Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளம்பும்போதே போகாத வெற்றினு சொன்னேனே.. இதான் கடைசினு இப்படி போய்ட்டானே.. சைதை துரைசாமி கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இமாச்சல பிரதேசத்தில் கார் விபத்தில் உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடல் சென்னை கண்ணமாப்பேட்டை மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. உடல் தகனம் செய்யப்பட்ட பிறகு பேட்டியளித்த சைதை துரைசாமி, ‛‛கிளம்பும்போதே போகத வெற்றினு சொன்னேன்.. இதான்பா கடைசினு சொல்லிட்டு போனான். ஆனால் இந்த பயணமே கடைசியா இருக்கும்னு நினைக்கல’’ என என கண்ணீருடன் கூறியது அனைவரையும் கலங்க வைத்தது.

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனான வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த 4 ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார் டிரைவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் உதவியாளர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். வெற்றி துரைசாமி மட்டும் கிடைக்கவில்லை. இதனால், கடந்த 8 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.

I have the strength of mind that my sons and daughters are there, saidai Duraisamy says

8 நாட்களுக்கு பிறகு சட்லஜ் ஆற்றில் வெற்றி துரைசாமி உடல் மீட்கப்பட்டது. முன்னதாக மகனின் உடலை கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக சைதை துரைசாமி அறிவித்தார். நேற்று இமாச்சல பிரதேசத்தின் சட்லஜ் ஆற்றில், விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து, 2 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றியின் உடல் மீட்கப்பட்டது. பாறையின் அடியில் உடல் சிக்கியிருந்த நிலையில், மீட்பு படை வீரர்கள் அவரது உடலை கண்டுபிடித்தனர்.

உடல் தகனம்: இதையடுத்து வெற்றி துரைசாமியின் உடல் சென்னைக்கு தனிவிமானத்தில் கொண்டு வரப்பட்டது. சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் வெற்றி துரைசாமியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மகனின் உடல் அருகே சோகமே உருவாக சைதை துரைசாமி நின்று கொண்டிருந்தார். சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உடலுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திருமாவளவன், சீமான், சசிகலா, அமைச்சர் மா சுப்பிரமணியன், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அருகில் நின்ற சைதை துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தேற்றினர். இதன் பின்னர் வெற்றி துரைசாமியின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு தொடர்ந்து கண்ணம்மாபேட்டை மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

ஒரு மகன் போனாலும்: வெற்றி துரைசாமி உடல் தகனம் செய்யப்பட்ட பிறகு பேசிய சைதை துரைசாமி, நான் கலங்க மாட்டேன்.. என்னுடைய மகன்கள், மகள்கள் இருக்கிறாங்க என உருக்கமாக பேசினார். அவர் பேசியதாவது:- அருமை மகன் அன்பு மகன் வெற்றி நம்மை விட்டு பிரிந்தது என்பது விதியின் விபரீதமாக நினைக்கிறேன். போகவே வேண்டாம் என்று சொன்னேன். அப்படி அழுத்தி சொன்னால் போகாமல் இருப்பவன் இந்த முறை இது கடைசி என்று சொல்லிவிட்டு சென்றான். ஆனால் இப்படி அவனது கடைசி பயணமாக இருக்கும் என்று நான் ஒருகாலமும் நினைக்கவே இல்லை.

இந்தியா முழுக்க, தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசு பணிகளில், அரசு உயர் பதவிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற அரசின் உயர் பதவிகளில் பணிபுரிகின்ற, வாய்ப்பை பெற்ற அனைத்து மகன்களும், மகள்களும் இங்கே வந்திருக்கிறார்கள். என்னுடைய ஒரு மகன் போனாலும், எனக்கு பக்க பலமாக எனக்கு இன்னும் நிறைய மகன்கள் இருக்கிறார்கள்.. மகள்கள் இருக்கிறார்கள் என்ற மன உறுதியோடு நான் உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

உறுதி எடுத்து கொள்கிறேன்: சக மனிதனுக்காக வாழ வேண்டும். ஒரு சமூக நீதி என்பது பொருளாதாரத்தால் தடைபட்டு நின்று விட கூடாது என்பதற்காக அரசால் அங்கீகரிக்கப்பட்ட 239 ஜாதிகளில் 170 ஜாதிகளை சார்ந்தவர்களை அரசு பணிகளில் இருக்கிறார்கள். மீதி இருக்கின்ற 89 ஜாதிகளை சேர்ந்தவர்களையும் அரசு பணியில் அமர வைப்பது தான் என்னுடைய ஒரே லட்சியம் என்று என்னுடைய மகன் மரணத்தில் உறுதி எடுத்து கொள்கிறேன்.

மேலும், அதை நோக்கி பயணம் செய்து சக மனிதனுக்காக வாழ்ந்து என் மனம், என் மகனின் ஆன்மா சாந்தியடைகின்ற வகையில் இந்த சேவையை அர்ப்பணிப்போடு செய்வேன் என்று சொல்லி அனைவருக்கும் நன்றி பாராட்டி, எனக்கு ஆறுதல் சொல்லிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்து பல்வேறு பணிகளை எல்லாம் விட்டு விட்டு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எனக்கு ஆறுதல் சொல்ல வந்த எனது மகன்களுக்கும், எனது மகள்களுக்கும் டிஎன்பிஎஸ்சி மூலம் வெற்றியாளாராக பவனி வருகின்ற அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மனம் கலங்க மாட்டேன்: நான் மனம் கலங்க மாட்டேன். காரணம் இத்தனை மகன்களை நான் பெற்றிருக்கிறேன். அவர்கள் எல்லாரும் இருக்கிறார்கள். ஆகவே இன்னும், வலிமையோடு சேவையை பிரதானப்படுத்தி என்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்வேன் என்று என் மகனின் இறுதி நாளில் நான் சூளுரைத்து அந்த பாதையிலே நான் பயணிக்கிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+