தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் உடல் நலம் பெற விழைகிறேன்.. தவெக விஜய் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் விரைந்து பூரண நலம்பெற வேண்டும் என வெக தலைவரும், நடிகருமான விஜய் கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றுக் கடமையாற்றிட விழைகிறேன் என்று தவெக விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 21 ஆம் தேதி லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் பரிசோதனை முழுமையாக செய்து பார்க்கப்பட்டது. அதில் எந்த பிரச்சனையும் இருப்பதாக கண்டறியப்படவில்லை.

i-wish-tamil-nadu-chief-minister-stalin-a-speedy-recovery-tvk-leader-vijay

அலுவலக கோப்புகளில் கையெழுத்திட்டார்

அதன் பிறகு மறுநாள் தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை அழைத்து சென்று அங்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஸ்கேன் எடுத்தும் பார்க்கப்பட்டது. அதிலும் அவருக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் தெரியவில்லை. அன்றைய தினமே மீண்டும் ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு அவர் அழைத்து வரப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

நேற்று ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த படியே அலுவலக கோப்புகளில் கையெழுத்திட்டார். உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து காணொலி வாயிலாக மருத்துவமனையில் இருந்து ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர்களுடன் செல்போன் வீடியோ அழைப்பு மூலமாக தொடர்பு கொண்டு பேசினார். முகாம்களுக்கு வந்திருந்த பொதுமக்களிடம் அவர் கலந்துரையாடினார்.

மருத்துவமனை அறிக்கை

இன்று காலை 7.30 மணியளவில் மு.க. ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. இதில் எந்த பிரச்சனையும் கண்டறியப்படவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், முதல்வர் ஸ்டாலினுக்கு இதயத்துடிப்பில் ஏற்பட்ட சில வேறுபாடுகள் காரணமாக தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்வற்கு இன்று சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் நலமாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ட்வீட் பதிவு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தவெக தலைவர் விஜய்யும் இன்று முதல்வர் விரைவில் உடல் நலம் பெற விழைகிறேன் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் பதிவிட்டு இருப்பதாவது;- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றுக் கடமையாற்றிட விழைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாட்களில் முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்புவார் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+