தடுமாறும் விஜய்? "விசிக, கம்யூனிஸ்ட்" கைகளில் துருப்பு சீட்டு.. நேரில் சந்திக்கும் தவெக நிர்வாகிகள்
சென்னை: சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான மேஜிக் எண்ணை எட்ட முடியாமல் விஜய் தடுமாறி வருகிறார். மலை போல் நம்பியிருக்கும் விசிகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இன்னும் பச்சைக்கொடி காட்டாத நிலையில் இன்று அதிரடி திருப்பமாக தவெக நிர்வாகிகள் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரியுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை இல்லை என்பதால் அந்த கட்சி ஆட்சி அமைப்பில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தவெகவிற்கு 108 இடங்கள் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்களுடன் 113 ஆக பலம் உயர்ந்துள்ளது.

கம்யூனிஸ்ட்களின் முடிவை பொறுத்து - திருமா
எனினும் மெஜாரிட்டிக்கு 118 தேவை என்பதால் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் மறுத்து வருகிறார். விஜய் பெரும்பான்மை எண்ணிக்கையை காட்டினால் மட்டுமே அழைப்பு விடுக்க முடியும் என்று ஆளுநர் தரப்பில் கூறியதாக சொல்லப்படுகிறது. விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை பெற விஜய் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்த கட்சிகள் தொடர்ந்து போக்கு காட்டி வரும் நிலையில் இதுவரை தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. நாளை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி தங்கள் முடிவை அறிவிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளன. கம்யூனிஸ்ட்களின் முடிவை பொறுத்து தங்களின் முடிவை அறிவிப்பதாக விசிக தலைவர் தொல் திருமாவளவனும் கூறியுள்ளார்.
நேரில் சந்தித்து ஆதரவு கோரும் தவெக
நொடிக்கு நொடி தமிழக அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. மற்றொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஆளுநரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை இது ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் ஏற்கனவே அதிமுக - திமுக இணைந்து ஆட்சி அமைக்க ஆலோசிப்பதாக நேற்று முதலே அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்த நிலையில் ஆளுநர் தாமதமும் இதற்கு கூடுதல் வலு சேர்ப்பதாக அமைந்து இருக்கிறது. இத்தகைய பரபரப்பான சூழலில், தவெக தரப்பில் இருந்து விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோர திட்டமிடப்பட்டுள்ளது.
சண்முகத்திடம் நேரில் சந்திப்பு
சிடிஆர் நிர்மல் குமார் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "ஆதரவை கோரியுள்ளோம். ஆலோசித்து முடிவு செய்வார்கள். பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோரவில்லை. ஆளுநர் முடிவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
விசிக தலைவர் தொல் திருமாவளவனையும் தவெக மூத்த நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு கோர உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய், திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது ஆதரவை கோரியிருந்த நிலையில், தற்போது நேரில் சந்தித்து ஆதரவு கோர இருக்கிறார்கள்.
சிபிஎம் மாநில செயலாளர் சண்முகத்தையும் தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் சந்தித்து பேசினார். மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழக அரசியலில் நொடிக்கு நொடி மாறுபடும் அதிரடி திருப்பங்கள் உச்ச கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா!












Click it and Unblock the Notifications