தமிழகத்தில் பாஜக 3வது இடத்திற்கு வந்தால் கட்சியை கலைக்கிறேன்! தொடையை தட்டி அண்ணாமலைக்கு சீமான் சவால்
சென்னை: ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு பாஜக தனித்து போட்டியிட்டு என்னை விட அதிக வாக்குகள் பெற்றால் நான் கட்சியை கலைத்து விடுகிறேன் என சீமான் ஆவேசமாக கூறினார். தமிழ்நாட்டில் பாஜக 3 வது பெரிய கட்சியாக உருவாகும் என்று அண்ணாமலை கூறிய நிலையில் சீமான் இவ்வாறு பேசியுள்ளார்.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதல் 5 கட்ட தேர்தல் முடிந்துவிட்டது. இன்னும் 2 கட்ட தேர்தல்கள் நடக்க இருக்கிறது. வரும் ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் முதல் கட்டமாகவே 39 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டன. இந்த நிலையில் தான் தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை பாஜக தெற்கில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் பாஜக 3 வது பெரிய கட்சியாக உருவாகும் என்று பேசினார்.
இந்த நிலையில், தென் மாநிலத்தில், குறிப்பாக தமிழ்நாட்டில் பாஜக 3 வது பெரிய கட்சியாக உருவாகும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சீமான் பதில் அளித்து கூறியதாவது:-
தனித்து நின்று போட்டியிட்டு ஆண் மகனாக காட்டு. தனித்து போட்டியிடனும்.. தனியாக நின்று.., ஜூன் 4 க்கு பிறகு தனியாக நின்று பாஜக பெற்ற வாக்குகள் எவ்வளவு? என்னை தாண்டி இருந்தது என்றால் நான் கட்சியை கலைத்துவிட்டு சென்றுவிடுகிறேன் என்று தொடையில் தட்டி சீமான் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "தனித்து போட்டியிட வேண்டும். யார் 3வது கட்சி, பெரிய கட்சி என்று தெரிந்துவிடும். கூட்டணி வைத்து போட்டியிட கூடாது. ஒத்தைக்கு ஒத்தையாக தனித்து போட்டியிடனும். சிங்கம் மாறி நிற்க வேண்டும். தனித்து சண்டை போட வேண்டும். அவன் தான் வீரன். அவன் தான் ஆண்மகன்.
அவங்க காவி உடை போடுவாங்க.. இவங்க கருப்பு உடை போடுவாங்க.. நாங்க இரண்டையும் கிழிச்சி தூர போடுவோம். இது ரொம்ப நாள் இல்லை அல்லவா.. அதிகாரத்தில் இருக்கின்ற காரணத்தால் இப்படி செய்யுறாங்க.. எங்க வள்ளுவனுக்கும் இந்தியனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு. எங்க தாத்தா காலத்தில் இந்து என்ற மதம் இருந்ததா?.. அதிகாரத்தில் இருக்கிறதால் இப்படி எல்லாம் சேட்டை செய்றாங்க..
முல்லை பெரியாறு அணை உறுதித்தன்மையோடு இருக்கிறது என்று ஆய்வு முடிவுகள் சொன்ன பிறகு அணை கட்ட கூடாது. அணை பலவீனமாக இருக்கிறது என்றால், அதை இடிக்காமல் அணைக்கு உள்ளேயே ஒரு அணையை கட்ட வேண்டியது தானே.. முல்லை பெரியாறு அணையை ஏன் இடிக்க வேண்டும். அதை ஏன் இடித்துவிட்டு கட்ட வேண்டும். அதை இடிக்காமலேயே உள்ளே ஒரு அணையை கட்டலாமே?..
அரசியல் பேசுங்கள்.. மனித நேயம் பேசுங்க.. சந்திர மண்டலத்தில் காற்று இருக்கான்னு பார்க்கிறீங்க.. இங்க இருக்கின்ற காற்றை சுத்தப்படுத்த முடியல.. உங்க மனநிலை என்ன?.. இருக்கின்ற பூமியை காப்பாற்ற முடியல. கோடிக் கணக்காக ரூபாய் செலவழித்து, எதுக்கு சந்திரன் மண்டலத்துக்கு ஆள் அனுப்புறேன்னு சொல்றீங்க.. இதில் இருந்தே தெரியவில்லையா?. அவர்கள் எல்லாம் மன நோயாளிகள்.. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications