நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலே இருக்காது.. கொந்தளித்த சீமான்.. அவரே சொன்ன காரணம்
ஈரோடு: நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலே இருக்காது என்று சீமான் பேசினார். எங்கிருந்து வந்தது திராவிடம் என்ற சொல்?.. திராவிடம் என்றால் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார். நடிகர் விஜய் என்னை எதிர்த்து வேலை செய்தாலும் நான் விஜயை ஆதரிக்கத்தான் செய்வேன் என்றும் சீமான் கூறினார்.
ஈரோட்டில் இன்று நடைபெற்ற தமிழக பண்பாடு கண்காட்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டார். தொடந்து சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான், நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பாடலே இருக்காது என்று கூறினார். சீமான் கூறியதாவது:-

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் "திராவிடல் நல் திருநாடு" என்ற வார்த்தையை விட்டுட்டாங்க, தூக்கிட்டாங்க என்பது தானே உங்களுக்கு பிரச்சினை. அதே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஆரியங்கோல் வழக்கொழிந்து என்ற வார்த்தையை தூக்கியது யாரு?.. கனடம், தெலுங்கு, மலாயளம் உள்ளிட்ட வார்த்தைகள் அடங்கிய அந்த வரியை தூக்கியது யாரு?... திராவிடன் என்ற ஒரு சொல்லை எடுத்ததற்கே இப்படி குதிக்கிறீர்களே..
50 ஆயிரம் ஆண்டுகளுன் முன் தோன்றிய என் தாய்மொழி தமிழை கொன்று சமாதி கட்டி வைத்திருக்கிறீர்களே.. கொத்துக்கொத்தாக, லட்சக்கணக்கான என் இன மக்கள் சாவும் போது கொதித்து வராத கோவம்.. ஆந்திர காடுகளில் எங்களை சுட்டுக்கொல்லும் போது வராத கோபம்.. அன்னை தமிழ் மொழி செத்துவிழும் போது வராத கோபம் இப்போது ஏன்?.. இவ்வளவு கோபப்படுறீங்க.. இதே ஆளுநர் 100 ரூபாய் வெளியிடும் போது கட்டிப்பிடித்து அணைத்துக்கொண்டீர்கள்.
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பாடலே இருக்காது. என்ன பண்ணுவீங்க. இது எங்க நாடு. எங்கே இருக்கிறது திராவிடம்?.. எங்கிருந்து வந்தது திராவிடம் என்ற சொல்?.. திராவிடம் என்றால் என்ன? கேரளாவில் பஞ்ச திராவிடர் மாநாடு நடந்ததா இல்லையா?.. அதில் ஏன் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பங்கேற்க வேண்டும். அவர் ஏன் ராகுல் டிராவிட் என அழைக்கப்படுகிறார். நான் எப்படி திராவிடர் ஆனேன்.. என்னது இது? திடீர்ன்னு நீங்க இவ்வளவு கோபப்படுறீங்க.. திராவிடம் என்பது சமஸ்கிருதம் சொல்.. மாடல் என்பது ஆங்கில சொல். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த சீமான் கூறியதாவது:- சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பை உருவாக்க 2500 கோடி ரூபாய் தான் செல்வாகும். ஆனால் இவர்கள் ஆண்டுதோறும் இதற்கு என்று நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்கள். சேலத்தில் திமுக மாநாட்டின் போது கேட்கப்படாத கேள்விகள் தம்பி விஜய் மாநாட்டில் கேட்கப்படுகிறது. விஜய்க்கு மட்டும் இவ்வளவு இடையூறு செய்வது எதற்காக?..
யானை சின்னத்தை அகற்றக்கோரி பகுஜன் சமாஜ் கட்சி நோட்டீஸ் அனுப்பியதை எல்லாம் விஜய் கண்டுகொள்ளமாட்டார். யானை என்ன ஒரு கட்சிக்கு மட்டும் தான் சொந்தமா?.. தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக இப்படி விஜயை இடையூறு செய்கிறார்கள்.. அவ்வளவு தான். நடிகர் விஜய் என்னை எதிர்த்து வேலை செய்தாலும் நான் விஜயை ஆதரிக்கத்தான் செய்வேன். ஏனென்றால் விஜய் என்னுடைய தம்பி. இவ்வாறு சீமான் கூறினார்.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications