உல்டாவா போச்சே.. திமுக இதைதான் கவனிக்கணும்.. அதிமுக, தவெக இணைந்தால் ஆட்சி மாற்றம் கன்பார்ம்: பிரபலம்
சென்னை: கரூர் சம்பவத்துக்கு 90 சதவீதம் காரணம் விஜய்தான்.. முழு பொறுப்பை விஜய்தான் ஏற்கவேண்டும்.. ஆனால் ஆச்சரியப்படத்தக்க வகையில், இந்த துயர சம்பவத்துக்கு பிறகு, விஜய்க்கான ஆதரவு ஒரு சதவீதம் கூட குறையவில்லை.. மாறாக, அரசு மீதுதான் கோபம் வந்துள்ளது.. திமுக கவனிக்க வேண்டியது இந்த விஷயத்தைதான் என்று மூத்த பத்திரிகையாளர் மணி கருத்து தெரிவித்துள்ளார்.
Citi Fox Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, "விஜய் சம்பவ இடத்திலிருந்து வந்திருக்க கூடாது, பாதிக்கப்பட்டவர்களிடம் சென்றிருக்க வேண்டும்.. எல்லா கட்சிக்காரர்களும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்தபோது, விஜய் கட்சிக்காரர்கள் மட்டும் அங்கு மருத்துவமனையில் இல்லை. இதெல்லாம் தவெகவை பின்னோக்கி தள்ளிவிட்டது.

அதேபோல பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் விஜய் பேசினார் என்பதற்கு, அதிகாரப்பூர்வமான ஆதாரங்கள் என்ன இருக்கு? விஜய் தரப்பில் சில வீடியோக்கள், பாதிக்கப்பட்டவர்கள் தந்த பேட்டிகள் மட்டுமே உள்ளதே தவிர, மீடியா முன்பு எந்தவிதமான உரையாடலும் நடக்கவில்லை.. இது கவலைப்பட வேண்டிய விஷயமாகும்.
ஆதரவு குறையவில்லை
கரூர் விவகாரம் என்பது தனிப்பட்ட விஜய்க்கும், தனிப்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குமான பிரச்சனை கிடையாது. விஜய் இன்று அரசியல் கட்சி தலைவர்.. அரசியல் கட்சி என்பது பொது ஸ்தாபனம்.
அப்படிப்பட்ட அரசியல் கட்சியில் துயர சம்பவம் நடந்துள்ள நிலையில், 10 நாட்கள் கழித்து பாதிக்கப்பட்டவர்களிடம் செல்வதை அதிகாரப்பூர்வமாக முன்வைக்காவிட்டால், சந்தேகங்கள் எழுவது இயல்பான ஒன்றுதான்.
இந்த சம்பவத்துக்கு 90 சதவீதம் காரணம் விஜய்தான்.. முழு பொறுப்பை விஜய்தான் ஏற்கவேண்டும்.. ஆனால் ஆச்சரியப்படத்தக்க வகையில், இந்த துயர சம்பவத்துக்கு பிறகு, விஜய்க்கான ஆதரவு ஒரு சதவீதம் கூட குறையவில்லை.. மாறாக, அரசு மீதுதான் கோபம் வந்துள்ளது.. அரசின் கவனக்குறைவு, அரசின் செயலின்மைதான் கரூர் சம்பவத்துக்கு காரணம் என்பது பரவலான கருத்தாக உள்ளது.. இதை பற்றிதான் திமுக அரசு கவலைப்பட வேண்டும்.
அரசின் மீது திரும்பிய கோபம்
விஜய் மீது தற்போது வந்துள்ள இந்த கரிசனம், வரும் காலங்களில் மாறலாம்.. ஒருவேளை இப்போது போலவே விஜய் இருந்தால், அதுவே அவர் மீது வெறுப்பாக மாறவும் வாய்ப்புள்ளது. இன்றைய தேதியில், விஜய் மீதான செல்வாக்கு ஓரளவு கூடியிருப்பதுடன், அரசு மீதுதான் தவறு என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறது.
இந்த கரூர் சம்பவத்துக்கு காரணமானவர் மீது திரும்ப வேண்டிய கோபம், அரசுக்கு எதிராக திரும்பியிருக்கிறது. அரசின் மீது வரும் கோபம், விஜய் மீது வரவில்லையென்றால், இது மிகவும் ஆபத்தானது.. எப்படியாவது இந்த கருத்தை மாற்றுவதற்கு அரசு முயற்சிக்க வேண்டும்.
அதேபோல விஜய்யிடம் பெரும் பிழைகள் உள்ளன.. அவர் தன்னை திருத்திக் கொள்ளாவிட்டால், விஜய் ஆபத்தானவர் என்ற கருத்தை மக்கள் மத்தியில் நிறுவ வேண்டிய பொறுப்பும், அரசியல் ரீதியாக நிறுவ வேண்டிய பொறுப்பும் திமுகவுக்கு உள்ளது. அரசுக்கும் ஓரளவு உள்ளது.
ஆட்சி மாற்றம் உறுதி
தவெக அதிமுகவுடன் கூட்டணி சென்றால் ஆட்சி மாற்றம் உறுதி.. அதில் சந்தேகமேயில்லை.. ஆனால், ஆனால் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் தவெக கொடியை தூக்கி காட்டியது அதிமுக தொண்டரா? தவெக தொண்டரா? என்பது தெரியாது.
நமக்கு ஏப்ரலிலேயே தேர்தல் வந்துவிடும். லட்டு மாதிரி வாய்ப்பு வந்துள்ளது.. இலவு காத்த கிளியாக அனைத்து கட்சிகளுமே உள்ளனர்.. மக்கள்தான் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்..
அதிமுக, தவெக கூட்டணியில் பாஜகவும் இடம்பெற நேர்ந்தால், அதன் முடிவை கணிக்க முடியவில்லை.. பாஜக + விஜய் + அதிமுக என்றாலும் ஸ்வீப் என்றுதான் பரவலாக கருத்தாக உள்ளது.. சுனாமி மாதிரி ரிசல்ட் வரும்.. ஆனால், அதிமுக-விஜய் கூட்டணி என்றால், ஆட்சி மாற்றம் உறுதி. காரணம், விஜய் இன்று துருப்பு சீட்டாக மாறிவிட்டார்.
கொள்கை எதிரி பாஜக
அரசியல் எதிரி, கொள்கை எதிரி என்று திமுக, பாஜகவிடம் கடைப்பிடித்து வந்த இடைவெளி அதேபோல இருக்குமா என்பது சந்தேகம்தான்.
காரணம் திமுக அரசாங்கத்தின் இந்த விசாரணை, மற்றும் எதிர்வரும் நாட்களில் அரசியல் ரீதியாக திமுக கொடுக்கக்கூடிய அழுத்தங்கள், நிர்வாக ரீதியாக கொடுக்கக்கூடிய அழுத்தங்கள் இவைகளை எல்லாம் எதிர்கொள்வதற்கு மத்திய அரசின் மறைமுக சப்போர்ட் விஜய்க்கு தேவை என்றே நினைக்கிறேன்.
எது எப்படியோ, 41 உயிர்கள் போய்விட்டது.. இனியும் இப்படி உயிர்கள் போகாத அளவுக்கு விஜய்யோ, அரசோ, என்ன முயற்சி எடுக்க போகிறார்கள் என்பதைத்தான் நாம் அறிந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications