உதயநிதியின் தரமான பதில்.. "ஏன்னு தெரியல.. ஆனால்".. ஒரே போடாக போட்டு மாஸ்..!

தொகுதியில் மறுதேர்தல் நடத்தினாலும் வெற்றி பெறுவேன் என்று உதயநிதி சொல்கிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதி ஸ்டாலினின் தொகுதியில் மறுதேர்தல் நடக்குமா? அப்படி நடந்தால், உதயநிதி மீண்டும் வெற்றி பெறுவாரா? என்ற கேள்விகள் எழும் நிலையில், இதற்கு எம்எல்ஏ உதயநிதியே ஒரு நச் பதிலை தந்துள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் உதயநிதி ஸ்டாலின்... ரிசல்ட் அன்று, மற்ற தொகுதிகளில் வாக்குகள் எண்ணி முடிக்கப்படாத நிலையில், மதியானமே அதாவது முதல் நபராக வெற்றி பெற்றது உதயநிதிதான். முதல் முறையாக எம்எல்ஏவாகவும் உயர்ந்துள்ளார்..!

இவருக்கு இளைஞர் அணி பொறுப்பு தரும்போது, கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார்.. அவ்வளவு ஏன் சொந்த கட்சியிலேயே சில மூத்த தலைகள் புழுங்கினர்.. அதிருப்திக்குள்ளாயினர்.. வாரிசு அரசியல் எல்லை மீறி செல்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

 முக ஸ்டாலின்

முக ஸ்டாலின்

கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்ற முறையில், திடுதிப்பென்று உதயநிதிக்கு பெரிய பெரிய பொறுப்புகள் தரப்படுகின்றன என்ற பேச்சுக்களும் எழுந்தன.. ஆனால், இது எதற்குமே உதயநிதி பதில் சொன்னதே இல்லை.. யாருக்கும் பதிலடியும் தந்தது இல்லை.. அப்படி பேசியவர்கள் குறித்து சர்ச்சையான கருத்தையும் வெளியிட்டதில்லை.

 உதயநிதி

உதயநிதி

இதற்கெல்லாம் சேர்த்து வைத்த மாதிரி, தன்னுடைய தொகுதிக்குள் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறார்.. விழுந்து விழுந்து மக்களை கவனித்து கொண்டிருக்கிறார்.. அக்கறையுடன் குறைகளை கேட்டுக் கொண்டிருக்கிறார்.. உடனுக்குடன் அவைகளை நிறைவேற்றி கொண்டிருக்கிறார்.. உதயநிதி போற ஸ்பீடை பார்த்தால், சென்னை மேயர் ஆகிவிடுவார் போலயே என்ற முணுமுணுப்புகளும் எழுந்து வருகின்றன.

Recommended Video

    அதிக அளவில் Vaccine போட்ட Chepauk தொகுதி.. சாதித்து காட்டிய Udhayanidhi Stalin
     வழக்கு

    வழக்கு

    இப்படிப்பட்ட சூழலில்தான், திடீரென ஒருத்தர் கேஸ் போட்டுள்ளார்.. உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிட்ட தேசிய மக்கள் கட்சி வேட்பாளரும், வக்கீலுமான எம்எல் ரவி என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்...

     குற்றங்கள்

    குற்றங்கள்

    அதில், "உதயநிதி தாக்கல் செய்த மனுவில் தன் மீதான குற்ற வழக்குகள் குறித்து தவறான தகவல்களை அளித்துள்ளார், எனவே அவரது வேட்புமனுவை ஏற்றுக் கொண்டதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.தொகுதியில் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்று அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் உதயநிதியிடமே இதை பற்றி கேள்வி எழுப்பினர்.

     வழக்கை சந்திப்பேன்

    வழக்கை சந்திப்பேன்

    அதற்கு அவர், "இந்த வழக்கு எதனால் போட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை... எனக்கு தெரிந்தவரை எல்லாத்தையும் சரியாகத்தான் செய்திருக்கிறோம்... ஒருவேளை வழக்கு விசாரணையில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கோர்ட்டில் சொன்னால், அதையும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வோம்... இப்போ நான் வாங்கியுள்ள வாக்குகளை விட, இன்னும் கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை உள்ளது... இந்த வழக்கையும் சட்டப்படி சந்திப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+