மோடிகிட்ட பேசுறேன்! அடித்து சொன்ன நிர்மலா! வாள் சுற்றிய அண்ணாமலை! ஸ்டாலின் +எடப்பாடிக்கு ஒன்றாக குறி
சென்னை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சமீபத்தில் டெல்லியில் அண்ணாமலையும் அமைச்சர் முருகனும் சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. சந்திப்பின் போது திமுக, அதிமுக பற்றி ஒன்றாக பேசி உள்ளனர் 3 பேரும்.
மழை வெள்ளம் பாதிப்புகள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மழை வெள்ள பாதிப்புகளை ஆராய்ந்த மத்திய அரசு குழு தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்திருந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்த போது, தென்மாவட்ட வெள்ளப் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. ஒருநாள் முழுவதும் டெல்லியில் இருந்து I.N.D.I.A கூட்டணி கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போகிறபோக்கில் சந்தித்துக்கொள்ளலாம் என்ற தோரணையில் பிரதமர் மோடியை இரவில் சந்தித்தார் என் மக்களை நான் பார்க்க வேண்டும் என்று கூட்டணியினரிடம் சொல்லிவிட்டு, 'என் மண் என் மக்கள்'தான் முக்கியம் என்று முதலமைச்சர் சென்றிருக்க வேண்டாமா?
நிர்மலா சீதாராமன்: ரூ.4,000 கோடி செலவு செய்திருக்கிறோம். என்ன மழை வந்தாலும் சென்னைக்கு ஒன்றும் ஆகாது' என ஒரு தமிழ்நாடு அமைச்சர் பேசினார். ஆனால், சென்னையில் வெள்ளம் வந்த பிறகு, 42% தொகை மட்டுமே செலவு செய்தோம் என்கிறார். வானிலை ஆய்வு மையம் துல்லியமாக முன்னறிவிப்பு செய்யவில்லை என்று குற்றம்சாட்டுபவர்கள், ஏன் ரூ4,000 கோடி பற்றி தவறான தகவலை கொடுத்தார்கள்?
ரூ.6,000 நிவாரணத் தொகையை வங்கிக்கணக்கு மூலம் அளிக்கலாமே; ஏன் ரொக்கமாக வழங்குகிறீர்கள்? ரூ.6,000 ரொக்கமாக வழங்கியதற்கு பதில் வங்கியில் செலுத்தினால் வெளிப்படைத்தன்மை இருக்கும். ஏன் அந்த வெளிப்படைத்தன்மை இல்லை, என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மழை வெள்ளம்: இந்த நிலையில்தான் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சமீபத்தில் டெல்லியில் அண்ணாமலையும் அமைச்சர் முருகனும் சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. சந்திப்பின் போது, மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்கள் திமுக, அதிமுக மீது கோபமாக இருக்கிறார்கள்.
இதனை பயன்படுத்தி பாஜகவினர் களத்தில் இறங்கி மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கியிருக்கிறோம். நமோ கிச்சன் திறந்து மக்களுக்கு தேவையான உணவுகளும் வழங்கியிருக்கிறோம் என்று கூறிவிட்டு, அதிமுக அரசியலை கையிலெடுத்துள்ளனர். ஏற்கனவே எடப்பாடிக்கு எதிராக வாள் சுழற்றி வரும் அண்ணாமலை, தற்போது ஓபிஎஸ்சுக்கு எதிராகவும் நிர்மலா சீத்தாராமனிடம் வாள் சுழற்றியுள்ளார்.
நமோ கிச்சன்: அதாவது, இயற்கை பேரிடரால் வட தமிழகமும் தென் தமிழகமும் கடுமையாக பாதிக்கப்பட்ட சூழலிலும் ஓபிஎஸ் அவர்கள், களத்தில் இறங்கவில்லை. குறிப்பாக, தென்மாவட்டங்களில் ஓபிஎஸ்சுக்கு முக்குலத்தோர் சமூகத்தில் செல்வாக்கு இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய ஓபிஎஸ் அக்கறை காட்டவில்லை.
ஓபிஎஸ் அதிருப்தி; இதனால் ஓபிஎஸ் மீது தென்மாவட்ட மக்கள் கோபமாக இருக்கிறார்கள். அதனால், ஓபிஎஸ்சை பாஜக கூட்டணியில் சேர்ப்பதாக இருந்தால் அதனை பரிசீலனை செய்ய வேண்டும் மேடம். தென்மாவட்டத்தில் உள்ள முக்குலத்தோரும் பிள்ளைமார் சமூகமும் நம் பக்கம் (பாஜக) வரத்தொடங்கி விட்டனர். அதனால் ஓபிஎஸ்சுக்கு தென்மாவட்டங்கள் கைக்கொடுக்கும் என்கிற அரசியல், தற்போது சரிந்துள்ளது. அதனால், ஓபிஎஸ்சை தள்ளி வைத்தே தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் மேடம் என்று நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி அரசியல் பேசியிருக்கிறார்கள் அண்ணாமலையும் முருகனும்.

இது மட்டுமல்ல ; திமுகவை குறி வைத்தே ரெய்டு தாக்குதல்களை நாம் நடத்துவதாக திமுகவும் அதன் தோழமைக்கட்சிகளும் காழ்ப்புணர்ச்சியோடு நம்மை குற்றம் சாட்டுகின்றன. இதனை உடைக்க அதிமுக மாஜிக்கள் மீதும் நாம் சட்ட ரீதியிலான தாக்குதலை நடத்தினால் மக்களிடம் பாஜகவுக்கான பாசிட்டிவ் வைப் உருவாகும் மேடம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதனையெல்லாம் நோட் பண்ணிக்கொண்ட நிர்மலா, பி.எம்.மிடம் (மோடி) பேசுகிறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்துள்ளார் என்கின்றனர் அண்ணாமலை ஆதரவு பாஜகவினர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications