என் இனிய தமிழ் மக்களே! உடல் நிலை குறித்து தனது ஸ்டைலில் விளக்கம் கொடுத்த இயக்குநர் பாரதிராஜா
சென்னை: மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சையால் நலம்பெற்ற வருகிறேன் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்து இருக்கிறார்.
பல வெற்றிப்படங்களை இயக்கிய தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும் நடிகருமான பாரதிராஜாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதுகுறித்து அவரது மகன் மனோஜ் தெரிவித்தபோது, "நீர்ச்சத்து குறைபாடு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதன் அடிப்படையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் அவருக்கு ஓய்வு தேவை என்று அறிவித்து இருக்கிறார்கள்." என்றார்.

அமைந்தகரை மருத்துவமனை
இதனை தொடர்ந்து சென்னை அமைந்தகரையில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனைக்கு பாரதிராஜாவை அவர் குடும்பத்தினர் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பாரதிராஜா நல்ல உடல்நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என திரையுலகினரும், சினிமா ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வைரமுத்து
நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாரதிராஜாவை கவிஞர் வைரமுத்து நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து, "பாரதிராஜாவின் உடல்நிலை நாளுக்கு நாள் தேறி வருகிறது. பாரதிராஜாவுக்கு நுரையீரலில் சளி இருக்கிறது. அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

பாரதிராஜா அறிக்கை
இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜா, தனது உடல்நிலை குறித்து மக்களுக்கு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் "என் இனிய தமிழ் மக்களே, வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன்.

நேரில் வர வேண்டாம்
மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன்.

விரைவில் சந்திப்போம்
மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்." என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications