அண்ணா இல்லனா அண்ணாமலை ஆடு மேய்க்கனும்.. ஐபிஎஸ் ஆனது அண்ணா,பெரியார் போட்ட பிச்சை -ஆர்.எஸ்.பாரதி போடு
சென்னை: ஆடு மேய்த்துக்கொண்டு இருந்த அண்ணாமலை ஐ.பி.எஸ். அதிகாரியானது அண்ணாவும், பெரியாரும் போட்ட பிச்சை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்து உள்ளார்.
தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளும் "சமூகநீதி நாளாக" கடைபிடிக்கப்படும் என்றும்; அன்றைய தினம் "சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும்" என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதற்கேற்ப தந்தை பெரியார் பிறந்த நாளான இன்று காலை 10.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அறிஞர் அண்ணா - கருணாநிதி சிலை முன்பு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் "சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு" நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டார்கள்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, "அண்ணாமலைக்கு அரசியலே தெரியவில்லை. ஒரு பழமொழி கிராமத்தில் சொல்வார்கள். 'கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.' என்று. அதுபோல அண்ணாவுடைய பெருமை அண்ணாமலைக்கு தெரிவதற்கு நியாயமில்லை.
அவர் கொஞ்சம் மரியாதையாக பேசுவது இனி நல்லது. காரணம் திமுகவும் தமிழ்நாடு மக்களும் அண்ணாவை பற்றியும் பெரியாரை பற்றியும் எவன் பேசினாலும் அதை தாங்கிக் கொள்ளவோ, அனுமதிக்கவோ தயாராக இல்லை. இதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். இன்று பேசி இருக்கும்போதுகூட அண்ணாதுரை என்று அவர் சொல்கிறார்.
தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அண்ணா மறைந்த நாள் முதல் அண்ணா என்றுதான் அவரை எல்லோரும் அழைக்கிறார்கள். அவரைவிட வயதில் மூத்தவர்கள் கூட அண்ணா என்றுதான் அழைக்கிறார்கள். ஆனால், நேற்று பிறந்த அண்ணாமலை, நேற்று அரசியலுக்கு வந்த இந்த அண்ணாமலை அண்ணாதுரை என்று ஆணவமாக அழைக்கிறார்.
அழிவு ரொம்ப நாளில் இல்லை. நெருங்கிக்கொண்டு இருக்கிறது. அண்ணாவை பற்றி யார் இழிவாக பேசினாலும் அவர்களுக்கு.. தவறான புள்ளி விபரங்களை எல்லாம் அண்ணா பற்றி சொல்கிறார். 1956 ல் அண்ணா பேசியதாக சொல்கிறார். அண்ணாமலைக்கு ஒன்றை தெரிவித்துக்கொள்கிறேன்.
1949 லேயே திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கி தனிப் பெரும் தலைவராக தமிழ்நாட்டில் பவனி வந்தவர். 1949 லேயே கட்சி தொடங்கியவர். அவரை பார்த்து இப்படி கேவலமாக பேசிக்கொண்டு இருக்கிறார். அண்ணா மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால் அண்ணாமலை ஆடுதான் மேய்த்துக்கொண்டு இருக்க வேண்டும்.
ஆடு மேய்க்கிற அண்ணாமலை ஐபிஎஸ் ஆனது அண்ணா போட்ட பிச்சை. பெரியார் போட்ட பிச்சை என்பதை நான் இன்னும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக்கொள்கிறேன். இல்லை என்று சொன்னால் அண்ணாமலையின் நிலைமை என்னவாக இருந்திருக்கும். அண்ணாமலைக்கு தெரியாது.
அண்ணாமலையி பாட்டனார் இருந்திருந்தால் அண்ணா உடைய பெருமையை சொல்வார். அவர் இப்படி பேசுவதை நிறுத்துக்கொள்ளாவிட்டால், தமிழ்நாடு மக்கள் எழுந்தால், அவர் எங்கு போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்தாரோ அந்த கர்நாடகாவுக்கு மிக விரைவிலேயே ஓடிப்போகிற நிலைமை வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்." என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி












Click it and Unblock the Notifications