"ரசிகர்கள் என் முடிவைப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்".. ஸ்ரேயா கோஷல்
சென்னை: பிரபல பின்னணி பாடகரான ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சி செப்டம்பர் 13 ஆம் தேதி கொல்லகத்தாவில் நடைபெறவிருந்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தற்போது அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைத்துள்ளதாகவும், ரசிகர்கள் தன்னைப் புரிந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற நேரத்தில் இசை நிகழ்ச்சியை நடத்துவது சரியாக இருக்காது என்பதால் இசை நிகழ்ச்சி நடக்கும் தேதியை மாதத்திற்கு தள்ளிவைத்திருக்கிறார் ஸ்ரேயா கோஷல்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவரை முன் பின் தெரியாதவர்களுக்கு கூட இந்த சம்பவம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவருக்காக நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மருத்துவரின் கொலைக்கு நீதி வேண்டி மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் கொடூரமாக தாக்கப்பட்டிருப்பதும், மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
பிரபல பின்னணி பாடகரான ஸ்ரேயா கோஷல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பாடல்களைப் பாடி வருகிறார். இவர் 'ஸ்ரேயா கோஷல் லைவ், ஆல் ஹார்ட்ஸ் டூர்' என்ற தலைப்பில் அமெரிக்காவில் டென்வர், சிகாகோ உள்ளிட்ட பகுதிகளில் இசை நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியிருந்தார். கடந்த 10 ஆம் தேதி டெல்லியில் இசைக் கச்சேரியை நடத்தி முடித்திருந்தார். இதைத்தொடர்ந்து, கொல்கத்தாவில் செப்டம்பர் 14 ஆம் தேதியும், துபாயில் செப்டம்பர் 21 ஆம் தேதியும் இசைக் கச்சேரி நடைபெறவுள்ளதாக அறிவித்திருந்தார்.
கொல்கத்தா சம்பவத்தால் நாடே அதிர்ந்து போயுள்ள இந்த நேரத்தில் கொல்கத்தாவில் நிகழ்ச்சி நடத்துவது சரியாக இருக்காது என்று கருதிய ஸ்ரேயா கோஷல் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த கொடூர சம்பவத்தால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். ஒரு பெண்ணாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நேர்ந்த கொடுமையை நினைக்கும்போது நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. கொல்கத்தாவில் செப்டம்பர் 14 ம் தேதி நடைபெறவிருந்த இசைக் கச்சேரியை அக்டோபர் மாதத்திற்கு ஆழ்ந்த சோகத்துடன் தள்ளிவைக்கிறேன்.
இந்த நிகழ்ச்சி பலராலும் அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாம் அனைவரையும் ஒற்றுமையுடன் இணைக்க வேண்டும். உலகில் உள்ள அனைத்து பெண்களுடைய பாதுகாப்பிற்காகவும், மரியாதைக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். என்னுடைய இந்த முடிவை ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.
மனித இனத்தின் மிருகங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம். தயவுசெய்து புதிய தேதியை அறிவிக்கும் வரை பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இசை நிகழ்ச்சிக்காக நீங்கள் எடுத்துள்ள டிக்கெட்டுகள் புதிய தேதி வரை செல்லுபடியாகும். உங்கள் அனைவரையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ரேயா கோஷலின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது இந்த முடிவுக்குப் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications