Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வானில் ஒரு தீபாவளி.. சென்னையே கலர் கலரா மின்னப்போகுது! மெரினாவில் நாளை பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவையொட்டி நடைபெறும் இந்த விமான சாகச கண்காட்சியை பார்ப்பது எப்படி? டிக்கெட் தேவையா? எப்படி செல்வது என்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவையொட்டி, நாளை சென்னையில் மெரினா கடற்கரையில் விமான சாகச கண்காட்சி நடைபெற உள்ளது. மெரினா கடற்கரையில் இதுபோன்ற விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்படுவது இதுவே முதல்முறை. நாளை காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை இந்த சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த பிரமாண்ட சாகச நிகழ்ச்சியை பொதுமக்களும் கண்டுகளிக்கலாம்.

marina beach air force

விமான சாகச நிகழ்ச்சியை காண கட்டணம் இல்லை: நாளை நடைபெற உள்ள விமான சாகச காட்சியை நேரில் காண்பது எப்படி என்ற விவரத்தைப் பார்க்கலாம். இந்திய விமானப்படையின் சென்னை ஏர் ஷோ 2024 -வை காண டிக்கெட் கட்டணம் எதுவும் இல்லை. விமான சாகச நிகழ்ச்சியை காண்பதற்கு பாஸ் எதுவும் தேவை இல்லை. வாகனங்களை நிறுத்த மட்டுமே பாஸ் தேவை. நிகழ்ச்சியை பார்ப்பது எப்படி என இங்கே அறிந்து கொள்ளலாம்.

சீக்கிரம் சென்றால்: விமானப்படையின் இந்த பிரமாண்ட சாகச நிகழ்ச்சியை, எந்தவித கட்டணமும் இன்றி பொதுமக்கள் இலவசமாகவே கண்டுகளிக்கலாம். விமான சாகசத்தை நேரில் காண விரும்பினால், நாளை சீக்கிரமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும். பொதுமக்களின் நுழைவில், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சீக்கிரமாக செல்பவர்களுக்கு, அனைத்து நிகழ்வுகளையும் பார்க்க சிறந்த இடம் கிடைக்கும்.

மொத்தம் 72 விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன. ஏர் ஷோவில் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து ஸ்டண்ட் ஷோக்கள் மற்றும் நிகழ்ச்சிகளையும், இந்திய விமானப்படையின் எலைட் அணிகள் நிகழ்த்த உள்ளன.

அசத்தல் விமானங்கள்: விமானப் படையின் ஆகாஷ் கங்கா அணி, சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி, சாரங் ஹெலிகாப்டர்கள், சுகோய்-30 எம்கேஐ, மிராஜ் 2000, மிக்-29, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக விமானமான தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் 1971 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்ட டகோட்டா மற்றும் ஹார்வர்ட் ஆகிய விமானங்களும், அதிநவீன போர் விமானமான ரஃபேல் விமானம் உள்ளிட்டவையும் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன.

உலக சாதனை: சாகச பயிற்சிக்கான ஒத்திகையை விமானப்படை ஏற்கனவே தொடங்கி நாள்தோறும் வானில் நடத்தி வருகிறது. சென்னை வான்பரப்பில் நண்பகல் நேரங்களில் விமானங்கள் சீறிப்பாய்ந்து பொதுமக்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றன. இன்றும் நண்பகலில் விமான சாகச ஒத்திகை நடைபெறுகிறது. சென்னையில் நாளை நடைபெறும் இந்த விமான சாகச நிகழ்ச்சிக்கு வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்தால், உலக சாதனையை முறியடிக்கும்.

பார்க்கிங்: விமான சாகச நிகழ்ச்சியை காண வருவோர் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் ஏரியாக்களும் சென்னை போக்குவரத்து காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. காமராஜர் சாலையில் கடற்கறை சாலை விஐபி- விவிஐபி கார் பார்க்கிங், பிரசிடன்சி கல்லூரி, சுவாமி சிவானந்த சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி (நீல வண்ண பாஸ் மட்டும்) வாகனங்களை நிறுத்தலாம். சாந்தோம் சாலையில் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் சிஎஸ்ஐ பள்ளி, செயின்ட் பெட்ஸ் மேல்நிலைப் பள்ளி, புனித சாந்தோம் பள்ளி, செயின்ட் பெட்ஸ் மைதானம், கதீட்ரல் ஆரம்ப பள்ளி, சமுதாய கூடம், சாந்தோம், லூப் ரோடு (ஒரு பக்க பார்க்கிங்) ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்தலாம்.

ஆர்.கே.சாலையில் எம்ஆர்டிஎஸ்- லைட் ஹவுஸ் சாலை, என்கேடி பள்ளி (ஐஸ் ஹவுஸ் சந்திப்பு), குயின் மேரிஸ் கல்லூரி, புனித எபாஸ் பள்ளியில் வாகனங்களை நிறுத்தலாம். வாலாஜா சாலையில் கலைவாணர் அரங்கம், ஓமந்தூரார் மருத்துவ மைதானம் (பிரஸ் கிளப் சாலை நுழைவு), விக்டோரியா விடுதி மைதானம், அண்ணாசாலையில் தீவுதிடல் மைதானம், பொதுப்பணித்துறை மைதானம் (செயலகம் எதிரில்), மன்றோ சிலை முதல் பல்லவன் சாலை சந்திப்பு வரை, எம்.ஆர்.டி.எஸ் சிந்தாதிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்தலாம்.

இந்த வாகன நிறுத்துமிடங்கள் காலை 9.30 மணிக்கு மூடப்படும். எனவே, தனியார் வாகனத்தில் நிகழ்ச்சியை பார்வையிட விரும்பும் பார்வையாளர்கள் கூடிய விரைவில் வருகை தர வேண்டும். ஏர் ஷோவை பார்வையிட வாகன ஓட்டிகள் அண்ணாசாலை, வாலாஜா சாலை மற்றும் சுவாமி சிவானந்தா சாலையை பயன்படுத்தலாம்.

சென்னையில் இந்த ரூட்ல போக முடியாது! விமான சாகச நிகழ்ச்சியை ஒட்டி போக்குவரத்து மாற்றம்! நோட் பண்ணுங்க


பேருந்துகளில் செல்லலாம்: சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் நாளை சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காலை 8 மணி முதல் அண்ணா சதுக்கத்திற்கு வழக்கமாக இயக்கப்படும் 120 பேருந்துகளுடன் கூடுதலாக 75 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

எம்டிசி சிற்றுந்துகள் மூலம் அரசினர் தோட்டம் மற்றும் டி எம் எஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து சிவானந்தா சாலையில் டிவி ஸ்டேசன் வரையிலும், வாலாஜா ரோட்டில் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு வரையிலும், ஆர்.கே சலையில் வி.எம் தெரு சந்திப்பு வரையிலும் மாநகர பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவற்றையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+