அந்த 3 பேர் பெயரை சொன்ன செங்கோட்டையன்.. மீட்டிங்கில் எடுத்த சபதம்.. எடப்பாடிக்கு பெரிய சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் 5 ம் தேதியன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுவதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார். இந்த நிலையில் நேற்று தனது ஆதரவாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதில் முக்கியமான சில விஷயங்களை பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக தலைமையுடன் அதிருப்தியில் இருந்து வருவதாகவும் விரைவில் அரசியல் அவரது நிலைப்பாடு குறித்து 5 ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளிப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் இன்று காலை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குள்ளம்பாளையத்தில் உள்ள அவரது பண்ணைவீட்டில் அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

Edappadi Palaniswami

செங்கோட்டையன் மோதல்

பின் அவரது கட்சி அலுவலகத்திற்கு புறப்பட்டு செல்லும் வழியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் 5 ம் தேதியன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் அந்த சந்திப்பின் போது அரசியல் நிலைப்பாடு குறித்து விரிவாக பேசுவதாக கூறினார் தொடர்ந்து, கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்திற்கு சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

நேற்று தனது ஆதரவாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதில் முக்கியமான சில விஷயங்களை பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நடத்திய ஆலோசனையில் பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பண்ணாரி பங்கேற்றதும் கவனம் பெற்றுள்ளது.

செங்கோட்டையன் என்ன பேசினார்?

இந்த மீட்டிங்கில் பேசிய செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை ஒன்றுசேர்க்க போகிறேன் என்று செங்கோட்டையன் பேசியதாக கூறப்படுகிறது. சசிகலா, ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருக்கு ஆதரவாக செங்கோட்டையன் பேசியதாக கூறப்படுகிறது. அதிமுக வெல்ல வேண்டும் என்றால் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும்.

கொங்கு மண்டல வாக்குகளை மட்டும் வைத்து எதுவும் செய்ய முடியாது. நாம் ஒன்றாக இருக்க வேண்டும். அதிமுக முன்னர் போல வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும். அதற்கு எல்லா தலைவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும், என்று செங்கோட்டையன் பேசியதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் மனம் திறந்து பேசப் போகிறேன் என்று செங்கோட்டையன் பேசி இருப்பது பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அவரின் பின்த் பேச்சுக்கு பின் சில முக்கியமான காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆறு மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. சில மாதங்களுக்கு முன் டெல்லி சென்ற அவர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை இருமுறை சந்தித்தார். அப்போதே அவர் பாஜகவில் இணையவுள்ளார் என்ற பேச்சுக்கு வழிவகுத்தது. இடையில் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்றும் பேச்சுக்கள் வந்தன.

செங்கோட்டையன் அதிர்ச்சி

இந்த நிலையில்தான் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், "வரும் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் மனம் திறந்து பேசப் போகிறேன். என்ன பேசப் போகிறேன் என்பதை அறியப் பொறுத்திருங்கள்" என்று கூறி உள்ளார். அவரது இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்த பரபரப்பிற்கு வலுசேர்க்கும் விதமாக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா புகைப்படங்களுடன் பெரியார் புகைப்படத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வைத்துள்ளார். பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்துள்ள நிலையில், பாஜகவை சீண்டும் விதமாக பெரியார் புகைப்படத்தை செங்கோட்டையன் பயன்படுத்தி உள்ளதால், அவர் திமுக அல்லது தவெக பக்கம் செல்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+