இதுதான் ஸ்டாலின்.. "இறையன்பு"வை மிஸ் பண்ணவே முடியல.. அடுத்த "போஸ்டிங்" ரெடி.. எல்லாமே மாறுது போலயே?
சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, இந்த மாதத்துடன் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், அடுத்தடுத்த எதிர்பார்ப்புகள் கோட்டையை சுற்றி வட்டமிட்டு வருகின்றன.
தமிழ்நாடு தலைமை செயலாளராக பணியாற்றி வரும் இறையன்புவின் பணிக்காலம் விரைவில் முடிவடைவதால், அடுத்த தலைமை செயலாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.
இறையன்பு: அதிமுக ஆட்சியில் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்த இறையன்புவின் அனுபவத்துக்கும் திறமைக்கும் ஏற்ற வகையில், ஆட்சி பொறுப்பேற்றதுமே, தலைமைச் செயலாளர் பதவியை அளித்து அழகு பார்த்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.. அதேசமயம், இன்னும் சிலகாலம் இறையன்புவை தங்களுடன் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று நினைப்பதாகவும் தெரிகிறது..

வழக்கமாக, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் சில முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்படுவார்கள்.. குறிப்பாக சொல்ல வேண்டுமானால், கடந்த காலங்களில் தலைமை செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், கிரிஜா வைத்தியநாதன், சண்முகம் உள்ளிட்டோருக்கு பதவி நீட்டிப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன.. அதுமட்டுமல்லாமல், இவர்களுக்கு, ஓய்வு பெற்ற பிறகு, "ஆலோசகர், பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினர்" போன்ற முக்கிய பொறுப்புகளும் அப்போது தரப்பட்டன.
ஆணையர்: அந்தவகையில்தான், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாற்றும் முக்கிய இடங்களில் ஒன்றினை இறையன்புக்கு தந்து, தங்கள் ஆட்சிக்காலத்தில் தக்க வைத்து கொள்ள முதல்வர் தரப்பு யோசித்து வருவதாக தெரிகிறது.. இந்நிலையில்தான், 2 நாட்களுக்கு முன்பு, புதிய தலைமை செயலாளரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
அப்போது, "தலைமை தகவல் ஆணையர்" பதவியில் இறையன்புவை நியமிக்க யோசனை கிளம்பியது.. காரணம், தலைமை செயலாளருக்கு இணையானது, தலைமை தகவல் ஆணையர் பதவியாகும். இந்த துறைக்கு இறையன்பு பொறுப்பேற்றால், மீண்டும் புதுப்பொலிவு பெறும் என்பதே முதல்வரின் நம்பிக்கையாக இருக்கிறது..
பணி நீட்டிப்பு: ஆனால், அதில் தனக்கு விருப்பம் இல்லை என ஜகா வாங்கிக் கொண்டுவிட்டாராம் இறையன்பு.. அதேபோல, டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவிக்கு முதலில் அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டபோதும் அதையும் அவர் விரும்பவில்லையாம்.. தலைமைச் செயலாளராக இருப்பவருக்கு மாநில அரசு விரும்பினால் 3 மாதம் பணி நீட்டிப்பு வழங்க முடியும். இதற்கு விதிகளும் இடமளிக்கிறது. அதன்படி பணி நீட்டிப்பு வழங்கலாமா? என்று முதல்வர் ஆலோசித்திருக்கிறார். அதனையும் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார் இறையன்பு.
அடுத்த சாய்ஸ்: எனவே, அவரை முறைப்படி ஓய்வுபெற அனுமதித்துவிட்டு, பிறகு, முதல்வருக்கு ஆலோசனை வழங்குவதற்காக "அரசின் ஆலோசகர்" என்ற பதவில் இறையன்புவை உட்கார வைக்கலாமா? என்று விவாதிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம் இல்லாமல் இல்லை.. 3வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள திமுக அரசு, ஒவ்வொரு விஷயத்தையும் கவனத்துடன் கையாள பார்க்கிறதாம். மற்றொருபுறம், ஆட்சியை சரியான பாதையில் கொண்டு செல்ல அதிகாரிகளின் உதவி அவசியம் என்பதை நன்கு புரிந்து வைத்துள்ளதால்தான், இறையன்பு போன்ற நேர்மையும், துடிப்பும் மிக்க அதிகாரிகளை மீண்டும் பயன்படுத்தி கொள்ள நினைக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின்..
ஆனால், தனக்கு பதவி நீட்டிப்போ, ஓய்வு பெற்ற பிறகு புதிய பதவியோ வேண்டாம் என்று இறையன்பு ஏற்கனவே சொல்லிவிட்டார்.. அத்துடன், தான் உயிருக்கு உயிராக நேசிக்கும் எழுத்துப்பணியையே இறையன்பு தொடர்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசி ஆப்ஷன்: எனினும், இறையன்பு போன்ற "மிஸ்டர் கிளீன்" அதிகாரிகளை இழக்க, அரசுக்கு மனசில்லை என்பதே யதார்த்த உண்மை.. அடுத்த ஆப்ஷனாக, "அரசின் ஆலோசகர்" என்ற பதவியைதர மேலிட முன்வந்துள்ளால், இதை இறையன்பு ஏற்பாரா? மறுப்பாரா? தெரியவில்லை.. இதுபற்றின "டிபேட்"தான் கோட்டையில் அனலடித்து கொண்டிருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications