சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கியரை மாற்ற தயாராகிறதா அதிமுக.. அந்த 3 பேர் யார்.. இவர்களுக்கு நடுவில் விஜயதாரணி.. செம எதிர்பார்ப்பு

அடுத்த எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: எக்ஸிட் போல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்த எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற விவகாரம் அதிமுகவுக்குள் எழுந்து வருகிறதாம்.

இதுவரை தேர்தலுக்கு முந்தைய மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளின்படி, திமுகவுக்கே மெஜாரிட்டி என்ற முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன.. பலதரப்பட்ட நிறுவனங்கள் நடத்திய எக்ஸிட் போல்களின் அடிப்படையில் பார்த்தாலும் அதிமுக 100-ஐ எங்குமே தாண்டவில்லை.

அந்த வகையில், அதிமுக 2-ம் இடத்துக்கே வர வாய்ப்புள்ளது.. அப்படி திமுக ஆட்சி அமைத்தால், எதிர்க்கட்சி தலைவராக யார் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு துவங்கி உள்ளது.. வழக்கமாக 40 முதல் 60 சீட் வரை ஜெயித்து விட்டாலே, யாராக இருந்தாலும் அவர்கள் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுவிடுவார்கள்.. அந்த வகையில் அதிமுகவே அந்த அந்தஸ்தை பெறும்.

 தூள் தூளாக சிதறிய தூள் தூளாக சிதறிய "கணக்கு".. செம டென்ஷனில் எடப்பாடியார்.. எனினும் விடாத கடைசி நம்பிக்கை..!

 எதிர்க்கட்சி தலைவர்

எதிர்க்கட்சி தலைவர்

ஆனால், ஓபிஎஸ் - இபிஎஸ் என்ற இரு பிம்பங்கள் உள்ள நிலையில், இவர்களில் எதிர்க்கட்சி தலைவர் என்ற கேள்வி எழுகிறது.. ஒருவேளை தொகுதியில் ஓபிஎஸ் வெற்றி பெற்றுவிட்டால், அவர்தான் எதிர்க்கட்சி தலைவராக இருப்பார் என்று சொல்கிறார்கள்..

 வெற்றி

வெற்றி

மற்றொரு பக்கம், ஓபிஎஸ் - இபிஎஸ்ஸில், யாருடைய ஆதரவாளர்கள் நிறைய வெற்றி பெறுகிறார்களோ, அவர்களுக்கே அந்த பொறுப்பு வந்து சேரலாம் என்றும் சொல்கிறார்கள். அதாவது, தென்மண்டலங்களைவிட, கொங்கு மண்டலத்தில் எடப்பாடியார் ஆதரவாளர்களுக்கு நிறைய வெற்றி கிடைத்துவிட்டால், எடப்பாடியாரே எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடும் என்கிறார்கள்.

 செங்கோட்டையன்

செங்கோட்டையன்

இப்படி ஒரு கணக்கு ஓடிக் கொண்டிருக்கும்போது, இன்னொரு புது கணக்கு இதில் நுழைந்துள்ளது.. அதாவது மூத்த தலைவர் செங்கோட்டையன் எதிர்க்கட்சி தலைவராக வர வாய்ப்புள்ளதாம்.. இதற்கு காரணம், அன்றைய அதிமுகவில் அதிக சக்தி வாய்ந்த தலைவர் செங்கோட்டையன் ஆவார்.. தேர்தல் சமயங்களில், எப்படி கருணாநிதி அழகிரியை நம்பி தென்மண்டலத்தை தருவாரோ, அதுபோலவே ஜெயலலிதா செங்கோட்டையனை நம்பி கொங்குவை ஒப்படைப்பார்.. அந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கவர்.

கொங்கு

கொங்கு

ஆனால், எடப்பாடியார் முதல்வரான பிறகு, இந்த கொங்கு செங்கோட்டையன் வசம் இல்லை. இப்போது தேர்தல் கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்து கொண்டிருக்கின்றன.. எனவே, அதிமுக கொங்குவில் சறுக்கி வருகிறது.. இதுபோன்ற சூழலில், முக்கியமான கொங்கு நிர்வாகிகள் செங்கோட்டையனை நோக்கி நகர்வதாக கூறப்படுகிறது.. இதனால், எடப்பாடியாரைவிட செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும், இதையடுத்து, அவரே எதிர்க்கட்சி தலைவராக வாய்ப்பு என்று சொல்கிறார்கள்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

எடப்பாடியார், ஓபிஎஸ், செங்கோட்டையன் என இப்படி சாய்ஸ்கள் ஓடிக் கொண்டிருந்தால், இவைகளுக்கு நடுவில், தனக்கே அந்த எதிர்க்கட்சி தலைவர் வாய்ப்பு என்று சொல்லி வருகிறாராம் விஜயதாரணி.. அதாவது தாங்கள் போட்டியிடும் 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட்டால், காங்கிரசுக்கே அந்த வாய்ப்பு என்று நம்பிக்கையுடன் சொல்கிறாராம்.. கட்சிக்காக பல வருடம் உழைத்து வரும் விஜயதாரணிக்கு, ஒருவேளை இந்த பதவி கிடைத்தால், அதை மிக மிக திறன்படவே செய்வார் என்று பூரிப்புடன் தெரிவிக்கின்றனர் கதர் தொண்டர்கள்..!

சசிகலா

சசிகலா

ஆனால், சசிகலா என்ற ஆளுமை இருப்பதையே மறந்துவிட்டு, இப்படியெல்லாம் அதிமுக, காங்கிரஸ், தரப்பு விவாதங்கள் கட்சிக்குள் ஓடிக் கொண்டிருப்பதை தொண்டர்கள் தேமேவென்று பார்த்து வருகின்றனர்.. எனினும், அதிமுகவின் ரிசல்ட் எப்படி வருகிறது என்பதை பொறுத்துதான், சசிகலாவின் வருகைக்கும், இந்த விவகாரத்துக்கு ஒரு விடை கிடைக்கும்.. பார்ப்போம்..!

English summary
If DMK win, Who is the next Leader of the Opposition in TN Assembly
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X