பீலா வெங்கடேஷன் ரொம்ப பாவம்.. தமிழிசை சவுந்தரராஜன் கலங்கியபடி சொன்ன வார்த்தை.. கசப்பான உண்மை
சென்னை: ‛‛மருத்துவம், குடிமைப்பணிக்கு படிக்க பயன்பட்ட மூளையை இப்படி புற்று தாக்க வேண்டும் என்ற கொடூர நிலை எப்படி வந்தது என்று தெரியவில்லை. தொற்றுநோயாக இருந்தால் சரி செய்துவிடலாம். புற்றுநோயாக இருந்தால் என்ன செய்வது?. ஒருவேளை அவர்களின் குடும்பத்தில் அமைதி நிலவி, நிர்வாகத்தில் அமைதி நிலவி இருந்தால் ஒருவேளை அறிகுறியை சீக்கிரமாக கண்டுப்பிடித்து இருப்பார்களோ? என்று நினைக்கிறேன்'' என்று பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் கலங்கியபடி கூறினார்.
தமிழக எரிசக்தித் துறை செயலாளர் பீலா வெங்கடேசன் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 3 மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 56.

தூத்துக்குடி மாவட்டம் வாழையடி பகுதியைச் சேர்ந்தவராவார். இவர் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தாஸை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள், அதில் பிங்கிக்கு திருமணமாகிவிட்டது. ப்ரீத்தி அமெரிக்காவில் படித்து வருகிறார்.
கருத்து வேறுபாடு காரணமாக பீலா வெங்கடேஷன் தனது கணவர் ராஜேஷ் தாஸை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் நேற்று பீலா வெங்கடேஷன் காலமானார். சென்னை கொட்டிவாக்கம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பீலா வெங்கடேசனின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உள்பட மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
பீலா வெங்கடேஷன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு தமிழிசை சவுந்தரராஜன் தனது துக்கத்தை பகிர்ந்து கொண்டார். இதுபற்றி தமிழிசை சவுந்தரராஜன், ‛‛பீலா வெங்கடேஷன் ஒரு மருத்துவர். அதன்பிறகு குடிமை பணிக்காக மிக கடுமையாக உழைத்து ஐஏஎஸ் அதிகாரியானவர். அவரை குடும்ப ரீதியாக எனக்கு நன்றாக தெரியும். நிர்வாக ரீதியாக கடுமையாக உழைத்து மேலே வந்த பெண் அதிகாரி.
ஒரு மருத்துவராக எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். மருத்துவம், குடிமைப்பணிக்கு படிக்க பயன்பட்ட மூளையை இப்படி புற்று தாக்க வேண்டும் என்ற கொடூர நிலை எப்படி வந்தது என்று தெரியவில்லை. தொற்றுநோயாக இருந்தால் சரி செய்துவிடலாம். புற்றுநோயாக இருந்தால் என்ன செய்வது?
வாழ்க்கையில் அவர் ரொம்ப சிரமப்பட்டார்கள். கடைசி காலத்தில் வாழ்க்கையில் இருந்து வெளியே வந்துவிட்டது. கொரோனா காலத்தில் அவர் சிறப்பாக செயலாற்றினார் என்று நாம் அனைவரும் சொல்கிறோம். ஆனால் சிறப்பாக செயலாற்றிய அந்த துறையில் கூட தொடர முடியாத நிலை வந்துவிட்டது. அத்தகைய நிர்வாகம் தான் உள்ளது. பெண்கள் சந்திக்கிற சவால் தான். எந்த துறையில் சிறப்பாக பணியாற்றுகிறார்களோ அந்த துறையில் கூட முழுமையாக பணியாற்ற முடியாத சூழல் நிர்வாகத்தில் இருக்கிறது. அதை நாம் அனைவரும் உணர வேண்டிய கசப்பான உண்மை.
தனக்கு கிடைக்க வேண்டிய துறை, அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று ரொம்ப வருத்தப்பட்டு வந்தார். குடும்ப வாழ்க்கையிலும் சிரமப்பட்டார். ஒரு திறமையான பெண் அதிகாரி, இப்படி மறைந்து உள்ளார் என்பதை நினைக்கும்போது என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஒருவேளை அவர்களின் குடும்பத்தில் அமைதி நிலவி, நிர்வாகத்தில் அமைதி நிலவி இருந்தால் ஒருவேளை அறிகுறியை சீக்கிரமாக கண்டுப்பிடித்து இருப்பார்களோ? என்று நினைக்கிறேன்.
இந்த வலிகள் எல்லாம் அதிகமாக இருந்தபோது தனது உடல் வலியை அவர் கவனிக்காமல் விட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது. ஏனென்றால் நான் கேட்ட வரைக்கும் அவருக்கு புற்றுநோய் தீவிரமான பிறகு தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை நிர்வாகம், குடும்ப வாழ்க்கையில் இருந்த அந்த வலி அவரது உடல் வலியை மறைத்து விட்டதோ என்பது தான் எனக்கு ஆதங்கமாக இருக்கிறது. இந்த காலத்தில் புற்றுநோயை தொடக்கத்தில் கண்டுபிடித்தால் குணப்படுத்திவிடலாம். அதனை கண்டுபிடிக்காமல் விட்டு விட்டார் என்பது தான் மிகுந்த வலியாக எனக்கு இருக்கிறது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். அனைவரும் உடல்நலத்தை நன்கு பார்த்து கொள்ள வேண்டும்'' என்று கலங்கியபடி கூறினார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications