பெண்கள் வீடியோ எடுத்தனர். தொடரின் ரிவர்ஸ் எடுத்து அவர்களின் வீட்டிற்கே சென்றுவிட்டனர். தொடர்ந்து அவர்களை பின்தொடர்ந்து சென்று, சந்தோஷ் என்பவர் அந்த பெண்களின் ஃபிளாடிற்குள் சென்றுவிட்டார். ஆனால் என்னிடம் பிடிக்க சொன்ன கார் இது அல்ல.. அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கிளம்புவோம் என்றார். அந்த நேரத்தில் பெண்களுக்கும், சந்தோஷ்-க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது சந்தோஷ் சாரி.. நீங்கள் போலீஸிடம் புகார் அளித்தால் என் கார் நம்பரை சொல்லுங்கள்.. எங்களை கூப்பிட்டால் நாங்கள் சந்தித்து கொள்கிறோம் என்று கிளம்பிவிட்டார். நான் எந்த கட்சியையும் சாராதவன். என் அம்மாவின் உறவினர்களான மாமா, தாத்தா இருவரும் அதிமுகவில் தான் இருக்கின்றனர். எம்ஜிஆரின் கார் ஓட்டுநராக என் தாத்தா இருந்தவர். 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

நள்ளிரவில் ஆயிரம் விளக்கு சென்றுவிட்டு, அதன்பின் சில இடங்கள் சுற்றினோம். அங்கிருந்து ஈசிஆர் வந்த போது பிரச்சனை வந்தது. அந்த நேரத்தில் நாங்கள் யாரும் குடிக்கவில்லை. அனிஷ் என்பவரிடம் இருந்து தான் கார் வாங்கினேன். அந்த காரை ரெடி செய்து நல்ல விலைக்கு விற்று தருகிறேன் என்று வாங்கினேன். அந்த காரில் இருந்த கொடியை போடுமாறு சந்தோஷ் தான் வலியுறுத்தினார்.

கொடி போட்டால் சுங்க கட்டணத்தை கட்ட தேவையில்லை. ஜனவரி 10ஆம் தேதி அந்த கொடியை காரில் போட்டோம். கொடைக்கானல் செல்ல திட்டமிட்டதால், கொடியை காரில் போட்டோம் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வெளியாகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+