திமுக அரசு மாநில சுயாட்சியில் உறுதியாக உள்ளதா? கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வாங்க -சகாயம்
சென்னை: திமுக அரசு மாநில சுயாட்சியில் உறுதியாக இருந்தால் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய அவர், "நான் 2013 ஆம் ஆண்டு கோ ஆப் டெக்ஸ் மேலாண் இயக்குநராக இருந்தேன்.
அப்போது டிசம்பரில் எளிய நெசவாளர்களுடைய வாழ்வை மேம்படுத்தவும், தமிழர்களுடைய அழகிய ஆடை மரபாக இருக்கக்கூடிய வேட்டி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக முதன்முறையாக நாங்கள் கோ ஆப் டெக்சில் முடிவெடுத்தோம்.

வேட்டி தினம்
2014 ஜனவரியில் பொங்கலுக்கு முன்பாக ஏதாவது ஒருநாளில் வேட்டி தினம் கொண்டாட வேண்டும் என நான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் கடிதம் எழுதினேன். 70-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வேட்டி தினம் கொண்டாடினார்கள். மாவட்ட ஆட்சியர்களுக்கும் இதேபோல் நான் கடிதம் எழுதினேன். அவர்களும் அணிந்து வந்தார்கள்.

தேசிய கல்விக்கொள்கை
தேசிய கல்விக்கொள்கை, தமிழக கல்விக்கொள்கை பற்றியெல்லாம் ஆய்ந்திட நான் விரும்பவில்லை. ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள நான் விரும்புகிறேன். 1970 களுடைய மத்தியில் அன்று நெருக்கடி நிலையின் காலக்கட்டத்தில்தான் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. என்னை பொறுத்தவரை கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

திமுக அரசிடம் கோரிக்கை
இன்றை திமுக அரசு உண்மையிலேயே மாநில சுயாட்சியில் உறுதியாக இருக்கிறது என்று நம்பினால் இந்த கல்வியை மாநில அரசின் பட்டியலுக்கு கொண்டுவர வெகு மக்கள் இயக்கத்தை நடத்த வேண்டும். அனைத்து முயற்சிகளையும் அது மேற்கொள்ள வேண்டும். எனவே தேசிய கல்விக்கொள்கை என்ற கேள்விக்கே இடமில்லை.

கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும்
இது ஒரு துணைக்கண்டம். அது பல்வேறு வரலாறு, கலாச்சார, பண்பாடு, மொழி, இனம் பின்புலத்தை கொண்ட தேசிய இனங்கள் வாழக்கூடிய ஒரு தேசத்தில் கல்வியை பொறுத்தவரை அந்தந்த தேசிய இனங்கள் நிரம்பி வாழக்கூடிய மாநிலங்களின் முடிவுக்கு விட்டுவிடுவதுதான் சரியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்." என்றார்.
-
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத் -
அப்போ நடிகர்.. இப்போ முதல்வர்! விஜய் மாணவர்கள் சந்திப்பு எப்போ? மாணவர்களை குஷிப்படுத்தும் அறிவிப்பு!












Click it and Unblock the Notifications