காயத்ரி ரகுராம் திமுகவில் இணைத்துக் கொள்ளப்படுவாரா? அமைச்சர் பொன்முடி அளித்த பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை காயத்ரி ரகுராம் திமுகவில் இணைய விரும்பினால் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்ற கேள்விக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார். பெரியார், அண்ணா ஆகியோர் கொள்கையை ஏற்று யார் திமுகவிற்கு வந்தாலும், அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். காயத்ரி ரகுராமிற்கும் அதே தான் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பாஜகவில் அண்ணாமலை இணைவதற்கு முன்னதாக நடிகை காயத்ரி ரகுராம் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வந்தவர். இதனிடையே அண்ணாமலை தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக நடிகை காயத்ரி ரகுராமிற்கு பொறுப்பு வழங்கப்பட்டது.

இதனிடையே காசி தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சியின் போது காயத்ரி ரகுராம் பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சூர்யா சிவா - டெய்சி விவகாரத்தின் போது, காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி 6 மாதத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார்.

அண்ணாமலை மீது குற்றச்சாட்டு

அண்ணாமலை மீது குற்றச்சாட்டு

இதனைத் தொடர்ந்து அண்ணாமலையால் பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து நடிகை காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கடந்த சில மாதங்களாக ஹனி டிராப் குறித்து ஊடகங்களில் பேசப்படுகிறது. இது பெண்களுக்கு மிக அபாயகரமான விஷயம்.

 காயத்ரி ரகுராம் பற்றி அண்ணாமலை

காயத்ரி ரகுராம் பற்றி அண்ணாமலை

அதுமட்டுமல்லாமல் ஒரு கூட்டத்தில் 150 பேருக்கு முன்பாக "துபாய் ஹோட்டலில் என்ன செய்தார் எனத் தெரியாதா" என்று என்னை பற்றி அண்ணாமலை பேசி இருக்கிறார். இதுகுறித்து அண்ணாமலைக்கு குறுஞ்செய்தி அனுப்பிக் கேட்ட போது, அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.

காயத்ரி ரகுராமின் அடுத்த நகர்வு

காயத்ரி ரகுராமின் அடுத்த நகர்வு

அதேபோல், காயத்ரி ரகுராமின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்த கேள்விக்கு, எந்த கட்சியில் எனக்கு பாதுகாப்பு இருக்கிறதோ என்னை சுதந்திரமாக செயல்பட விடுகிறார்களோ அந்த கட்சியில் இணைந்து பணியாற்றுவேன். திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என எந்தக் கட்சி அழைத்தாலும் பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்.

பொன்முடியிடம் கேள்வி

பொன்முடியிடம் கேள்வி

இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் ஒளி அறக்கட்டளை தொடக்க விழாவில் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடியிடம், நடிகை காயத்ரி ரகுராம் திமுகவில் இணைய விரும்பினால் இணைத்துக் கொள்வீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

 பெரியார், அண்ணா கொள்கைகள்

பெரியார், அண்ணா கொள்கைகள்

அதற்கு அமைச்சர் பொன்முடி, பெரியார், அண்ணாவின் கொள்கைகளை ஏற்று பின்பற்றி யார் திமுகவிற்கு வந்தாலும் அவர்கள் தாராளமாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். காயத்ரி ரகுராமுக்கும் அதே நிலை தான். எங்கள் கொள்கைகளை பின்பற்றுவோரை திமுக தலைமை ஏற்றுக்கொள்ளும். எங்கள் முதல்வரும் ஏற்றுக்கொள்வார் என்று பதிலளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+