ஹார்ட் அட்டாக்? பைபாஸ் சர்ஜரி இனி "இங்கேயே" செய்துக்கலாம்.. தமிழக அரசு மெகா திட்டம் - இதயம் காப்போம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில் 9,166 பேர் பயனடைந்துள்ளனர் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்தும், பயன்கள் குறித்தும் விரிவாகவே விவரித்துள்ளது..

இந்தியாவை பொறுத்தவரை, ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் வரை மாரடைப்பு காரணமாக உயிரிழக்கிறார்கள். இதயத்திற்கு செல்லும் ரத்தம் தடுத்து நிறுத்தப்படுவதால், ஏற்படும் விளைவுதான் ஹார்ட் அட்டாக் ஆகும்..

Tamilnadu Heart Tamil Nadu Government

அடைப்புகள்: தமனிகள், ரத்தக்குழாய்களில் கொழுப்புக்கட்டியாக மாறுவதில் இதுபோன்ற அடைப்புகள் ஏற்பட்டுவிடுகின்றன.. இதயத்திற்கு ரத்தத்தை சப்ளைசெய்யும் ரத்தக்குழாயில் முழு அடைப்பு ஏற்பட்டால், வலி ஏற்படும். இதுவே மாரடைப்பின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.

எனினும், உணவு மற்றும் வாழ்க்கை முறை இருந்தாலும் சரியான நேரத்தில் மாரடைப்புக்கு சிகிச்சை கிடைக்காதது இந்தியாவில் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. ஆனால், தமிழக அரசு இதற்கு தீர்வாக "இதயம் காப்போம்" என்ற திட்டத்தினை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ரூ.3.37 கோடியில் தொடங்கியது. இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் முதன்முறையாக கோவையில் தொடங்கப்பட்டது.

மாரடைப்பு: ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும்போது முதல் 60 நிமிடம் மிகவும் முக்கியமானது.. இவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அதிக நேரம் பிடிக்கிறது.. பெரும்பாலும் கிராம மக்கள், மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வருவதற்கு நீண்ட நேரம் பிடிக்கும்.

எனவேதான், தமிழகத்தில் உள்ள துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதய பாதிப்புகளைச் சரிசெய்ய 14 மாத்திரைகள் கொண்ட "இதயம் காப்போம்" திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. யாருக்காவது சிறிய அளவிலான இதய பாதிப்பு ஏற்பட்டால், அங்குள்ள துணை சுகாதார நிலையங்களுக்கு சென்று, நர்ஸை அணுக வேண்டும்.. அங்குள்ள நர்ஸ்கள், இதயச்சிறப்பு மருத்துவா்களை தொடா்பு கொண்டு தேவையான சிகிச்சைகளை வழங்குவார்கள்..

3 மாத்திரைகள்: அதில், முதல்கட்டமாக, நர்ஸ்களிடம் 14 மாத்திரைகள் தரப்பட்டுள்ளன.. ஆஸ்பிரின்(2), க்ளோபிடோக்ரல்(4), அட்ரோவாஸ்டின்(8) ஆகிய மூன்று மாத்திரைகளை உட்கொள்ளச் செய்வதன் மூலம் உடனடியாக உயிரைக் காப்பாற்றிட முடியும். அதன்பிறகு அவர்களுக்கு இசிஜி எடுக்கப்பட்டு சரியான மேற்சிகிச்சை அளிக்கப்படும். இதற்கு பிறகு மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த திட்டம் துவங்கப்பட்டதிலிருந்து, தமிழக மக்களுக்கு பெருத்த உதவியாக இருந்து வருகிறது.. கடந்த ஜூலை வரை 9,166 பேர் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். கடந்த வருடம் ஜூன் மாதம் முதல் இந்த ஜூலை வரை மொத்தம் 9,949 பேர் மாரடைப்பு அறிகுறியுடன் வந்தார்களாம்.. அவர்களில் 9,166 பேருக்கு மாரடைப்பு தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டிருக்கிறது.

விழுப்புரம்: இதில், விழுப்புரத்தில் 464 பேரும், கோவையில் 458 பேரும், சென்னையில் 438 பேரும், திருப்பூரில் 427, ஈரோட்டில் 439 பேரும் பயனடைந்துள்ளதாக தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

இந்த திட்டத்தின் மூலம் இலவசமாக மாரடைப்பு சிகிச்சை பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற பெரிய சிகிச்சைகூட துணை சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற இடங்களில் செய்து கொள்ளலாம். இவர்கள் இதற்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும். நோயாளிகளுக்கு மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை இல்லை என்றாலும். உடனடியாக அடையாள அட்டையை தயார் செய்து சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

அறிவிப்பு: இனி இதய அறுவை சிகிச்சைக்கு பெரிய மருத்துவமனையை நாடி செல்லாமல், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலே செய்து கொள்ளலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+