சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செம சான்ஸ்.. ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான தமிழக அரசின் இலவச பயிற்சி.. உடனே விண்ணப்பியுங்கள்

குடிமை பணிகளுக்கான 2022-ம் ஆண்டு முதல்நிலைத் தேர்வுப் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: குடிமைப் பணிகளுக்கான (ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐபி.எஸ்.,) 2022-ம் ஆண்டு முதல்நிலை தேர்வு பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்திய அரசின் மத்திய தேர்வாணைக்குழு நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட அகில இந்தியக் குடிமை பணிகளுக்கான (IAS, IPS,) தேர்வுகளில் பங்கேற்க விரும்புபவர்களுக்கு தமிழக அரசு பயிற்சியை அளித்துவருகிறது...
இதற்காக தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், சென்னை மற்றும் அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி நிலையங்கள், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் பயிற்சி மையங்களை அமைத்துள்ளது.

பெரியார், திமுக, மு.க.ஸ்டாலின், தமிழக அரசு.. மாரிதாஸ் வாங்கி கட்டிக் கொண்ட சர்ச்சைகள்தான் எத்தனை! பெரியார், திமுக, மு.க.ஸ்டாலின், தமிழக அரசு.. மாரிதாஸ் வாங்கி கட்டிக் கொண்ட சர்ச்சைகள்தான் எத்தனை!

அறிவிப்பு

அறிவிப்பு

இது தொடர்பாக ஒரு பயிற்சி நாளையதினம் அளிக்கப்பட உள்ளது.. அதற்கான அறிவிப்பும் தற்போது வெளியாகி உள்ளது.. அந்த அறிவிப்பு இதுதான்: "தமிழ்நாட்டை சேர்ந்த இளம்பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோருக்கு, 05.06.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற இருக்கும் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணித் தேர்விற்கு கட்டணமில்லாப் பயிற்சியினை அளிக்க உள்ளது.

 வகுப்பறைகள்

வகுப்பறைகள்

சென்னை, அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் கட்டணமில்லாமல் தங்கும் வசதி, சத்தான உணவு மற்றும் தரமான நூலகம், காற்றோட்டமுள்ள வகுப்பறைகள் ஆகியவற்றை வழங்குகிறது.இப்பயிற்சி மையம் 225 முழுநேரத் தேர்வர்களையும், 100 பகுதிநேர தேர்வர்களையும் முதல்நிலைப் பயிற்சிக்காக அனுமதிக்கிறது. அதே போன்று அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி நிலையங்கள், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் தலா 100 முழுநேரத் தேர்வர்களை முதல்நிலைத் தேர்வுக்காக அனுமதிக்கின்றன.

மையம்

மையம்

2022-ஆம் ஆண்டில் மத்திய தேர்வாணையக்குழு (UPSC) நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு, பயிற்சி பெற விரும்பும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com வாயிலாக 11-12-2021 முதல் 28.12.2021 வரை விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி மையங்களில் ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வுக்கு முழுநேரப்பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். மேலும், பயிற்சியில் சேரவிரும்புவர்கள் தங்கள் கல்வி மற்றும் வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை மத்திய தேர்வாணையக் குழுவின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அனுமதி

அனுமதி

தகுதியுடைய நபர்கள் 23.01.2022 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். முதல் நிலைத் தேர்வுக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி மையங்களில் இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாகப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர். பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
IAS and IPS: Free civil service coaching for TamilNadu students tomorrow
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X