அமுதா ஐஏஎஸ்ஸை பார்த்ததும் கட்டி அணைத்த ராணி! பீலா உடலை பார்த்ததும் வெடித்து விம்மிய Amutha IAS!
சென்னை: தமிழக எரிசக்தித் துறை செயலாளராக இருந்து மூளை புற்றுநோயால் இறந்த பீலா வெங்கடேசன் ஐஏஎஸ்ஸுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமுதா ஐஏஎஸ், அவருடைய தாய் ராணியை கட்டி பிடித்து அழுதார். மேலும் பீலாவின் உடலை நீண்ட நேரமாக பார்த்து அழுதுக் கொண்டே இருந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.
பீலா வெங்கடேசனுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தீராத தலைவலி ஏற்பட்டதாம். இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற போது அவரது மூளையில் கட்டி இருப்பதாக ஸ்கேனில் தெரியவந்ததாம்.

அது புற்றுநோய் கட்டியாகவும் மாறியிருந்ததாம். எனினும் சிகிச்சைக்கு பீலா வரும் போதே குணப்படுத்த முடியாத ஸ்டேஜில்தான் அந்த கட்டி தீவிரமடைந்து இருந்ததாம். இதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் அளித்தும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லையாம்.
இதனால் அவரை அங்கிருந்த வீட்டிற்கு அழைத்து வந்து வீட்டில் வைத்து சிகிச்சைகளும் அளித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு பீலா வெங்கடேசன் காலமானார். அவரது இறப்புக்கு ஏராளமானோர் நேரிலும் சமூகவலைதளங்களிலும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், ஜே.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் உள்ளிட்டோர் நேரில் போய் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் ஸ்டாலின், நேரில் அஞ்சலி செலுத்த சென்ற போது பீலாவின் தாய் ராணி, அவருடைய கைகளை பிடித்துக் கொண்டு அழுதார். பின்னர் ஸ்டாலின் அவருக்கு ஆறுதல் சொன்னார். அது போல் அமுதா ஐஏஎஸ், அபூர்வா ஐஏஎஸ் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது அமுதா ஐஏஎஸ்ஸை பார்த்தும் ராணி வெங்கடேசன், அவரை கட்டி அணைக்க சென்றார். அமுதாவும் அவரை பார்த்ததும் துக்கம் தாளாமல் அழுதபடியே கட்டி அணைத்தார். பின்னர் நீண்ட நேரமாக நின்றபடியே பீலாவின் உடலையே பார்த்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது துக்கத்தால் விம்மி அழுதார். பின்னர் பீலாவின் குழந்தைகள் பிங்கி, பீர்த்தி ஆகியோரையும் சந்தித்து அவர்களையும் கட்டி அணைத்து அமுதா ஐஏஎஸ் ஆறுதல் கூறினார்.
அமுதா ஐஏஎஸ்ஸும் பீலாவும் ஒரே வயதுடையவர்கள்தான். இருவருக்கும் சில மாதங்கள் வித்தியாசம் இருக்கும். இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இருவருமே அதிரடிகளை செயல்படுத்தியவர்கள். இருவருக்குள்ளும் நல்ல பழக்கம் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. அமுதா ஐஏஎஸ், ராணியுடனும் நன்கு பழக்கம் கொண்டவராக தெரிகிறது.
பீலாவுக்கு இரு பெண் குழந்தைகளில் ஒருவருக்கு திருமணமாகிவிட்டது. இன்னொருவர் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தாராம். பீலாவின் இறுதிச் சடங்கு பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications