சைக்கிள், பைக்கில் இடியாப்பம் விற்க இது அவசியம்.. தமிழக அரசு போட்ட உத்தரவு.. உரிமம் பெறுவது எப்படி?
சென்னை: தமிழ்நாட்டில் சைக்கிள், இரு சக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்கும் வியாபாரிகள் கட்டாயமாக உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உணவு பாதுகாப்புத்துறையிடம் உரிமம் பெற்று இடியாப்பம் விற்பனை செய்ய வேண்டும் என்றும், அந்த உரிமத்தை ஆன்லைனில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமானோர் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்து வருகின்றனர். குழந்தைகள், முதியவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கும் இடியாப்பம் சிறந்த உணவாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இளைஞர்கள் பலரும் இடியாப்பத்தை அதிகமாக சாப்பிட்டு வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பாக இடியாப்பக்காரர் சைக்கிளில் நிற்காமல் செல்வதை வைத்து ஒரு மீம் கூட டிரெண்டாகியது. இந்த நிலையில் இடியாப்பம் ஒரு சில இடங்களில் தரம் குறைந்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் உணவுப் பாதுகாப்புத்துறை தரப்பில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் உரிமம் பெற வேண்டியது அவசியம். இதற்கான லைசன்ஸை ஆன்லைன் மூலமாகவே பெற முடியும். இந்த லைசன்ஸை ஒவ்வொரு ஆண்டும் உணவு பாதுகாப்புத்துறையிடம் புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தலின்படி இடியாப்பம் தயாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் இடியாப்பம் தயாரிக்கும் போது கைகளில் உரை, தலையில் கவனம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். இடியாப்பத்தை பாதுகாப்பாகவும், சுதாதாரமான, தரமான பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் காய்ச்சல், நோய் தொற்று பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் இடியாப்பம் விற்பனையில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications