கபாலீசுவரர் கோயில் மயில் சிலை மாற்றம்.. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் உண்மை கண்டறியும் குழு அமைப்பு
சென்னை: சென்னை கபாலீசுவரர் கோயில் புன்னைவனநாதர் சன்னதியில் மயில் உருவ சிலை மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கடராமன் தலைமையிலான உண்மை கண்டறியும் குழுவை அமைத்து இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்தர மோகன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் கபாலீசுவரர் கோயில் உள்ளது. 2004 கும்பாபிஷேகத்தின்போது புன்னைவனநாதர் சன்னதியில் மயில் வடிவ அம்பாள் கற்சிலை மாற்றம் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டன.

அரசாணை வெளியீடு
இந்நிலையில் தான் சிலை மாற்றம் தொடர்பாக உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமை வகிக்கிறார். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்தரமோகன் அரசாணை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உண்மை அறியும் விசாரணை குழு
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் 2004ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது அருள்மிகு புன்னைவனநாதர் சன்னதியில் மயில் வடிவத்தில் உள்ள அம்பாள் கற்சிலை மாற்றப்பட்டது. இதுதொடர்பாக ரங்கராஜன் நசிம்மன், வி சேகர் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுக்கள் ஆகியவற்றில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கடராமன் தலைமையில் உண்மை அறியும் விசாரணை குழு அமைத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கவனமாக பரிசீலனை
எனவே நீதியரசர் தலைமையில் உண்மை அறியும் விசரணை குழு ஒன்றினை அமைக்குமாறும், அவ்விசாரணை குழுவிற்கு உதவி புரிய தேவையான அலுவலர்களை ஓய்வு பெற்ற நீதியரசர் வெங்கடராமனுடன் ஆலோசித்து நியமனம் செய்திட ஆணையருக்கு அனுமதி வழங்குமாறும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அரசை கேட்டுக் கொண்டார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் பரிந்துரையினை அரசு கவனமாக பரிசீலனை செய்தது.

நியமனம்
இந்த பரிசீலனைக்கு பின்னர் அதனை ஏற்று மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் புன்னைவனநாதர் சன்னதியில் மயில் உருவில் உள்ள அம்பாள் கற்சிலை மாற்றப்பட்டது குறித்து தொடரப்பட்டுள்ள வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் வெங்கட்ராமன் தலைமையில் உண்மை கண்டறியும் விசாரணை குழுவினை அமைத்தும், அவ்விசாரணை குழுவிற்கு உதவி புரிய தேவையான அலுவலர்களை ஓய்வு பெற்ற நீதியரசர் வெங்கடராமனுடன் ஆலோசித்து நியமனம் செய்திட இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுமதி அளித்தும் அரசு ஆணையிடுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications