ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்.. முதல்வரின் “ஸ்பெஷல்” திட்டத்திற்கு சிறப்பு அதிகாரி நியமனம்!
சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களுடன் முதல்வர் திட்டத்துக்கான சிறப்பு அதிகாரியாக மதுசூதன் ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக அரசு அவ்வப்போது பணியிட மாற்றம் செய்வது வழக்கம். அந்தவகையில் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, ஒரு அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு அளித்தும் தமிழ்நாடு அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி பி.சங்கர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்பு செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சாலை திட்டம் -2ன் இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி எஸ்.பிரபாகர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வந்தாச்சு அசத்தல் திட்டம்! "உங்களைத் தேடி உங்கள் ஊரில்": முதல்வர் ஸ்டாலின் செம பிளான்! பறந்த உத்தரவு
அதேபோல, நில அளவை மற்றும் நில வரித்துறை இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி மதுசூதன் ரெட்டிக்கு “மக்களுடன் முதல்வர்” திட்டத்துக்கான சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Service delivery @ Door step என்பதை அடிப்படையாக கொண்ட மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நடத்தப்படும் முகாமில் 10 துறைகளின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொள்வார்கள். முகாமில் பெறப்படும் மனுக்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு 15 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நான் முதல்வன், களத்தில் முதல்வர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஆளும் அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலினின் புதிய திட்டமான இதற்கு சிறப்பு அதிகாரியாக மதுசூதன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications