நான் ஒரு தலைவன், மக்களை நம்புகிறவன்.. தனித்து தான் போட்டியிடுவேன்.. அடித்து சொல்லும் சீமான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் ஒரு தலைவன், மக்களை நம்புகிறவன். எனவே தேர்தலில் என்றைக்கும் தனித்து தான் நான் போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நான் கட்சி தொடங்கி ஒரு 13 ஆண்டுகள் ஆகிறது. நான் ஒரு கோடிக்கும் அதிகமான முறை சொல்லிவிட்டேன் கூட்டணி என்பதே கிடையாது. தனித்து தான் போட்டி என்று. ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறையும் இதை கேட்கிறீர்கள்.. எனக்கு மனது கஷ்டமாக இருக்கிறது. யாருடனும் கூட்டணி கிடையாது. நான் ஒரு தலைவன், மண்ணையும், மக்களையும் நம்புகிறவன்..

 Iam leader, I will contest alone in all elections says NTK Chief Seeman

நேசிக்கின்றவன். நான் என் மக்களை நேசிக்கிறேன். அதனால் மக்களை நம்பி தனித்து போட்டியிடுகிறேன். கூட்டணி கிடையாது. வாக்கு வங்கியை உயர்த்திக்கொண்டே போறதல்ல.. வளர்ந்துட்டேன் வென்றுவிட்டேன் என்று சொல்ல வேண்டும். அதற்கு தான் பாடுபடுகிறேன். வெற்றிக்கு தேவை உழைப்பு தான். அதைத்தான் நான் செய்து வருகிறேன். கட்டாயம் ஒருநாள் வெற்றி பெறுவேன்.

நான் இருக்கிறேன்: தமிழ்நாடு என்ன உங்கள் குடும்ப சொத்தா?.. 29 ஆண்டுகள் தான் அருண்மொழித்தேவன் மற்றும் அவனது மகன் ஆண்டனர். ஆனால் 60 ஆண்டுகளாக நீங்கள் ஆளுகிறீர்கள். எனக்கு எந்த உரிமையும் இதில் இல்லை. நீங்கள் சொல்கிறது தான் சட்டம், உலக வரலாறை திரும்பி பாருங்கள்.. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அழிந்திருக்கு. விஜயநகர பேரரசு அழிந்திருக்கிறது. சேர, சோழ, பாண்டிய அரசு அழிந்திருக்கு.. நீங்க எம்மாத்திரம்.

ஒரு கொள்கை இல்லை, ஒரு கோட்பாடு இல்லை. ஒரு துளி நேர்மை இல்லை. உண்மை இல்லை. இதில் ஆட்டம் போடுகிறீர்கள்.. காமராஜர் ஆட்சி காலத்தில் காங்கிரஸ் அழியும் என்று யாராவது நினைத்திருப்பார்களா.. இன்று காங்கிரஸ் என்ன ஆனது. இதை வீழ்த்தி நீங்க வந்தீர்கள் அல்லவா.. அதேபோல உங்களை வீழ்த்தி இன்னொன்று வரும். இன்னொரு ஆற்றல் வரும். அது ஏன் நாங்களாக இருக்க கூடாது. ஏன் நானாக இருக்க கூடாது.

திராவிடம் என்றால் என்ன?: இது தமிழ் தேசம், தமிழர் தேசம் இந்த அரசு தான் இங்கே இருந்திருக்கனும். கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வாங்கி தர முடிகிறதா.. அப்போது ஏன் திராவிடம் பேசுகிறீர்கள்.. திராவிட சகோதரர்கள் எங்களையே அடிக்கிறார்கள்.. அனைத்தும் நாடகம்.. திராவிடம் என்றால் என்ன என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்களாலே விளக்க முடியவில்லை. நாங்கள் வளர்ந்தாலே அது வீழ்ந்துவிடும். அவர்கள் குள்ளமாகவேண்டும் என்று அர்த்தமில்லை.

நான் வளர்ந்தால் அது வீழ்ந்துவிடும். கடந்த முறை 31 லடசம் வாக்குகள் எனக்கு கிடைத்தது. இது அடுத்த தேர்தலில் இன்னும் அதிகரிக்கும். யாருடைய ஓட்டுக்கள் இவை.. இதற்கு முன்னாடி இந்திய கட்சிகளுக்கும், திராவிட கட்சிகளுக்கும் செலுத்திய வாக்குகள் தானே.. இனி எனக்கு எத்தனை லட்சம் வாக்குகள் கூடும் என்று பாருங்கள்.. ஏனென்றால் இந்த மக்களை நீங்கள் ஏமாற்றுகிறீர்கள். . எங்களுக்கு நீங்கள் வாயில் தேன் ஊற்றவில்லை.

1000 ரூபாய் எப்படி கொடுக்கிறீர்கள்?: காதில் தேன் ஊற்றுகிறீர்கள்... வாயில் ஊற்றினால் கூட குடித்துவிட முடியும்.. ஆனால் காதில் ஊற்றினால் யாருக்கு பிரயோஜனம்.. கல்வியை அப்படி மாற்றிவிடுவேன். நாங்கள் இதை செய்வோம் என 60 ஆண்டுகளாக காதில் தேன் ஊற்றுகிறீர்கள்.. 1000 ரூபாய் எப்படி கொடுக்கிறீர்கள்.. மொத்தம் 12 ஆயிரம் கோடி ஒரு ஆண்டுக்கு.. ஏது இந்த காசு.. உங்களுக்கு எப்படி இந்த காசு வந்தது?.. எங்கள் காசையே எடுத்து நீங்கள் கொடுப்பதற்கு எதற்கு திட்டம், என்ன சாதனை?. இவ்வாறு சீமான் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+