உளவுத்துறை ரிப்போர்ட்.. இரவு 12 மணிக்கு.. பற்ற வைத்த காயத்ரி ரகுராம்.. அண்ணாமலைக்கு வந்த "சோதனை"

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவில் இருந்து என்னை துரத்துவதுதான் உங்கள் லட்சியமா? என்று காயத்ரி ரகுராம் பாஜகவில் தனக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை பார்த்து விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாஜகவில் சீனியர் தலைவர்களுக்கும் ஜுனியர் தலைவர்களுக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

முக்கியமாக காயத்ரி ரகுராம் பாஜகவில் நடக்கும் உட்கட்சி மோதல்கள் குறித்து அதிரடி கருத்துக்களை தெரிவித்து வந்தார். பல சீனியர்கள் அமைதியாக புழுங்கிக்கொண்டு இருந்த நிலையில் காயத்ரிதான் இதில் வெளிப்படையாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வந்தார். இதனால் அவர் கட்சியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சண்டை

சண்டை

தமிழ்நாடு பாஜகவில் சீனியர்கள் மதிக்கப்படுவது இல்லை என்று கடந்த சில நாட்களாக காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தார். கட்சி உள் விவகாரங்களை வெளிப்படையாக ட்விட் செய்து விமர்சனம் வைத்தார்.இதையடுத்து அண்ணாமலை ஆதரவாளர்கள் பலர் ட்விட்டரில் காயத்ரி ரகுராமிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். தலைவர் சொல்வதை கேட்க வேண்டும், சமூக வலைத்தளங்களில் இப்படி எல்லாம் பேச கூடாது என்று அறிவுரை வழங்கினர். இந்த மோதல் விஸ்வரூபம் எடுத்த நிலையில் கட்சிக்கு எதிராக அவர் செயல்படுவதாக கூறி கட்சியில் இருந்து 6 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

நீக்க வேண்டும்

நீக்க வேண்டும்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்பும் கூட காயத்ரி தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார். கட்சிக்குள் மோனோபோலி இருப்பதாக.. அதாவது ஒரே ஒரு தலைவர் மட்டும் கட்சியில் அனைத்தையும் கட்டுப்படுத்த விரும்புவதாக காயத்ரி புகார் வைத்து வருகிறார். நேற்று கூட அண்ணாமலை - ரபேல் வாட்ச் விவகாரத்தில் காயத்ரி கருத்து தெரிவித்து இருந்தார். பாஜக தலைவர் அண்ணாமலையின் வாட்ச் விவகாரம் பெரிய சர்ச்சை ஆகி உள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை கையில் ஒரு வாட்ச் வைத்து இருக்கிறார்.

அண்ணாமலை

அண்ணாமலை

அந்த வாட்சின் விலை 3 - 4 லட்சம் ரூபாய் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இதுதான் அவரின் வாட்ச் சர்ச்சைக்கு காரணம் ஆகி உள்ளது. இதையடுத்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, நான் எனது சொத்து விவரங்களை வெளியிட தயார் . திமுகவினர் வெளியிட தயாரா என்று சவால் விட்டார். இது பற்றி அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமல் காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்து இருந்தார். அதில், தேர்தலுக்கு முன் வேட்பாளர்களின் சொத்துக்களை அறிவிப்பது பெரிய விஷயமல்ல. கறுப்புப் பணத்தை யாரும் அறிவிக்கப் போவதில்லை, குடும்பம்/உறவினர்களின் சொத்தை யாரும் அறிவிக்க மாட்டார்கள்.. இப்போதெல்லாம் நெருங்கிய நண்பர்கள் பினாமிகள். யாரும் சுத்தமாக இல்லை. ஊழலுக்கு முடிவே இல்லை.

சர்ச்சை

சர்ச்சை

ஒரு மனிதனின் வளர்ச்சி மக்களால் பாராட்டப்படுகிறது. ஒருவரின் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதீர்கள். ஆனால் ஊழல் பெருகினால் நாம் கண்டிக்க வேண்டும். மக்கள் கண்டிப்பார்கள். இந்த செய்தி அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும். பாஜகவில் இருந்து என்னை துரத்துவதுதான் உங்கள் லட்சியமா? தொடர்ச்சியான தாக்குதல். பிறகு நான் எப்படி ஒரு தலைவரைப் பின்பற்றுவது? இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்கும் போது.. எப்படி? இந்த உத்திகளை நான் 8 ஆண்டுகளாக எதிர்கொண்ட நிற்கிறேன். நான் இன்னும் வலுவான பாஜக காரியகர்த்தா மட்டுமே. பிரதமர் மோடி ஊழலுக்கு எதிரானவர். ஊழல் செய்பவர்களை அவர் விடமாட்டார். ஏழைகளின் வலி அவருக்குத் தெரியும். மேலும் கறுப்புப் பணத்தை மாற்ற அல்லது மறைக்க என்ஜிஓக்கள்..அறக்கட்டளைகள் உள்ளன.. எடுப்பவர்கள் ஊழல்வாதிகள், கொடுப்பவர்கள் ஊழல்வாதிகள், என்று குறிப்பிட்டார்.

மோதல் மேல் மோதல்

மோதல் மேல் மோதல்

இதையடுத்து அண்ணாமலை ஆதரவாளர்கள் பலர் காயத்ரியை கட்சியில் இருந்தே நீக்க வேண்டும். அவர் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக பேசி வருகிறார் என்று இணையத்தில் விமர்சனங்களை வைத்து வந்தனர். இது தொடர்பாக நேற்று இரவு 12 மணி அளவில் காயத்ரி காட்டமாக சில ட்விட்களை செய்துள்ளார். தனக்கு எதிராக வழங்கப்படும் உளவுத்துறை ரிப்போர்ட்கள் பற்றி தனக்கு தெரியும் என்று காயத்ரி தெரிவித்துள்ளார். அவர் செய்துள்ள ட்விட்டில், என்மீது சுமத்தப்படும் எல்லாப் பழிகளையும் நான் அறிவேன். பலர் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளாக இருப்பதால், அனைத்து திணிக்கப்பட்ட IB அறிக்கைகளும் எனக்குத் தெரியும். எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளும் தர்மமும் என் பக்கத்தில் இருப்பதாக எனக்குத் தெரியும். நான் நான் இடைநீக்கத்தில் இருக்கிறேன் நான் ஒரு எளிதான இலக்காக இருக்கிறேன். நான் ஒரு பெண்ணாக வலுவாக நிற்பேன், என்று காயத்ரி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+