Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்ப் பெண்ணுக்குத்தான் தாலி கட்டுவேன்! சைக்கிளில் வலம் வரும் சுவீடன் இளைஞர்! யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுவீடன் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தமிழ் மீது காதல் கொண்டு தமிழ்ப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளார். இவர் தமிழ்நாட்டில் உள்ள பல ஊர்களுக்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்டு ஊர் சுற்றி வருகிறார்.

இந்தியாவில் இருக்கும் இளம் தலைமுறை வெளிநாட்டுக்குப் போய் வேலை பார்த்து அங்கேயே செட்டில் ஆகிவிட மாட்டோமா என்று ஏக்கத்தில் இருக்கிறார்கள். இங்கே என்னடா என்றால், சுவீடன் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேகாத வெயிலில் ஒரு சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊர் ஊராகச் சுற்றி இந்தியாவைப் பற்றி தமிழ்நாட்டைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.

Tamil Nadu Sweden

ஆராய்ச்சிக்காக வந்த இந்த மாணவர் தமிழ்நாட்டின் கலாச்சாரம் பிடித்துப் போனதால் வேட்டி, சட்டை, துண்டு என ஏறக்குறைய 60 காலகட்டத்து இளைஞரைப் போல உடை உடுத்திக் கொண்டு தனது பெயரையும் மாற்றிக் கொண்டிருக்கிறார். யார் இவர்? என்ன ஆராய்ச்சி செய்கிறார்? அதைப்பற்றி அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் பல கதைகளைப் பேசி இருக்கிறார். இந்த இளைஞரின் பெயர் ஆடம். இந்தியாவில் இவரது பெயர் ஸ்ரீராம் என்கிறார். மேலும் தமிழைக் கற்றுக் கொண்டு அழகாக அதைப் பேசவும் செய்கிறார்.

இது பற்றி ஸ்ரீராம் பேசும்போது இல்லை ஆடம் பேசும் போது, "தமிழ் மொழி பேசும் போது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. ஆகவேதான் இந்த நாட்டு மக்களைப் போல வேஷ்டி, சட்டை, துண்டு எல்லாம் அணிந்துள்ளேன். எனக்குப் பிடித்து போய்தான் இதைச் செய்கிறேன். உலகின் மிகப் பழமையான மொழி தமிழ் என்பது எனது ஆராய்ச்சி மூலம் அறிந்துகொண்டேன். இந்த மொழிக்குப் பின்னால் உள்ள வரலாற்றையும் அதன் வேர்களையும் தெரிந்து கொள்ள விரும்பினேன். அது பற்றிய தேடல் எனக்குச் சுவாரஸ்யம் தருவதாக இருந்தது. அதனால் தான் எனக்குத் தமிழ் பிடித்துப் போனது" என்று சொல்பவருக்கு வருகாலத்தைப் பற்றிய ஒரு கனவு இருக்கிறது. அது என்ன? அவரே சொல்கிறார், "எனக்குத் தமிழ் மக்களைப் பிடித்துப்போய் விட்டது. ஆகவே தமிழ் பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொள்ள ஆசைப்படுகிறேன்" என்று சொல்லி கண் அடிக்கிறார் சைகை காட்டுகிறார்.

அது சரி, என்ன ஆய்வு செய்ய இந்தியா வந்திருக்கிறார் இவர், அதைக் கேட்டபோது, “நான் ஆய்வு செய்வதற்காக வந்திருக்கிறேன். இங்குள்ள குடும்பம் மற்றும் கலாச்சாரத்தை அறிந்துகொள்ள வேண்டி இருக்கிறேன். அதுதான் என் ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம். அதற்காகக் கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கோயமுத்தூர், திருவண்ணாமலை ஆகிய ஊர்களை தமிழ்நாட்டில் சுற்றிப் பார்த்தேன். என்னுடைய புரிதலில் தமிழர்கள் மிகவும் நேர்மையானவர்கள் எனச் சொல்வேன். அன்பானவர்களாக இருக்கிறார்கள். எந்தச் சூழ்நிலையிலும் உதவி செய்யத் தயாராக இருக்கிறார்கள். அதை அனுபவ ரீதியாக பார்த்துள்ளேன். இந்தியாவில் பல மாநிலங்களுக்கு நான் பயணம் செய்துள்ளேன். ஆனால், தமிழர்கள் அளவுக்கு ஒரு வெளிப்படையான மக்களை நான் பார்க்கவில்லை. திறந்த மனதுடன் இவர்கள் இருப்பதை உணர்ந்துள்ளேன்.

