சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்.. முதன்மை செயலாளர் உதயசந்திரன் மாற்றம்.. டாப் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் முடிந்துள்ள நிலையில் டாப் லெவல் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். முதல்வர் ஸ்டாலினின் முதன்மை செயலாளர் உதயசந்திரன் உட்பட முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு அமைச்சரவையில் இரண்டு நாட்களுக்கு முன் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டன.

தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு ஆண்டு முடிவில் சில அமைச்சர்களை மாற்ற முடிவு செய்துள்ளார்.
மேலும் ஐடி துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டு உள்ளார்.
அதேபோல் அமைச்சர் சாமிநாதன் தமிழ் வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
ஐஏஎஸ்:
அமைச்சரவை மாற்றத்தின் போதே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றமும் இருக்கும் என்று ஒன்இந்தியா தமிழ் சார்பாக முன்பே செய்தி வெளியிட்டு இருந்தோம்.
அதன்படியே தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் முடிந்துள்ள நிலையில் டாப் லெவல் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். முதல்வர் ஸ்டாலினின் முதன்மை செயலாளர் உதயசந்திரன் உட்பட முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர்.
முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, உள்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
போக்குவரத்துத்துறை செயலாளர் கோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் பொதுப்பணித்துறை செயலாளராக மாற்றம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
அமைச்சரவை மாற்றம்
அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதும், அமைச்சர்களுக்கு ஏற்ற அதிகாரிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று முன்பே தகவல்கள் வெளியானது. இதற்காக அதிகாரிகள் மாற்றம் குறித்து அமைச்சர்களிடம் கருத்தை சமீபத்தில் கேட்டறிந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அதிகாரிகள் - அமைச்சர்கள் இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக.. அமைச்சர்கள் ஒரு உத்தரவு போட அது நடைமுறைக்கு வர தாமதமும் ஆகிறதாம். அதிகாரிகள் சிலர் அமைச்சரிடம் ஆலோசனையே செய்யாமல் தான் போன போக்கில் முடிவுகளை எடுக்கிறார்களாம். சில அதிகாரிகள் தாங்கள்தான் அரசு என்பது போல செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்களாம்.
சில அதிகாரிங்கள் தான்தோன்றி தனமாக செயல்படுகிறார்கள். அவர்கள் அமைச்சர்களிடம் தெரிவிக்காமல் முடிவுகளை எடுக்கிறார்கள்.
20 ஐஏஎஸ் அதிகாரிகள்:
அதில் 10-க்கும் மேற்பட்ட துறைகளில் அமைச்சர்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் ஒத்துப் போகவில்லை. அமைச்சர்களுக்கு தெரியாமலே பல விசயங்களை நடைமுறைப்படுத்துகின்றனர். இது ஒரு கட்டத்தில் அமைச்சர்களுக்கு தெரியவரும் போது அவர்களுக்கு கோபம் வருகிறது.
உடனே தனது துறையின் உயரதிகாரிகளிடம் அமைச்சர்கள் கோபம் காட்டும் போது, முதல்வரின் செயலாளரை கேட்டுக்கோங்க சார் என்று பதில் வருகிறதாம். எங்களுக்கு எதுவும் தெரியாது.. முதல்வரிடம் பேசுங்கள் என்று அதிகாரிகள் கூலாக சொல்லிவிடுகிறார்களாம். இதனால் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் பல துறைகளில் சின்க் இல்லாமல் செல்கிறதாம்.
இதனால் என்ன செய்வதென தெரியாமல் மனம் புழுங்கிய அமைச்சர்கள், முதல்வர் ஸ்டாலினிடம் தங்கள் ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார்கள். இதை அடிப்படையாக வைத்து அமைச்சரவை மாற்றத்தோடு சேர்ந்து அதிகாரிகள் மாற்றமும் செய்யப்பட்டு உள்ளதாம்.
நிதித்துறை:
முக்கியமாக நிதி துறைக்கும், சுகாதாரத்துறை துறைக்கும் புதிய செயலாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். அங்கே மொத்தமாக புதிய டீம் களமிறக்கப்பட உள்ளது.நிதி துறைக்கு உதயசந்திரன் ஐஏஎஸ் மாற்றப்பட்டு உள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
உதயசந்திரன் முதல்வருக்கு மிகவும் நெருக்கம். அதிகாரிகள் முதல்வரை பார்க்க கூட இவரின் அனுமதி தேவைப்படுவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவரின் கட்டுப்பாடுகள் காரணமாக சில அமைச்சர்களும் அதிருப்தியில்இருந்தாராம் . சில சமயங்களில் இவர் செயல்படும் விதம் கட்சியின் டாப் தலைவர்களுக்கு எரிச்சலை உண்டாக்குவதாக கூறப்படுகிறது.
இவர்தான் முதல்வரின் நம்பர் 1 முதன்மை செயலாளர் என்பதால் பல்வேறு விஷயங்களை ஆட்சி ரீதியாக இவர்தான் "கண்ட்ரோல்" செய்து வருகிறார். இவர்தான் முதல்வரின் டேஷ் போர்டை கண்காணித்து வருகிறார்.
இந்த நிலையில் உதயசந்திரன் தற்போது நிதித்துறை செயலாளர் பொறுப்பிற்கு மாற்றப்பட்டு அவரின் இடத்திற்கு முருகானந்தம் ஐஏஎஸ்ஸை கொண்டு வந்துள்ளனர். உதயசந்திரன் இனி அமைச்சர் தங்கம் தென்னரசுவுடன் சேர்ந்து செயல்படுவார்.
கூடுதல் தலைமை செயலாளர் அதிகாரத்தில் உள்ள முருகானந்தம் இந்த இடத்திற்கு முதல்வரின் புதிய மாஸ்டார்மைண்டாக வந்துள்ளார்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
Gold Price: கண்ணாமூச்சி காட்டும் தங்கம் விலை.. இன்று ரேட் கூடுமா? குறையுமா? நகை பிரியர்கள் எதிர்பார்ப்பு -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?











Click it and Unblock the Notifications