காங்கிரஸ் போனால்.. பிளான் பி.. ஸ்டாலின் கையில் எடுத்த.. பிரம்மாஸ்திரம்.. உள்ளே வரும் 2 பேர்!
சென்னை: காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விஜய்க்கு ஆதரவு அளித்து வருவது திமுக தரப்பை கடுப்பாக்கி உள்ளதாம். முக்கியமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்பி ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக கருத்து சொல்லி இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஜனநாயகன் ரிலீஸ் விவகாரத்தில் காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளது. திரையுலகமே பெரிதாக விஜயை ஆதரிக்காத நிலையில்.. காங்கிரஸ் இதில் விஜய்க்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளது. நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பிரயோகம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்துகொள்ளக்கூடியவை என்றாலும், ஒரு கலைஞனின் படைப்பை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

அரசியல் ஆதாயங்களுக்காகத் திரைப்படங்களுக்குத் தணிக்கை செய்வதைத் தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கலையும், பொழுதுபோக்கும் அரசியல் போர்களில் காய்களாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அதிகாரிகளுக்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக விஜய்-ன் திரைப்படம் தாமதங்களைச் சந்தித்து வருகிறது, இது தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் அநீதியானது. கலையிலிருந்து அரசியலை விலக்கி வைப்போம், படைப்புச் சுதந்திரத்தை மதிப்போம்.
காங்கிரஸ் விஜய் ஆதரவு
மோடி அவர்களே, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு என்ற கூற்றை நிரூபியுங்கள். உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று கூறி உள்ளது.
முக்கியமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்பி ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக கருத்து சொல்லி இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்தி செய்துள்ள போஸ்டில், ஜனநாயகன் திரைப்படத்தை தடுப்பதற்கான தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் முயற்சி, தமிழ் கலாச்சாரத்தின் மீது நடத்தப்படும் ஒரு தாக்குதலாகும். மோடி அவர்களே, தமிழ் மக்களின் குரலை ஒடுக்குவதில் நீங்கள் ஒருபோதும் வெற்றிப்பெற மாட்டீர்கள், என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார்
ஸ்டாலின் கோபம்
காங்கிரசின் இந்த தொடர் நிலைப்பாடுகள் தொடர்பாக டெல்லி தரப்பிடம்.. முக்கியமாக டெல்லி தலைகளுடன் புகார் அளிக்க திமுக முடிவு செய்துள்ளதாம். ஏற்கனவே கூட்டணி பேச்சுவார்த்தையில் திமுக - காங்கிரஸ் இடையே மோதல் உள்ளது. காங்கிரஸ் 60 இடங்களை கேட்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸின் இந்த கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தாலும், எவ்வித உறுதியையும் அளிக்கவில்லை. திமுக தனது தொகுதிப் பங்கீட்டுக் குழுவை அமைத்த பின்னரே பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார். சரியான நேரத்தில் இவை நடக்கும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணி உறுதியாக இருப்பதாக இரு கட்சிகளும் பொதுவெளியில் தெரிவித்தாலும், அதிக இடங்கள், அதிகாரப் பங்கீடு கோரிக்கைகள் பேச்சுவார்த்தைகளை சவாலாக அமையலாம். தமிழகத்தின் பெரிய கூட்டணி முக்கியமான தேர்தலை எதிர்கொள்ள இருப்பதால், வரும் வாரங்களில் தீவிரமான பேரம்பேசல்கள் நடக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
திமுக திட்டம் - பிளான் பி
காங்கிரசின் போக்கு சரியில்லாத காரணத்தால் திமுக பிளான் பி ஒன்றை போட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி காங்கிரஸ் இல்லாமல் தேமுதிக, பாமகவின் ராமதாஸ் பிரிவு அடங்கிய புதிய கூட்டணியை கொண்டு வர ஸ்டாலின் திட்டமிட்டு வருகிறாராம். தேமுதிகவிடம் 4-5 சதவீதம் வாக்குகள் உள்ளன. பாமக ராமதாஸ் அணி குறைந்தபட்சம் 5 சதவிகிதம் வாக்குகளை பெறும். இதை வைத்து காங்கிரஸ் சென்றால் கூட இழப்பை சமாளிக்கலாம் என்று திமுக திட்டமிட்டு உள்ளதாம்.
காங்கிரஸ் ஒருவேளை ரொம்ப முரண்டு பிடித்தால் திமுகவின் திட்டம் இதுதான் என்று கூறப்படுகிறது .












Click it and Unblock the Notifications