அதே மாதிரி அதிக நேரம் ஜப்பானியர்களைப் போலவே உழைக்கிறார்கள். அவர்களின் உழைப்பு மீது ஒரு மரியாதை வருகிறது. வெளிநாட்டவர் போல நேரம் ஒதுக்கு நான் தமிழ் மொழி, கலாச்சாரம் போன்றவற்றைச் சொல்லித் தருகிறேன். அதைப் பெரிய விசயமாக நினைக்கிறேன். நான் கேரளாவுக்கும் போயிருந்தேன். அவர்களின் கலாச்சாரம் பற்றியும் நிறையப் பார்த்து கற்றுக்கொண்டேன். அதன் மீதும் எனக்கு ஒரு மதிப்பு வந்தது. தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது பெரிய வித்தியாசத்தை நான் உணரவில்லை. நிறைய ஒற்றுமைகள் இருந்ததைப் பார்த்தேன். கேரளாவை இந்தியாவில் உள்ளவர்கள் கடவுளின் நாடு என்று குறிப்பிடுகிறார்கள். தமிழ்நாட்டின் அண்டை மாநிலமாக இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் நட்புடன் இருப்பதைப் பார்த்தேன். வேற்றுமை இல்லாமல் இந்த மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள்.

வெளிநாட்டவருக்கு இந்தியா பாதுகாப்பான நாடு என்பதை உணருகிறீர்களா? என்று கேட்டதற்கு அவர், “நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்துப் பாதுகாப்பு உள்ளது. ஏனெனில் வேறுபாடுகள் உள்ளன. ஒரு சுற்றுலாப் பயணியாக அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதும் முக்கியமானது. நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே மரியாதையும் பாதுகாப்பும் கிடைக்கும். ஆகவே, பயணம் மேற்கொள்வதற்கு முன்பே இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் பண்பாட்டை நாம் அறிந்து கொள்ளப் போகிறோம் என நல்ல நோக்கத்துடன் அவர்களை நாம் பார்க்கவேண்டும். பழக வேண்டும். நாம் ஒரு சமூகத்தைப் புரிந்து கொள்வதற்காக அதற்குள்ளாகப் போகும் போது மரியாதையுடன் செல்ல வேண்டும். அப்போதுதான் நாம் நல்ல அனுபவத்தைப் பெற முடியும். இந்தியா என்றால், அந்த மக்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்ற முன்முடிவுடன் செல்லக்கூடாது. அந்தப் பழைய மனநிலையை உதறிவிட்டுச் செல்ல வேண்டும். முதல்முறையாக வந்த போதே நான் அப்படியான மனநிலையில் தான் வந்தேன். ஆகவே எனக்கு வேறுபாடுகள் தெரியவில்லை. எனது நாட்டில் இருப்பதைப் போன்றே உணர்ந்தேன்” என்கிறார். தமிழ்நாட்டைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தமிழ் சினிமா பார்க்கவேண்டுமே? பார்த்தாரா? அது பற்றிப் பேசிய ஆடம், “இங்கு வந்த பிறகு கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்’ படம் பார்த்தேன். அவரது நடிப்பு பிடித்துப்போனதால் எனக்கு கமல்ஹாசன் மீது அன்பு வந்துவிட்டது”என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+