Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விளையாட்டு துறையை நானே கவனிக்கலாம்னு ஏங்குகிறேன்.. ஸ்டாலின் பாராட்ட உதயநிதி கொடுத்த ரியாக்சன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ‛‛ நானே விளையாட்டு துறையை கவனிச்சிக்கலாம்னு எனக்கு தோன்றுகிறது. காரணம் உதயநிதியின் பணிகள் அப்படி இருக்கிறது. உதயநிதியின் பணிகள் இன்னும் இன்னும் சிறக்கணும். தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் இன்னும் இன்னும் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்.'' என்று முதல்வர் ஸ்டாலின் இன்று பேசினார்.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த விழாவில் துணை முதல்வரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

i-feel-like-i-can-take-care-of-the-sports-ministry-from-udhayanidhi-stalin-says-cm-stalin

இந்த விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாடு மாதிரி வேறு எந்த மாநிலமும் விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு உதவி செய்து இருக்கமாட்டார்கள் என்று பெருமையாக நெஞ்சை நிமிர்த்தி நான் சொல்கிறேன். இந்த விளையாட்டால் தமிழகம் வாங்கி இருக்கும் சில விருதுகளை மட்டும் இங்கே சொல்கிறேன்.

சிஐஐ அமைப்பு சார்பில் எஸ்டிஏடி விளையாட்டு வணிக விருது 2023 வழங்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு தி இந்து ஸ்போர்ட்ஸ் ஸ்டார் ஏசஸ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. ஜெம் அவார்ட்ஸ் 2025 வழங்கப்பட்டுள்ளது. செஸ் சாம்பியன் குகேசுக்கு கேல் ரத்னா விருது கிடைத்துள்ளது. 2024ம் ஆண்டு அர்ஜூனா விருது 4 விருதுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரையில் கூறிய விருதுகளும் கிடைத்துள்ளது.

இப்படி எத்தனை விருதுகள் தமிழ்நாட்டை தேடி வந்தாலும், நாங்கள் பெரியதாய் நினைக்கும் விருது எது தெரியுமா? தமிழ்நாட்டில் விளையாட்டை Career - ஆக எடுத்து நிச்சயம் நம்மால் சாதிக்க முடியும் என்று அரசு திட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து இவ்வளவு ஆயிரம் பேர் போட்டியில் பங்கெடுக்கிறார்களே உங்களின் நம்பிக்கை தான் எங்களுக்கான பெரிய விருதாக அமைந்துள்ளது.

அண்மையில் இந்த நேரு உள்விளையாட்டு அரங்கில் கல்வியாளர் தமிழ்நாட்டுக்கு பெருமை தேடி தரும் மாணவர்களை பாராட்ட ‛கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற நிகழ்ச்சியை நடத்தினோம். அப்போது கல்வியால் சிறந்த மாணவர்கள் மட்டும் இல்லை. விளையாட்டால் உயர்ந்த மாணவர்களும் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். காது கேளாதவர்களுக்கு ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப்பதக்கங்களை வென்ற 2022ல் அர்ஜூனா விருது பெற்ற ஜெர்லின் அவர்களின் தந்தை தமிழ்நாடு அரசு எந்த அளவுக்கு அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது என்று பெருமையாக பேசினார்.

அதேபோல் போல்வால்ட் விளையாட்டில் தேசிய அளவில் தொடர்ந்து சாதனை படைத்த ரோசி என்ற வீராங்கனை ஒரு போல்ட் வாங்க ஒன்றரை லட்சம் வாங்க தேவைப்படும். என்னிடம் அவ்வளவு காசு இல்லையே என்று சொன்ன நேரத்தில் அரசு தான் எல்லா சப்போர்ட்டையும் செய்தது. இப்போது அவரிடம் 6 போல்ட் இருப்பதோடு, ரயில்வே துறையில் தனக்கு தரப்பட்ட வேலையை விட 3 மடங்கு சம்பளத்தோடு தமிழ்நாடு அரசு வேலை கொடுத்து உள்ளது என்று பெருமையோடு சொன்னார்.

சென்னை காசிமேட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரின் மகள்,கேரம் வீராங்கனை காசீம் என்ன பேசினார் என்று உங்களுக்கே தெரியும். அமெரிக்காவில் உலககோப்பை போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்ற அவருக்கு ரூ.1 கோடியை வழங்கியது திராவிட மாடல் அரசு. இப்படி நம்மை பொறுத்தவரையில் ஜெர்லின், ரோசி மீனா, காசீம் போன்றவர்களின் எளியவர்களின் வெற்றி தான் நமது அரசின் வெற்றி. இதனால் தான் பல்வேறு திட்டங்களின் வழியாக ஏழை வீரர்களின் கனவை தமிழ்நாடு விளையாட்டு துறை இன்று நிறைவேற்றி வருகிறது.

இந்த சமயத்தில் தலைவர் கருணாநிதி சொன்னவ விஷயம் நியாயபகத்துக்கு வருகிறது. நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது அந்த துறையில் ஏராளமான பணிகளை, முன்னெடுப்புகளை செய்வதை பார்த்து முதலமைச்சர் கருணாநிதி ஒரு விழாவில் பேசினார். அப்போது, ‛ என்னுடைய துறைகளில் செய்யப்பட்ட சாதனைகளை எல்லாம் பட்டியலிட்டு பேசி நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருக்கலாமோ என்ற எண்ணம் இருக்கிறது' என்று கூறினார்.

அதேபோன்ற ஏக்கம் இன்று எனக்குள் வந்துள்ளது. நானே விளையாட்டு துறையை கவனிச்சிக்கலாம்னு எனக்கு தோன்றுகிறது (ஸ்டாலின் சொன்னதும் உதயநிதி ஸ்டாலின் சிரித்தார்). காரணம் உதயநிதியின் பணிகள் அப்படி இருக்கிறது. உதயநிதியின் பணிகள் இன்னும் இன்னும் சிறக்கனும். தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் இன்னும் இன்னும் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்.

உங்களுக்கான அத்தனை வாய்ப்புகளையும் உருவாக்குகிறோம். விளையாட்டில் கவனம் செலுத்தி, பயிற்சி செய்து வெற்றி பெற்று தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை தேடி தாருங்கள். உங்களின் தேவைகளை நிறைவேற்றி தர முதலமைச்சராக நானும் இருக்கிறேன். உங்கள் துறையின் அமைச்சரான துணை முதல்வர் உதயநிதியும் இருக்கிறார். நம்பிக்கையுடன் உங்களின் சாதனை பயணம் தொடர வாழ்த்துகளை தெரிவித்து ‛களம் நமதே.. வெற்றி நமதே' நன்றி.. வணக்கம்'' என்று பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+