Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணனின் நேரம் மதிப்பு வாய்ந்தது! சீமானை விட்டுக்கொடுக்காத இடும்பாவனம் கார்த்திக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான இடும்பாவனம் கார்த்திக், தனது தந்தை மறைவுக்கு சீமான் அஞ்சலி செலுத்த வர வேண்டும் என தாம் எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

சீமானின் நேரம் மதிப்பு வாய்ந்தது என்பதால் அவரை இவ்வளவு தூரம் அலைய வேண்டாம் எனக் கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

Idumbavanam Karthik X post about seeman time management

''எனது தந்தை தஞ்சையிலுள்ள தனியார் மருத்துவமனையில் குடும்பத்தாரால் அனுமதிக்கப்பட்டு, நான் அங்கு செல்வதற்கு முன்பே அம்மருத்துவமனையின் முதன்மை நிர்வாகி, மருத்துவரோடு பேசியிருந்தார் அண்ணன் சீமான்.

நான் சென்னையிலிருந்து தஞ்சைக்கு கிளம்புகையில், தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார். மருத்துவமனைக்கு சென்றவுடன் அலைபேசியில் அழைத்து, உடல்நிலை குறித்துக் கேட்டுக்கொண்டே இருந்தார்.

குடும்பத்தார் மருத்துவமனையில் முதற்கட்ட தொகையைச் செலுத்தி மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அடுத்து என்ன செய்வது? என்று தெரியாது தவித்து நின்றபோது, பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அடுத்தக்கட்ட சிகிச்சையை செய்யச் சொல்லுங்கள். எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை எனப் பொறுப்பேற்றுக் கொண்டதும், இறப்புக்குப் பின்னர் அவசர ஊர்தியில் உடலை ஏற்றியபோது வந்த இலட்சக்கணக்கான தொகையிலான கட்டணத்தை முழுவதுமாக ஏற்றவரும் அண்ணன் சீமான்தான். மருத்துவமனை நிர்வாகத்திடம் அண்ணன் பேசியதாலேயே, நிர்வாகம் சிறப்புக் கவனமெடுத்துப் பார்த்துக் கொண்டது. நேற்றும் அழைத்துப்பேசினார். ஆறுதல் கூறி, ஏதும் தேவையா? எனக் கேட்டறிந்தார்.

அண்ணன் இவ்வளவு தூரம் அலைய வேண்டாம். அதனை நான் விரும்பவில்லை. அண்ணன் நேரில் வந்தே தீர வேண்டுமெனும் எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இருந்திரவில்லை என முன்பே தெளிவுப்படுத்திக் கூறிவிட்டேன்.

அண்ணனின் வருகை குறித்தான நிர்பந்தத்தைக் கொடுக்கிற அளவுக்கு அண்ணனின் நேரத்தின் மதிப்பை அறிந்திராதவன் நானில்லை. நேரில் வருகிறேன் எனக் கூறிய உறவுகளிடமும் அலைய வேண்டாம். நேரில் வந்துதான் அன்பையும், ஆறுதலையும் தெரிவிக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்றுதான் கூறினேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணிச்சூழல், வெவ்வேறு இடங்கள் என இருக்கும்போது எல்லோரும் வந்தே தீர வேண்டும் என எதிர்பார்ப்பது முறையில்லை. எங்கிருந்தாலும் அன்பு மாறாது என உறுதிபட நம்புகிறேன்.

சொன்னால் நம்புவதற்கு சிரமமாக இருக்கும். இந்த 14 ஆண்டுகால பயணத்தில் அண்ணனிடம் அறிமுகம் ஆன காலந்தொட்டு இன்றுவரை மொத்தமாக 30 அலைபேசி அழைப்புகளைக்கூட அண்ணனுக்குத் தொடுத்தது இல்லை. அண்ணன் கூப்பிட்டால் எடுத்துப் பேசி இருக்கிறேன். அவ்வளவுதான். அலைபேசியில் அழைத்துப் பேசி அவரது நேரத்தை எடுத்துக் கொள்ள விரும்பியதில்லை. ஏதேனும் அண்ணனிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்தால், அண்ணன்கள் வழியாகவோ, வாட்சப் தளத்தில் குரல் பதிவாகவோ பேசி இருக்கிறேன். அண்ணனின் நேரம் மதிப்பு வாய்ந்தது. அதனை அருகிலிருந்து நன்றாக உணர்ந்திருக்கிறேன். மதிப்புமிக்க அந்த நேரத்தை எடுத்துக்கொள்ள விருப்பமில்லாதுதான், அண்ணன் அலைய வேண்டாம் என்றேன். அதற்கும் மற்ற அண்ணன்கள் திட்டினார்கள். அண்ணன் வர வேண்டாம் என்றெல்லாம் சொல்லாதே என்று!

இந்த உறவின் புரிதலும், பாசப்பிணைப்பும் வேறு! எனது தந்தையின் மருத்துவச்சிகிச்சை, மரணம் என எல்லா சுமைகளையும் எனது தோளிலிருந்து இறக்கி தனது தோளில் ஏற்றிக் கொண்டது அண்ணன் சீமான் அவர்களும், நாம் தமிழர் குடும்பமும்தான்!''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+