Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் கொள்கை இதுதான்; எனக்குத் தெரியும்; மகாவிஷ்ணு ஒரு மோசடி பேர்வழி! நாஞ்சில் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் கட்சியின் கொள்கை என்று அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், அவர் கட்சியின் கொள்கை என்பது பற்றி நாஞ்சில் சம்பத் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் கட்சி தொடங்கியதை அடுத்து பெரிய அளவில் எந்தவித போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று எதையும் செய்யாமல் 2026 தான் தங்களின் இலக்கு என்று தெரிவித்து அதை நோக்கிப் பயணித்து வருகிறார். கடந்த மாதம் 22 ஆம் தேதி கட்சிக் கொடியை அறிமுகம் செய்த அவர், இந்த மாதம் 23 ஆம் தேதி மாநாட்டை நடத்துவார் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் இல்லை. கால அவகாசம் போதாத காரணத்தால் மாநாட்டு நிகழ்வு தள்ளிப் போகலாம் என்றும் சொல்கிறார்கள். வேறு சிலர் கட்சிக் கொடியை அறிவித்தவர் இன்னும் கொள்கையைப் பிரகடனம் செய்யவில்லை. அதன்பின்னர் பேசுவோம் என்று காத்திருக்கிறார்கள்.

vijay mahavishnu

இந்நிலையில்தான் திடீரென்று மகாவிஷ்ணு என்ற நபர் சென்னை அசோக் நகர் பள்ளி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பேச்சு சர்ச்சையானது. இது விஜய்யின் செய்தியை ஊடகங்கள் ஹைலைட் ஆக்க விடாமல் செய்வதற்காக திமுக செய்யும் சதி என்று குற்றஞ்சாட்டி வருகின்றனர். வேறுசிலர் உண்மையாக மகாவிஷ்ணு சம்பவத்தில் திமுக சட்டரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளதைப் பாராட்டி வருகின்றனர்.

திராவிட இயக்க பேச்சாளரும் திமுக ஆதரவாளருமான நாஞ்சில் சம்பத் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் மகாவிஷ்ணுவை மோசடி பேர்வழி என்கிறார். அதேநேரம் விஜய் அரசியல் வருகையை ஆதரித்துப் பேசி இருக்கிறார். இதனால் அவர் விஜய் கட்சியில் இணையலாம் என்றும் ஒரு பக்கம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாஞ்சில் சம்பத் அளித்துள்ள பேட்டியில், "என்னைப் பொறுத்தவரை மகாவிஷ்ணு ஒரு மோசடி பேர்வழி. அவர் பேச்சுக்கள் வருங்கால தலைமுறையைக் கற்காலத்திற்குத்தான் இட்டுச் செல்லும். அவர் தன்னை கடவுளின் அவதாரமாக நினைத்துக் கொள்கிறார். இப்படித்தான் சிவசங்கர பாபா, நித்தியானந்தா ஆகியோர் செய்த லீலைகளை இவனும் அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

இந்த நாட்டில் பக்தியைப் போல உடனடியாக விற்பனையாகக் கூடிய பொருள் வேறு எதுவுமே கிடையாது. எனவே அதை மகாவிஷ்ணு பயன்படுத்திக் கொள்கிறார். ஆன்மிகம் பற்றி ஏதாவது அறிவு மகாவிஷ்ணுவுக்கு உள்ளதா என்றால் அதுவும் கிடையாது. ஆழ்வார் பாசுரம் பற்றியோ, நாலாயிர திவ்யபிரபந்தம் பற்றியோ ஏதாவது இவருக்குத் தெரியுமா என்றால் இல்லை.

சுமார் 7 ஆம் நூற்றாண்டு தொடங்கி 19 ஆம் நூற்றாண்டு வரை சமய இலக்கியங்கள் செழித்தும் கொழித்தும் இருந்த காலம். இதைப் பற்றிய அடிப்படை அறிவு கூட மகாவிஷ்ணு என்ற பொடியனுக்கு கிடையாது. வள்ளலாரைப் பேசுவதற்கு நிறையப் பேர் இருக்கிறார்கள்.

அதற்காகவே சத்ய ஞான சபை ஒன்று இருக்கிறது. வள்ளலாருக்காக தன் வாழ்க்கையையே கொடுத்தவர் ஊரான அடிகள். அவர் அளவுக்கு வள்ளலாரை ஆய்வு செய்தவர்கள் வேறு ஒருவர் உலகில் இல்லை. வள்ளலாரும் ஞானசம்பந்தரும், வள்ளலாரும் திருக்குறளும், வள்ளலாரும் மாணிக்க வாசகரும் என்று நிறைய நூல்களை அவர் எழுதி இருக்கிறார். இதில் ஒன்றையாவது மகாவிஷ்ணு படித்திருக்கிறாரா?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

வள்ளலாரைப் பற்றி ஆராய்ச்சி செய்து மகாவிஷ்ணு என்பவர் அமைச்சர் அன்பில் மகேஷிடம் அறிக்கை அளித்திருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதைப் பற்றி நாஞ்சில் சம்பத் விளக்கம் அளிக்க முன்வந்த போது, "வள்ளலார் ஒரு மானுட பற்றாளர். அதைத்தாண்டி அவர் கண்மூடித்தனமாகப் பழக்க வழக்கங்களுக்கு எதிரானவர். கண்மூடி பழக்கங்கள் எல்லாம் மண்மூடிப் போகவேண்டும் என்று சொன்னவர். சாத்திரங்களைக் கோத்திரங்களைச் சாடியவர். ஆனால், அதே சாத்திரத்தையும் கோத்திரத்தையும் புதுப்பிப்பதற்காக இந்த மகாவிஷ்ணு புறப்பட்டிருக்கிறார்.

வள்ளலார் சபைக்குப் பெரியார் போனார். அவரை அழைத்துப் போனவர் ஊரான் அடிகள். அப்போது அங்கே புலால் சாப்பிடுபவர்களுக்கு அனுமதி இல்லை எனப் போட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் உள்ளே வரமாட்டேன் என்று பெரியார் சொல்லிவிட்டார். இல்லை இல்லை நீங்கள் வரலாம் என்றார் ஊரான் அடிகள். ஒரு விதி என்று இருந்தால் அதை மதிக்க மதிக்கவேண்டும். ஆகவே வரவில்லை. நான் புலால் உண்பவன் என்று சொல்லி மறுத்தார் பெரியார். அதற்குப் பெயர்தான் கண்ணியம். அந்தக் கண்ணியம் மகாவிஷ்ணு பேச்சில் இருந்ததா?

ஆசிரியர் சங்கர் எதிர்த்துக் கேட்டபோது, கல்வி முதல்நிலை கல்வி அலுவலரைவிட நீங்கள் பெரிய ஆளா என்று கேட்கிறார். அப்படி என்றால் அவர்தான் மகாவிஷ்ணுவை அழைத்து வந்துள்ளார். பள்ளி தலைமை ஆசிரியருக்கு இவரைத் தெரியாது. கண்பார்வை இல்லாதது ஒரு குறையில்லை. கண்பார்வையற்ற மில்டன் தான் ஆங்கிலத்தில் மகா காவியம் எழுதினான். அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் ஒரு மாற்றுத்திறனாளி. இப்படிப் பல சாதனைகளை மாற்றுத்திறனாளிகள் உலகில் செய்துள்ளனர். எனவே மகாவிஷ்ணு அந்த மாற்றுத்திறனாளி ஆசிரியரை மனிதாபிமானத்துடன் பேசி இருக்கவேண்டும்" என்று பேசி இருக்கிறார்.

vijay mahavishnu

தொடர்ந்து பேசிய நாஞ்சில் சம்பத், "சரியோ தவறோ, அதிமுக மற்றும் திமுக அல்லாத ஒரு மூன்றாவது கட்சி தமிழ்நாட்டுக்குத் தேவை என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது. ஆனால், அதற்குச் செயல்வடிவம் கொடுக்க யாராலும் இதுவரை முடியவில்லை. விஜயகாந்த் அப்படித்தான் வந்தார். அவர் அதிமுகவில் சேர்ந்து காணாமல் போனால். சீமான் நாளுக்கு நாள் பள்ளத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறார். அன்புமணி தொடர்ந்து தோற்பார். அவரால் ஆட்சிக்கு வர முடியாது. விஜய்யிடம் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. 8 வயதிலிருந்து 20 வயது வரை உள்ள இளம் தலைமுறை விஜய்க்குப் பின்னால் இருக்கிறது.

மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என்று கடுமையாகப் போராடி வருகின்றன. அதை விஜய் தடுத்து நிறுத்துவார். அவர் நீட் எதிர்ப்பு பற்றிப் பேசுகிறார். ஒன்றிய அரசு என்றுதான் அறிக்கையில் சொல்கிறார்.மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மரியாதை செய்கிறார். கிட்டத்தட்ட திமுகவின் கொள்கையைத்தான் விஜய் பேசுகிறார். திமுக கொள்கை என்றால் அது ஏதோ அவர்களுக்கு மட்டுமே சொந்தமான கொள்கை இல்லை. அது தமிழ்நாட்டுக்குத் தேவையான கொள்கை. அதில் திமுக இடைவெளி விடும் போது அதை இட்டு நிரப்பும் வேலையை விஜய் செய்வார். அதற்கான வசீகரமும் வளமும் விஜய்யிடம் இருக்கிறது" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+