மூளை இல்லாத சட்டம்! இனி பெங்களூர் வேண்டாம்! நாங்க சென்னை பக்கம் போகிறோம்! டெக் நிறுவனர் அதிரடி பதிவு
சென்னை: கர்நாடகாவில் கொண்டு வரப்பட்டு உள்ள புதிய வேலை வாய்ப்பு விதிகள் காரணமாக பெங்களூரின் டெக் நிறுவனம் ஒன்றின் இயக்குனர் சென்னைக்கே சென்றுவிடலாம் என்று இருப்பதாக போஸ்ட் செய்து உள்ளார்.
கர்நாடகாவில் நிர்வாகப் பணிகளில்.. அதாவது மேனேஜர் பொறுப்புகளில் உள்ளூர் மக்களுக்கு 50% இடஒதுக்கீடு மற்றும் மேலாண்மை அல்லாத பதவிகளில் 75% இடஒதுக்கீடு கட்டாயப்படுத்தும் மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உள்ளூர் மக்களுக்கு நிறுவனங்களில் வேலை கிடைக்கவில்லை என்றால், தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்கள் விதிகளில் தளர்வு கோரி அரசிடம் முறையிடலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜூலை 15 ஆம் தேதி முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலை தரும் கர்நாடக மாநில வேலைவாய்ப்பு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நிறுவனங்கள் 50% நிர்வாக பதவிகளிலும் 75% நிர்வாகமற்ற பதவிகளிலும் உள்ளூர் மக்களை நியமிக்க வேண்டும் என்று இதில் கூறப்பட்டு உள்ளது.
கர்நாடக விதி: அதன்படி கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர் மற்றும் 15 ஆண்டுகள் மாநிலத்தில் வசிக்கும் மற்றும் கன்னடத்தை தெளிவாகப் பேசவும், படிக்கவும் மற்றும் எழுதவும் திறன் கொண்டவர் மற்றும் நோடல் ஏஜென்சியால் நடத்தப்பட்ட தேவையான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும். இவர்களுக்கு மட்டுமே நிறுவனங்கள் 50% நிர்வாக பதவிகளிலும் 75% நிர்வாகமற்ற பதவிகளிலும் வேலை கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் அமைச்சரவை கூட்டங்களில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தனியார் நிறுவனங்களில் 'குரூப் சி & டி' பதவிகளில் கன்னடர்களுக்கு 100% இடஒதுக்கீடு கட்டாயமாக்கும் மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
போஸ்ட்: கர்நாடகாவில் கொண்டு வரப்பட்டு உள்ள புதிய வேலை வாய்ப்பு விதிகள் காரணமாக பெங்களூரின் டெக் நிறுவனம் ஒன்றின் இயக்குனர் சென்னைக்கே சென்றுவிடலாம் என்று இருப்பதாக போஸ்ட் செய்து உள்ளார். இது தொடர்பாக இன்பார்மல் டூல் என்ற நிறுவன ஐடி சார்பாக செய்துள்ள போஸ்டில், மிக மிக அருமை, இப்போது இதில் கவனம் செலுத்துகிறார்களா:) சரி உண்மை என்னவென்று பார்ப்போம்: கர்நாடகாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழில்நுட்பம் 25% பங்களிக்கிறது. இது ஆண்டுக்கு 3.5 லட்சம் கோடி.
இந்த மூளை இல்லாத நடவடிக்கையால் இந்த ஜிடிபியில் பாதி காணாமல் போக போவதை பாருங்கள். நான் சொல்வது ஒரு கூக்குரல், தரவைச் சரிபார்க்க என்னிடம் வர வேண்டாம். உலகளாவிய தொழில்நுட்ப ஜாம்பவான்கள் நம்முடைய தோசைகளுக்காக இங்கு வரவில்லை.
இது பலதரப்பட்ட திறமைக் களம். இங்கே அவர்கள் வர காரணமே நாட்டில் உள்ள திறமைதான். இப்போது அதில் "கன்னடம் மட்டும்" என்ற அடையாளத்தை கொண்டு வந்தால் நிலைக்குமா? இங்கே தொழில் வளருமா.
நாம் ஏற்கனவே ஹைதராபாத் மற்றும் புனேவுக்கு திறமையை இழந்து வருகிறோம். அங்கே பலர் சென்று கொண்டு இருக்கின்றனர். இப்படிப்பட்ட முடிவுகளால் இது நமது நிறுவனங்கள், பணியாளர்கள் அங்கே செல்ல போகிறார்கள்.
நான் இங்கு எனது நிறுவனத்தை உருவாக்க ஒரு 10 வருடத்தை செலவிட்டேன். இப்போது நான் சென்னையைப் பார்த்து போய்விடலாம் என்று இருக்கிறேன். .RIP பெங்களூர் தொழில்நுட்ப காட்சி, 1990-2024. மரணத்திற்கான காரணம்: மொழியியல் பேரினவாதம் மற்றும் அரசியல் கிட்டப்பார்வை, என்று அந்த இன்பார்மல் டூல் என்ற நிறுவனத்தின் நிறுவனர் போஸ்ட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications