சென்னை நிலம்.. 37 வருடம் கழித்து ஸ்ரீதேவி குடும்பத்தினருக்கு சிக்கல்.. ஐகோர்ட் தீர்ப்பால் தீர்ந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 1988-ம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்​கரை சாலை​யில் 2.7 ஏக்​கர் நிலத்​தை, சம்​பந்த முதலி​யார் என்​பவரது குடும்​பத்​தினரிடம் இருந்து விலைக்கு வாங்​கியிருந்தார். அந்த நிலத்தில் பங்கு கேட்டு சம்​பந்த முதலி​யார் மகன் சந்​திரசேகரனின் 2-வது மனை​வி​யின் மகன் நடராஜன் மற்​றும் மகள் சிவ​காமி ஆகியோர் அந்த சொத்​துக்கு உரிமை கோரி​யும், சொத்​தில் பங்கு கேட்​டும் செங்​கல்​பட்டு கூடு​தல் அமர்வு நீதி​மன்​றத்​தில் உரிமை​யியல் வழக்கு தொடர்ந்​தனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, 1988-ம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 2.7 ஏக்கர் நிலத்தை, சம்பந்த முதலியார் என்பவரின் குடும்பத்தினரிடம் இருந்து வாங்கியுள்ளார். கடந்த 37 ஆண்டுகளாக சொத்தை அனுபவித்து வந்தனர். இதில் சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரன் முதலியாரின் இரண்டாவது மனைவியின் மகன் நடராஜன், மகள் சிவகாமி ஆகியோர் வாரிசு சான்றிதழ் பெற்று, சொத்து விற்பனையை செல்லாது என அறிவிக்கக் கோரியும், சொத்தில் பங்கு கோரியும் செங்கல்பட்டு கோர்ட்டில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தார்கள். சுமார் 38 ஆண்டுகள் கழித்து சொத்து விற்பனை செல்லாது என்று அறிவிக்க கோரியிருந்தனர்.

Chennai land which arose for Sridevi s family after 37 years resolved after HC Verdict

எனினும் இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், அவரது மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம், முழு​மை​யான விசா​ரணைக்​குப் பிறகே சொத்​தின் உரிமை குறித்து முடி​வெடுக்க முடி​யும் என்று கூறி போனி கபூர் மற்​றும் அவரது மகள்​களின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து போனிகபூர், ஜான்வி கபூர், குஷி கபூர் கூட்டாக சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​தில் மனு தாக்கல் செய்தனர். அதில், 'அந்த சொத்தை சட்​டப்​படி விலைக்கு வாங்கி அனுப​வித்து வரும் நிலை​யில் போலி வாரிசு சான்​றிதழ் மூல​மாக 37 ஆண்​டு​களுக்​குப் பிறகு தற்​போது சிலர் உரிமை கோரி வழக்கு தொடர்ந்​துள்​ளனர். எனவே, செங்​கல்​பட்டு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள வழக்கை நிராகரிக்க வேண்​டும்' என்று கோரிக்கை வைத்திருந்தனர்

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.வி. தமிழ்செல்வி, "ஏற்​கெனவே ஸ்ரீதே​வி​யின் குடும்​பத்​தா​ருக்கு எதி​ராக இந்த சொத்​தில் பங்கு கேட்டு நடராஜன் மற்​றும் சிவ​காமி ஆகியோர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​துள்​ளது. ஆனால், அவர்​கள் சொத்தை அபகரிக்​கும் நோக்​கில் செங்​கல்​பட்டு நீதி​மன்​றத்​தி​லும் வழக்கு தொடர்ந்​திருப்​பது ஏற்புடையது கிடையாது. எனவே ஸ்ரீதேவி குடும்பத்தார் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். அத்துடன் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி குடும்பத்தினருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள உரிமையியல் வழக்கையும் நிராகரிக்கிறேன்" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+