ஆஜராக முடியாது.. என்ன பண்ணுவீங்க.. ஒசூரிலிருந்து சவால் விட்ட சீமான்.. வீட்டின் முன் குவிந்த போலீஸ்!
சென்னை: சென்னை நீலாங்கரை சீமான் வீட்டு முன்பு போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர் போலீசாருக்கு சவால் விடுத்துள்ள நிலையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழித்து போலீசாருடன் தகராறு ஏற்பட்டதால் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளனர். சீமான் வீட்டில் இன்று நடந்த களேபரத்தை அடுத்து அங்கு நாதகவினர் வருகை புரிந்து வருவதால் அங்கே பதற்றமான சூழல் ஏற்பட்டு வருகிறது.

சீமானின் வீட்டுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என போலீசாரிடம் வாக்குவாதம் செய்து வருகின்றனர். முன்னதாக என்னை அசிங்கப்படுத்துவதற்காக இப்படி செய்யப்படுகிறது. நான் ஆஜராவேன் என உறுதி செய்யப்பட்ட பிறகும் என் வீட்டில் ஏன் சம்மன் ஒட்ட வேண்டும், நான் இனி ஆஜராக மாட்டேன்.. நீங்கள் என்ன செய்வீர்கள்.. உங்களால் என்ன செய்ய முடியும் என்று சீமான் சவால் விடுத்துள்ளார். அவர் ஓசூரில் இருந்து பேட்டி அளித்த நிலையில் சென்னை நீலாங்கரை சீமான் வீட்டு முன்பு போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோர்ட் ஒட்டும் சம்மனை கிழிக்க கூடாது என்ற விதி உள்ளது.
ஆனால் அதை மீறி நடிகை பாலியல் வழக்கில், சீமான் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் என அவரது வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டது. சம்மன் கிழித்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளரை சீமான் வீட்டு காவலாளி தாக்கியதால் அவரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தது போலீஸ்.
சீமான் காவலாளி மிரட்டல்
விசாரணைக்கு வந்த போலீசாரை சீமான் வீட்டின் காவலாளி தாக்கியதுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்தார். இதையடுத்து போலீசார் அங்கே வந்து காவலாளி சுபாகர், அமல்ராஜ் இருவரையும் கைது செய்தனர். அதோடு அவரின் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
சீமான் நாளை காலை விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய சீமானின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், நடிகை அளித்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது.
சீமான் துப்பாக்கி
சீமான் வீட்டு காவலாளியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியில் இருந்து 20 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. முன்னாள் ராணுவ வீரரான அமல்ராஜ் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர். நாதகவில் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக சீமான் வீட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்
2010ம் ஆண்டு முதல் லைசன்ஸ் பெற்று துப்பாக்கி வைத்துள்ளார். எனினும், தனிப்பட்ட பாதுகாப்புக்காக பெறப்பட்ட துப்பாக்கியை, சட்ட விரோதமாக தொழில் ரீதியாக அவர் பயன்படுத்தி வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
வழக்கறிஞர் மறுப்பு
சீமான் வழக்கறிஞர் டீம் அளித்துள்ள விளக்கத்தில், சீமான் வீட்டு காவலாளி போலீசாரை தாக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக நெருக்கடி கொடுக்கப்படுகிறது.
முன்னாள் ராணுவ வீரர் என்பதால் உரிமம் பெற்ற துப்பாக்கியை காவலாளி வைத்துள்ளார். நோட்டீஸ் ஒட்டிய பின் அதில் உள்ள தகவலை தெரிந்த பின்னரே கிழித்துள்ளனர். சீமான் வீட்டில் குண்டு வீசப்போவதாக வந்த தகவலால் காவலாளி துப்பாக்கியுடன் இருந்தார், என்று சீமான் வழக்கறிஞர் டீம் தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications