விட மாட்டேன் சின்மயியை.. என் கிட்டேயே மோதுகிறாரா.. ராதாரவி ஆவேசம்
சின்மயியை நான் சும்மா விட மாட்டேன் என்று ராதாரவி கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: "வைரமுத்துவை முதல்ல பிளாக் மெயில் பண்ண பார்த்தார்... முடியல.. இப்போது என்கிட்ட வந்திருக்கிறார்... சின்மயியை சும்மா விடப் போவதில்லை" என்று நடிகர் ராதாரவி காட்டமாக தெரிவித்துள்ளார்.
வைரமுத்து மீதான மீடூ பாலியல் புகார் சம்பந்தமாக இன்னமும் ஆதாரத்தை சின்மயி வெளியிடாத நிலையில், தற்போது ராதாரவியுடன் அவருக்கு மோதல் ஆரம்பித்துள்ளது.
டப்பிங் யூனியலிருந்து சமீபத்தில் சின்மயி நீக்கப்பட்டார். இந்த சங்கத்தின் தலைவர் ராதாரவி ஆவார். சங்கத்துக்கு சந்தா தொகையை சின்மயி ஒழுங்காக செலுத்தவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சங்கம் விளக்கம் அளித்தது.

பட வாய்ப்புகள்
ஆனால் "நான் வாழ்நாள் கட்டணத்தை சங்கத்துக்கு செலுத்தி விட்டேன்" என்று சின்மயி தெரிவித்திருந்தார். எனினும் முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசி வந்ததால் நிறைய பட வாய்ப்புகளை இதன் மூலம் சின்மயி இழந்து வருகிறார்.

டத்தோ பட்டம்
இந்த நிலையில், ராதாரவி மீது சின்மயி புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார். ராதாரவி தன் பெயருக்கு முன்னால் சேர்த்து கொள்ளும் டத்தோ பட்டம் பொய்யானது, அப்படி ஒரு பட்டமே அவருக்கு வழங்கவில்லை என்று சின்மயி கூறியுள்ளதுடன், இது தொடர்பாக மலேசியா நாட்டின் மெலோகா மாநில அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு வந்த பதிலையும் தனது டுவிட்டரில் வெளியிட்டார்.

ஆதாரம் இருக்கிறது
இது குறித்து ராதாரவி கூறும்போது, "வைரமுத்துவை சின்மயி பிளாக் மெயில் பண்ண பார்த்தார். முடியல. இப்போ என்கிட்ட வந்திருக்கிறார். மலேசியாவில் டத்தோ பட்டம் யார் யார் வழங்குகிறார்கள் என்ற விவரம் கூட தெரியாமல் இவர் இருக்கிறார். எனக்கு அந்த பட்டத்தை தந்ததற்கான ஆதாரம் இருக்கிறது. சின்மயி வைத்திருக்கும் அந்த மலேசிய நாட்டின் ஆதாரம்தான் பொய் என நினைக்கிறேன்.

சும்மா விட மாட்டேன்
இப்போ நான் வெளியூரில் இருக்கிறேன். 2 நாளில் சென்னை வருவேன். வந்ததும் பட்டம் குறித்த ஆதாரத்தை கண்டிப்பாக வெளியிடுவேன். அதன்பிறகு எனக்கு பட்டம் தந்தவர்களே சின்மயி மீது நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் நான் சின்மயியை சும்மா விடப்போவதில்லை" என்று பதிலடி தந்திருக்கிறார்
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications