அன்புமணி மத்திய அமைச்சரானதே என்னால்தான்! இது துரோகமா? ஜி.கே.மணி உருக்கம்
சென்னை: அன்புமணியை மத்திய அமைச்சராக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸிடம் பரிந்துரைத்ததே நான்தான் என கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேப்பாக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: என் அப்பாவையும் என்னையும் ஜி.கே.மணி பிரித்துவிட்டார் என அன்புமணி கூறுகிறார். என்னை துரோகி என சொல்வது வேதனையாக இருக்கிறது.
நான் அன்புமணிக்கு எந்த வகையிலும் கெடுதலோ துரோகமோ செய்யவில்லை. அன்புமணியின் செயல்பாடுகளால்தான் ராமதாஸ் கண்ணீர் வடிக்கிறார்.
அன்புமணியை மத்திய அமைச்சராக்க வேண்டும் என ராமதாஸிடம் நான்தான் சொன்னேன். கூட்டணி பற்றி ஆரம்ப கட்டத்தில் பிற கட்சிகளுடன் நான்தான் பேசுவேன். அன்புமணியை வீட்டை விட்டு வெளியே வரச் சொல்லுங்கள் என ராமதாஸிடம் நிர்வாகிகள் கூறினர்.
உங்கள் மகன் அன்புமணியை நீங்கள் பார்க்காதீங்கள் என நான் சொல்ல முடியுமா, இல்லை நான் சொன்னால் ராமதாஸ் கேட்பாரா, பிறகு எப்படி நான் அவர்களை பிரிக்க முடியும்? ராமதாஸும் அன்புமணியும் உட்கார்ந்து பேசினால்தான் தீர்வு கிடைக்கும். வீட்டுக்குள் பேச வேண்டிய விஷயத்தை பொதுவெளியில் பேசியதால்தான் இத்தனை பிரச்சினை ஆரம்பித்தது.












Click it and Unblock the Notifications